உள்ளடக்கத்துக்குச் செல்

அருச்சுனோ-வெலிராங் மலை

ஆள்கூறுகள்: 07°45′52″S 112°35′22″E / 7.76444°S 112.58944°E / -7.76444; 112.58944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருச்சுனோ-வெலிராங் மலை
Mount Arjuno-Welirang
Gunung Arjuno-Welirang
பெனாங்குங்கான் மலையில் இருந்து காணப்படும் அருச்சுனோ-வெலிராங் மலை
உயர்ந்த புள்ளி
உயரம்3,339 m (10,955 அடி)(அருச்சுனோ)[1]
3,156 m (10,354 அடி) (வெலிராங்)
புடைப்பு2,812 m (9,226 அடி)
தகுதி: 124
பட்டியல்கள்அதி கூர்மை
ரீபு மலைகள்
ஆள்கூறு07°45′52″S 112°35′22″E / 7.76444°S 112.58944°E / -7.76444; 112.58944[1]
புவியியல்
அருச்சுனோ-வெலிராங் மலை is located in சாவகம்
அருச்சுனோ-வெலிராங் மலை
அருச்சுனோ-வெலிராங் மலை
நிலவியல்
மலையின் வகைசுழல் வடிவ எரிமலை
கடைசி வெடிப்புஆகத்து 1952

அருச்சுனோ-வெலிராங் மலை (ஆங்கிலம்: Mount Arjuno-Welirang; இந்தோனேசியம்: Gunung Arjuno-Welirang) என்பது இந்தோனேசியா, ஜாவா தீவு, கிழக்கு ஜாவா, தென் சுராபாயாவில் உள்ள சுழல் வடிவ எரிமலை ஆகும்.[2]

அருச்சுனோ-வெலிராங் மலை, சுராபாயாவிற்கு தெற்கே சுமார் 50 கி.மீ (31 மைல்) தொலைவிலும், மலாங்கிற்கு வடக்கே 20 கி.மீ (12 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. இது ஓர் இரட்டை எரிமலை; இரட்டையர்கள் அருச்சுனோ - வெலிராங் என அழைக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் ஒரு சுழல் வடிவ எரிமலை உள்ளது; மேலும் அந்த எரிமலையில் சுமார் 10 எரிமலைக் கூம்புகள் உள்ளன.[1] அவை அருச்சுனோவிற்கும் வெலிராங்கிற்கும் இடையிலான 6 கி.மீ. நேர்க்கோட்டில் அமைந்துள்ளன.

பொது

[தொகு]

அருச்சுனோ-வெலிராங் எரிமலை வளாகம் பழைய இரண்டு எரிமலைகளில் அமைந்துள்ளது; கிழக்கே ரிங்கிட் மலை (Mount Ringgit) மற்றும் தெற்கே லிந்திங் மலை (Mount Linting). 'அருச்சுனோ-வெலிராங் மலைச் சிகரத்தில் தாவரங்கள் இல்லை. வெலிராங் மலையின் பல இடங்களில் கந்தகப் படிவுகளைக் கொண்ட ஆவிப்பிளப்பு (Fumarole) பகுதிகள் காணப்படுகின்றன.[1][3]

1950-ஆம் ஆண்டு ஏற்பட்ட எரிமலை வெடிப்பு; வெடிப்புத் தன்மையின் அடிப்படையில் எவெகு = 2 என அளவிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1952-இல் மற்றொரு வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிப்பு எவெகு = 0 என அளவிடப்பட்டது.

சொல் பிறப்பு

[தொகு]

அருச்சுனோ என்ற பெயர் மகாபாரத இதிகாசத்தில் வரும் நாயகனான அருச்சுனனின் ஜாவானிய மொழிபெயர்ப்பாகும். வெலிராங் என்பது கந்தகத்தைக் குறிக்கும் ஜாவானிய சொல்லாகும்.

காட்சியகம்

[தொகு]

அருச்சுனோ-வெலிராங் மலையின் காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Arjuno-Welirang". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம்.
  2. "This peak is the highest point of the enormous Arjuno-Welirang range, located just 50 kilometres south of Indonesia's second largest city, Surabaya. The lower Welirang peak is active and still mined by local sulphur collectors". 3 July 2016. Retrieved 27 February 2025.
  3. "Arjuno-Welirang: Situated in East Java, Indonesia, Mount Arjuno-Welirang is a twin-peak volcano. Whilst Arjuno is dormant, Welirang is still considered active". summits.com (in ஆங்கிலம்). Retrieved 27 February 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருச்சுனோ-வெலிராங்_மலை&oldid=4216672" இலிருந்து மீள்விக்கப்பட்டது