அரீனா சபலென்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரீனா சபலென்கா
Aryna Sabalenka
2018 விம்பிள்டன் போட்டியில் சபலென்கா
முழுப் பெயர்அரீனா சிர்கேவ்னா சபலென்கா
நாடு பெலருஸ்
வாழ்விடம்மயாமி, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
பிறப்பு5 மே 1998 (1998-05-05) (அகவை 26)[1]
மின்ஸ்க், பெலருசு
உயரம்1.82 மீ
தொழில் ஆரம்பம்2015
விளையாட்டுகள்வலக்கை
பரிசுப் பணம்US$ 20,512,563[2]
  • உலகத் தரவரிசையில் 23-ஆவது
இணையதளம்arynasabalenka.com
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்364–175 (67.53%)
பட்டங்கள்14
அதிகூடிய தரவரிசைஇல. 1 (11 செப்டம்பர் 2023)
தற்போதைய தரவரிசைஇல. 2 (6 நவம்பர் 2023)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (2023, 2024)
பிரெஞ்சு ஓப்பன்அரையிறுதி (2023)
விம்பிள்டன்அரையிறுதி (2021, 2023)
அமெரிக்க ஓப்பன்இறுதி (2023)
ஏனைய தொடர்கள்
Tour Finalsஇறுதி (2022)
ஒலிம்பிக் போட்டிகள்2R (2020)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்90–67 (57.32%)
பட்டங்கள்6
அதியுயர் தரவரிசைஇல. 1 (22 பெப்ரவரி 2021)
தற்போதைய தரவரிசைஇல. 390 (12 சூன் 2023)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (2021)
பிரெஞ்சு ஓப்பன்அரையிறுதி (2019)
விம்பிள்டன்காலிறுதி (2019)
அமெரிக்க ஓப்பன்வெ (2019)
ஏனைய இரட்டையர் தொடர்கள்
Tour FinalsRR (2019)
பெருவெற்றித் தொடர்
கலப்பு இரட்டையர் முடிவுகள்
விம்பிள்டன்2R (2019)
அணிப் போட்டிகள்
கூட்டமைப்புக் கோப்பைஇறுதி (2017), சாதனை 11–10
இற்றைப்படுத்தப்பட்டது: 27 சனவரி 2024.

அரீனா சபலென்கா (Aryna Sabalenka, பெலருசிய மொழி: Арына Сяргееўна Сабале́нка; உருசியம்: Ари́на Серге́евна Соболе́нко, பிறப்பு: 5 மே 1998) என்பவர் பெலருசிய தொழில்முறை டென்னிசு ஆட்டக்காரர் ஆவார். இவர் மகளிர் டென்னிசு சங்கத்தின் ஒற்றையர், இரட்டையர் இரண்டிலும் முன்னாள் உலக முதல்நிலை ஆட்டக்காரர் ஆவார். சபலென்கா 2023, 2024 ஆத்திரேலியத் திறந்த சுற்றுப் போட்டிகளில் இரண்டு ஒற்றையர் பட்டங்களையும், 2019 அமெரிக்க திறந்த சுற்று, 2021 ஆத்திரேலிய திறந்த சுற்று இரண்டு இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ளார், இரண்டிலும் எலிசு மெர்ட்டென்சுடன் கூட்டு சேர்ந்து விளையாடினார். சபலென்கா ஒற்றையர் பிரிவில் 14, இரட்டையர் பிரிவில் ஆறு என மொத்தம் 20 தொழில்-முறைப் பட்டங்களை வென்றுள்ளார்.

2017 ஆம் ஆண்டு வரை சபலென்கா டென்னிசு உலகில் அறியப்படாதவாக இருந்தார். 2017 இல் பெலருசு கோப்பை அணியில் அலியாக்சாண்ட்ரா சாசுனோவிச்சுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்,[3] அந்த நேரத்தில் இருவரும் தரவரிசையில் முதல் 75 க்கு வெளியே இருந்தனர். 2018, 2019 இரண்டிலும் ஒற்றையர் பிரிவில் உலகின் 11 வது இடத்தைப் பிடித்தார்.[4] 2021 இல் இரண்டு ஒற்றையர் அரையிறுதிகளில் விளையாடியதைத் தொடர்ந்து, சபலென்கா உலகின் இரண்டாம் தரவரிசையில் உயர்ந்தார்,[5] ஆனால் 2022 இல் அந்த வெற்றியைத் தொடர்ந்து தக்கவைக்க முடியவில்லை. 2023 இல், ஆத்திரேலியத் திறந்த சுற்றில் தனது முதலாவது ஒற்றையர் பட்டத்தை வென்றார். நான்கு பெருவெற்றித் தொடர்களின் அரையிறுதியை எட்டினார். இதன்மூலம் உலகின் முதலாம் தரவரிசையை எட்டினார்.[6] அந்தப் பருவத்திற்கான ITF உலக வாகையாளராகவும் ஆனார்.

