உள்ளடக்கத்துக்குச் செல்

அருகபுரா மலை

ஆள்கூறுகள்: 7°58′S 113°34′E / 7.97°S 113.57°E / -7.97; 113.57
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருகபுரா மலை
Mount Iyang-Argapura
Gunung Argapura
இயாங்-அர்காபுரா வளாகம்
உயர்ந்த புள்ளி
உயரம்3,088 m (10,131 அடி)[1]
புடைப்பு2,745 m (9,006 அடி)[2]
பட்டியல்கள்அதி கூர்மைச் சிகரம்
ரீபு மலைகள்
ஆள்கூறு7°58′S 113°34′E / 7.97°S 113.57°E / -7.97; 113.57
புவியியல்
நிலவியல்
பாறையின் வயதுஹோலோசீன்
மலையின் வகைபல்வகை எரிமலை
சுழல் வடிவ எரிமலை

அருகபுரா மலை அல்லது இயாங்-அர்காபுரா (ஆங்கிலம்: Mount Argapura; Iyang-Argapura; இந்தோனேசியம்: Gunung Argapura; Gunung Argopuro) என்பது இந்தோனேசியா, ஜாவா தீவு, கிழக்கு ஜாவா இராங் மலை (Mount Raung) மற்றும் இலாமோங்கான் மலை (Mount Lamongan) ஆகிய இரு மலைகளுக்கு இடையேயான நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய எரிமலை வளாகமாகும்.

3,088 மீட்டர் உயரம் கொண்ட அர்காபுரா மலை ஒரு முன்னாள் எரிமலை; தற்போது செயல்படவில்லை. இயாங் மலைகளில் உள்ள மிக உயரமான இடமாக அருகாபுரா மலையின் சிகரம் உள்ளது. இந்த மலை இயாங் மலைகள் வனவிலங்கு சரணாலயப் பகுதியில் அமைந்துள்ளது.[3] எனவே இந்த வளாகம் பெரும்பாலும் இயாங்-அருகபுரா என்று அழைக்கப்படுகிறது.

1,000 மீட்டர் ஆழம் வரையிலான பள்ளத்தாக்குகள் கடுமையாக இயாங் எரிமலையை அருகபுரா மலையில் இருந்து பிரிக்கின்றன. கடந்த 500 ஆண்டுகளில் எந்த ஒரு வெடிப்பும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் கி.பி. 1597-இல் ஒரு வெடிப்பு ஏற்பட்டதாக ஒரு பதிவு உள்ளது.[1]

அமைவு

[தொகு]
ஜாவானிய புராணங்களில் கடல் தேவதை காஞ்சனா

அர்கோபுரோ மலையில் மரக் காடுகள் (Dipterocarp forest), உயர்நில மரக் காடுகள், மலைச் சூழற்றொகுதிகள் (Montane forest) மற்றும் முட்செடி வகை சார்ந்த காடுகள் அல்லது மலைக் காடுகள் போன்ற பகுதிகள் உள்ளன.

இந்த அருகபுரா மலை; புரோபோலிங்கோ பிராந்தியம், லுமாஜாங் பிராந்தியம், ஜெம்பர் பிராந்தியம், போண்டோவோசோ பிராந்தியம்; சிட்டுபோண்டோ பிராந்தியம் ஆகியவற்றின் குறுக்கே நீண்டுள்ள ஐயாங் மலைகளில் அமைந்துள்ளது.

கடல் தேவதை காஞ்சனா

[தொகு]

சுந்தானிய; ஜாவானிய மக்களின் புராணக் கதைகளின்படி, ரெங்கானிய மலைப் பகுதியில் (Puncak Rengganis), நிய் ரோரோ கிடுல் எனும் கடல் தேவதையின் தங்கை இரங்கா தேவி (Dewi Rengganis) வாழ்ந்து வந்ததாக அறியப்படுகிறது.

நிய் ரோரோ கிடுல் (Nyi Roro Kidul; பாலி மொழி: ᬜᬶᬭᭀᬭᭀᬓᬶᬤᬸᬮ᭄; சுண்டா மொழி: ᮑᮤ ᮛᮛ ᮊᮤᮓᮥᮜ᮪)[4] என்பவர் இந்தோனேசிய நாட்டுப்புறக் கதைகளில் இருந்து வந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நபர் ஆவார். இவர் ஜாவானியப் புராணங்களில் கடல் தேவதை காஞ்சனா (Kanjeng Ratu Kidul) என்றும் அழைக்கப்படுகிறார்.[5]

அவர் சுண்டானிய மற்றும் ஜாவானிய புராணங்களில் இந்தியப் பெருங்கடலை ஆட்சி செய்ததாக நம்பப்படுகிறது.[6]

காட்சியகம்

[தொகு]

அருகபுரா மலையின் காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Iyang-Argapura". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம். Retrieved 2006-12-28.
  2. "Ijen". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம்.
  3. "Salinan arsip". Archived from the original on 2021-06-24. Retrieved 2017-09-06.
  4. Herman Utomo dan Silvie Utomo. 2008. Dialog dengan Alam Dewa. Jakarta: Kelompok Spiritual Universal.
  5. "5 Karakter Legenda Nyi Roro Kidul dalam Video Game Dunia". Urbandigital (in இந்தோனேஷியன்). 2018-09-14. Retrieved 2019-08-13.
  6. Jordaan, Roy E. Tara and Nyai Lara Kidul - Asian Folklore Studies, Volume 56, 1997: pp 303

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Iyang-Argapura
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அருகபுரா_மலை&oldid=4217462" இலிருந்து மீள்விக்கப்பட்டது