உள்ளடக்கத்துக்குச் செல்

அருணாச்சலப் பிரதேச காவ் தை (காம்தி அரிசி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணாச்சலப் பிரதேச காவ் தை (காம்தி அரிசி)
வேறு பெயர்கள்காவ் தை அரிசி அல்லது காம்தி அரிசி
குறிப்புஅருணாசலப் பிரதேசம் நறுமண அரிசி
வகைநறுமண அரிசி
இடம்நம்சாய், சங்லங், லோஹித் மாவட்டங்கள்
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது3 அக்டோபர் 2023
அதிகாரப்பூர்வ இணையதளம்ipindia.gov.in

அருணாச்சலப் பிரதேசம் காவ் தை (காம்தி நெல்) என்பது இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் முக்கியமாக விளைவிக்கப்படும் பாசுமதி அல்லாத, குறுகிய தடித்த நறுமண பூர்வீக நெல் வகையாகும். இது நாம்சாய், சங்லங், லோஹித் மாவட்டங்களில் உள்ள காம்ப்தி பழங்குடி விவசாயிகளால் பொதுவாகவும் பாரம்பரியமாகவும் பரவலாகப் பயிரிடப்படும் ஒரு பயிராகும்.[1] இதன் இந்தியப் புவிசார் குறியீடு குறியீட்டின் கீழ், "அருணாச்சலப் பிரதேசம் காவ் தை (காம்தி அரிசி)" என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

பெயர்

[தொகு]

"அருணாச்சலப் பிரதேசம் காவ் தை (காம்தி நெல்)" என்ற பெயர் சில சொற்களால் ஆனது. "அருணாச்சலப் பிரதேசம்" என்பது இந்த நெல் பயிரிடப்படும் மாநிலத்தைக் குறிக்கிறது. "காவ்" அல்லது "காவோ" என்பது உள்ளூர் காம்தி மொழியில் அரிசியைக் குறிக்கிறது. "தை" என்பது தாய் இனக்குழுவைக் குறிக்கிறது. மேலும் தை என்பது சொர்க்கத்தையும் குறிக்கிறது. மேலும் "காம்தி" என்பது காம்தி இன பழங்குடியினரைக் குறிக்கிறது. இந்த அரிசி வகையின் முதன்மை விவசாயிகள், இவர்கள் தங்களை தை காம்தி என்று அழைக்கிறார்கள்.[2][3][4][5][6] இது வெறுமனே காவ் தை அரிசி அல்லது காம்தி அரிசி என்றும் அழைக்கப்படுகிறது.[7]

விளக்கம்

[தொகு]

அருணாச்சலப் பிரதேசத்தின் நாம்சாய் பகுதியில் வசிக்கும் காம்தி விவசாயிகள் பாரம்பரியமாகப் பயிர்களைப் பயிரிடுகின்றனர்.[7] "காம்தி" என்றால் "தங்கம் நிறைந்த நிலம்" என்று பொருள்.[8] இவர்களின் முக்கிய உணவில் மெல்லும், ஒட்டும் காவ் தை அரிசியும் அடங்கும். இது வலுவான நறுமணம், தடித்த அளவு, பல மருத்துவப் பண்புகளுடன் மிகவும் ஆரோக்கியமானது.[9] நெல் சாகுபடிக்கான நீர் ஆதாரங்கள் பாசனம் அல்லது மழையை நம்பி வளரும் நெல் சூழல்களை உருவாக்குகின்றன.[10] இந்த அரிசியை ஒரு காலத்தில் இவர்களின் மூதாதையர்கள் போர்கள் மற்றும் காட்டுப் பயணங்களின் போது பாதுகாப்பு அங்கியாகப் பயன்படுத்தினர். இது இவர்களுக்குப் பாதுகாப்பினையும் வாழ்வாதாரத்தினையும் வழங்குகிறது.

உணவு வகைகள்

[தொகு]

காம்தி மக்கள் இலைகளில் சுற்றப்பட்டு வேகவைத்த அரிசி உணவினையும், வேகவைத்த பச்சை இலை காய்கறிகளுடன் கலந்த அரிசியின் எளிய உணவையும் விரும்புகிறார்கள்.[11] காம்தி அரிசி உணவு வகைகளில் டோங்டெப், அரைத்த அரிசியால் செய்யப்பட்ட உப்பட்டு, கவ்லாம், வேகவைத்த அரிசியுடன் எள் கலந்தும், பாசா, சிறப்பு மூலிகைகள் கொண்ட ஆற்று மீன் சூப், அத்துடன் பா-சோம், நம்-சோம் ஆகியவை அடங்கும்.[3]

புவிசார் குறியீடு

[தொகு]

காம்தி அரிசிக்கு இந்திய மத்திய அரசு புவிசார் குறியீட்டினை வழங்கியுள்ளது. இந்த தகுதி 3 அக்டோபர் 2023 அன்று வழங்கப்பட்ட தகுதி திசம்பர் 12, 2031 வரை செல்லுபடியாகும்.[12]