சபலென்கா 2019 இல் தொடர்ந்து இரட்டையர் ஆட்டங்களில் விளையாடத் தொடங்கினார். மெர்ட்டென்சுடன் இணைந்து 2019 மார்ச் மாதம் நடந்த இந்தியன் வெல்சு திறந்த சுற்று, மயாமி திறந்த சுற்று ஆகிய இரண்டு கட்டாயப் போட்டிகளை வென்றார். ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க திறந்த சுற்று இரட்டையர் பட்டத்திற்குப் பிறகு, முதல் முறையாக 2019 மகளிர் டென்னிசு சங்க இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

தொழில் புள்ளிவிவரங்கள்[தொகு]

பெருவெற்றித் தொடர்கள்[தொகு]

ஒற்றையர்[தொகு]

தொடர் 2016 2017 2018 2019 2020 2021 2022 2023 2024 SR வெ–தோ வெற்றி %
ஆத்திரேலிய திறந்த சுற்று A Q2 1R 3R 1R 4R 4R வெ வெ 2 / 7 22–5 81%
பிரெஞ்சு திறந்த சுற்று A Q1 1R 2R 3R 3R 3R SF 0 / 6 12–6 67%
விம்பிள்டன் A 2R 1R 1R NH SF A SF 0 / 5 11–5 69%
அமெரிக்கத் திறந்த சுற்று Q2 Q1 4R 2R 2R SF SF F 0 / 6 21–6 78%
வெற்றி–தோல்வி 0–0 1–1 3–4 4–4 3–3 15–4 10–3 23–3 7–0 2 / 24 66–22 75%
தொழில் புள்ளிவிபரம்
பட்டங்கள் 0 0 2 3 3 2 0 3 1 மொத்தம்: 14
இறுதிகள் 0 1 4 4 3 3 3 5 1 மொத்தம்: 24
ஆண்டிறுதித் தரவரிசை 159 78 11 11 10 2 5 2 $20,377,563

இரட்டையர்[தொகு]

சுற்று 2018 2019 2020 2021 2022 SR W–L Win %
ஆத்திரேலியத் திறந்த சுற்று 1R 3R QF வெ A 1 / 4 10–3 77%
பிரெஞ்சு திறந்த சுற்று A SF 2R A A 0 / 2 5–2 71%
விம்பிள்டன் 2R QF NH A A 0 / 2 4–2 67%
அமெரிக்கத் திறந்த சுற்று 3R வெ QF A A 1 / 3 10–2 83%
வெற்றி–தோல்வி 3–3 15–3 6–3 5–0 0–0 2 / 11 29–9 76%

பெருவெற்றித் தொடர் இறுதிப் போட்டிகள்[தொகு]

ஒற்றையர்: 3 (2 பட்டங்கள், 1 இரண்டாமிடம்)[தொகு]

முடிவு ஆன்டு சுற்று தரை எதிராளி ஆட்ட எண்ணிக்கை
வெற்றி 2023 ஆத்திரேலியத் திறந்த சுற்று கடினத்தரை கசக்கஸ்தான் இலேனா ரிபாக்கினா 4–6, 6–3, 6–4
தோல்வி 2023 அமெரிக்கத் திறந்த சுற்று கடினத்தரை ஐக்கிய அமெரிக்கா கொக்கோ கௌஃப் 6–2, 3–6, 2–6
வெற்றி 2024 ஆத்திரேலியத் திறந்த சுற்று கடினத்தரை சீனா செங் கின்வென் 6–3, 6–2

இரட்டையர்: 2 (2 பட்டங்கள்)[தொகு]

முடிவு ஆண்டு சுற்று தரை இணை எதிராளிகள் ஆட்ட எண்ணிக்கை
வெற்றி 2019 அமெரிக்கத் திறந்த சுற்று கடினத்தரை பெல்ஜியம் எலீசு மெர்ட்டென்சு பெலருஸ் விக்டோரியா அசரென்கா
ஆத்திரேலியா ஆசுலி பார்ட்டி
7–5, 7–5
வெற்றி 2021 ஆத்திரேலியத் திறந்த சுற்று கடினத்தரை பெல்ஜியம் எலீசு மெர்ட்டென்சு செக் குடியரசு பார்பரா கிரெச்சிக்கோவா
செக் குடியரசு கத்தரினா சினியக்கோவா
6–2, 6–3

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aryna Sabalenka". WTA Tennis. பார்க்கப்பட்ட நாள் 6 January 2019.
  2. "Career Prize Money Leaders" (PDF). WTA Tennis. பார்க்கப்பட்ட நாள் 12 June 2023.
  3. "2017 Season Review: Aryna Sabalenka, a new name on the rise". Vavel. பார்க்கப்பட்ட நாள் 8 September 2018.
  4. "Aryna Sabalenka Rankings History". WTA Tennis. பார்க்கப்பட்ட நாள் 6 September 2018.
  5. Berkok, John (23 August 2021). "Ranking Reaction: Aryna Sabalenka passes Naomi Osaka for No. 2". tennis.com. பார்க்கப்பட்ட நாள் 11 September 2023.
  6. "Rankings Watch: Sabalenka, Gauff-Pegula duo headline historic shakeup". WTA. https://www.wtatennis.com/news/3679827/rankings-watch-sabalenka-gauff-pegula-duo-headline-historic-shakeup. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரீனா_சபலென்கா&oldid=3877576" இலிருந்து மீள்விக்கப்பட்டது