உள்ளடக்கத்துக்குச் செல்

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2020 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்கப் பெறுகிறது. விருது பெறுபவர்களுக்கு (இதற்கு முன் ஒரு இலட்சம் ரூபாயாக இருந்தது) இரண்டு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 முனைவர் ஊரன் அடிகள் 2020
2 முனைவர் இரா. சஞ்சீவிராயர் 2021
3 முனைவர் ப. சரவணன் 2022
4 முனைவர் பா.அருள்செல்வி [1], [2] 2023

மேற்கோள்கள்

[தொகு]
  1. "26 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்". தினமணி. 2025-01-08. Retrieved 2025-01-08.
  2. "பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 26 பேருக்கு விருதுகள்: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்". மக்கள்குரல். 2025-01-08. Retrieved 2025-01-08.

புற இணைப்புகள்

[தொகு]

அருட்பெருஞ்சோதி வள்ளாலார் விருது பெற்றோர் பட்டியல் (தமிழ் வளர்ச்சித்துறை வலைத்தளம்)