லோகித்தைச் சேர்ந்த நம்சாய் கரிம மசாலா விவசாய உற்பத்தியாளர் நிறுவனம், அருணாச்சலப் பிரதேச காவ் தை (காம்தி அரிசி) அரிசிக்கான புவிசார் குறியீட்டுப் பதிவை முன்மொழிந்தது. திசம்பர் 2021-இல் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்த பிறகு, 2023ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டுப் பதிவு அலுவலகத்தினால் இந்த அரிசிக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனால் "அருணாச்சலப் பிரதேச காவ் தை (காம்தி அரிசி)" என்ற பெயர் இப்பகுதியில் விளையும் அரிசிக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்பட்டது. [13] இதனால் இது அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து புவிசார் குறியீடு பெற்ற முதல் அரிசி வகையாகவும், அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து புவிசார் குறியீடு பெற்ற 3வது பொருளாகவும் ஆனது.[14] புவிசார் குறியீடு அரிசியைச் சட்டவிரோத விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இதற்குச் சட்டப் பாதுகாப்பையும் தனித்துவமான அடையாளத்தையும் இந்த புவிசார் குறியீட்டுத் தகுதி வழங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Misra, Kamal K. (1994). Tribal Elites and Social Transformation (in ஆங்கிலம்). Inter-India Publications. ISBN 978-81-210-0319-3. Retrieved 22 December 2024.
  2. Sarkar, Jayanta (1987). Society, Culture, and Ecological Adaptation Among Three Tribes of Arunachal Pradesh (in ஆங்கிலம்). Anthropological Survey of India, Ministry of Human Resource Development, Department of Culture, Government of India. Retrieved 22 December 2024.
  3. 1 2 "TAI-KHAMPTI | District Namsai, Government of Arunachal Pradesh, India | India". Govt. of Arunachal Pradesh. Retrieved 22 December 2024.
  4. Behera, Maguni Charan (3 September 2024). The Routledge Handbook of Tribe and Religions in India: Contemporary Readings on Spirituality, Belief and Identity (in ஆங்கிலம்). Taylor & Francis. ISBN 978-1-040-11433-9. Retrieved 22 December 2024.
  5. Diller, Anthony; Edmondson, Jerry; Luo, Yongxian (30 November 2004). The Tai-Kadai Languages (in ஆங்கிலம்). Routledge. ISBN 978-1-135-79116-2. Retrieved 22 December 2024.
  6. Gogoi, Pushpa (1996). Tai of North East India (in ஆங்கிலம்). Chumphra Printers and Publishers. Retrieved 22 December 2024.
  7. 1 2 Experts, Disha. 15 Practice Sets for IB ACIO Intelligence Bureau Assistant Central Intelligence Officer Grade-II/ Executive (Tier-I) Exam 3rd Edition (in ஆங்கிலம்). Disha Publications. ISBN 978-93-5564-757-3. Retrieved 22 December 2024.
  8. Bisht, Narendra S.; Bankoti, T. S. (2004). Encyclopaedic Ethnography of the Himalayan Tribes (in ஆங்கிலம்). Global Vision. ISBN 978-81-87746-91-1. Retrieved 22 December 2024.
  9. Gogoi, Lila (1971). The Tai Khamtis (in ஆங்கிலம்). NEFA, Chowkhamoon Gohain (Namsoom). Retrieved 22 December 2024.
  10. Sarkar, Jayanta (1987). Society, Culture, and Ecological Adaptation Among Three Tribes of Arunachal Pradesh (in ஆங்கிலம்). Anthropological Survey of India, Ministry of Human Resource Development, Department of Culture, Government of India. Retrieved 22 December 2024.
  11. Brien, Charmaine O' (15 December 2013). The Penguin Food Guide to India (in ஆங்கிலம்). Penguin UK. ISBN 978-93-5118-575-8. Retrieved 22 December 2024.
  12. "18 lesser-known GI-certified products of Arunachal Pradesh". The Times of India. 3 March 2024. https://timesofindia.indiatimes.com/etimes/trending/18-lesser-known-gi-certified-products-of-arunachal-pradesh/photostory/108183979.cms.
  13. "Arunachal awarded GI tag for Tawang's Yak churpi, Khamti rice, Tangsa textile: Know about their speciality". www.indiatvnews.com. 4 October 2023. https://www.indiatvnews.com/news/india/arunachal-awarded-gi-tag-for-tawang-yak-churpi-khamti-rice-tangsa-textile-know-about-their-speciality-2023-10-04-896198.
  14. "Three more products from Arunachal Pradesh get GI tag". Deccan Herald. https://www.deccanherald.com/india/arunachal-pradesh/three-more-products-from-arunachal-pradesh-get-gi-tag-2836500.