அரீசு-சந்திரா ஆராய்ச்சி நிறுவனம்
அரீசு-சந்திரா ஆராய்ச்சி நிறுவனம்
முந்தைய பெயர் | மேத்தா ஆராய்ச்சி நிறுவனம் |
|---|---|
| வகை | ஆராய்ச்சி நிறுவனம் |
| உருவாக்கம் | 1975[1] |
| பணிப்பாளர் | திலீப் சட்கா[2] |
கல்வி பணியாளர் | 30+[1] |
நிருவாகப் பணியாளர் | 30+ |
| 80[1] | |
பிற மாணவர் | 25 |
| அமைவிடம் | பிரயாக்ராச்சு, உத்தரப் பிரதேசம் , 211019 , இந்தியா |
| வளாகம் | 66 ஏக்கர்கள் (27 ha) |
| இணையதளம் | www |
அரீசு-சந்திரா ஆராய்ச்சி நிறுவனம் (Harish-Chandra Research Institute) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராச்சில் அமைந்துள்ள கணிதம் மற்றும் தத்துவார்த்த இயற்பியலில் ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.[3]. இந்த நிறுவனம் 1975 ஆம் ஆண்டு முதல் ஓமி பாபா தேசிய நிறுவனத்துடன் இணைந்து முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது.
பிரயாக்ராச்சில் உள்ள இயூசி நகரில் கங்கை நதிக்கரையில் உள்ள அரீசு-சந்திரா ஆராய்ச்சி நிறுவனம் ஒரு உறைவிட வளாகத்தைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 30 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 50 முனைவர் பட்ட மாணவர்கள் மற்றும் 25 முதுகலை வருகை தரும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உள்ளனர். இந்திய அரசின் அணுசக்தித் துறை இந்நிறுவனத்திற்கு நிதியளித்து வருகிறது.
வரலாறு
[தொகு]அரீசு-சந்திரா ஆராய்ச்சி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு மேத்தா கணிதம் மற்றும் கணித இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனமாக நிறுவப்பட்டது. கல்கத்தாவின் பி.எசு. மேத்தா அறக்கட்டளையின் நிதியுதவியுடன் அப்போது தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆரம்பத்தில் பத்ரி நாத் பிரசாத் என்பவரால் நிர்வகிக்கப்பட்டது. மேலும் ஜனவரி 1966 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் அவர் இறந்த பிறகு அலகாபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எசு.ஆர். சின்காவும் இந்த நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். 1975 ஆம் ஆண்டு இது உண்மையிலேயே செயல்பாட்டுக்கு வந்தபோது, நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ இயக்குநராக பிரபு லால் பட்நாகர் இருந்தார். அவருக்குப் பிறகு மீண்டும் எசு.ஆர். சின்கா பதவியேற்றார்.[4]
2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் புகழ்பெற்ற இந்திய கணிதவியலாளர் அரிசு-சந்திராவின் நினைவாக இந்த நிறுவனம் மறுபெயரிடப்பட்டது.
2001 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் மணிக்குப் பிறகு இரவி எசு. குல்கர்னி இயக்குநராகப் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் அமிதவ ராய்சவுத்ரியும் 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜெயந்த குமார் பட்டாசார்ச்சியும் தொடர்ந்தனர்.[4]
ஆராய்ச்சி நடவடிக்கைகள்
[தொகு]அரீசு-சந்திரா ஆராய்ச்சி நிறுவன கணித ஆராய்ச்சி குழுவில் இயற்கணிதம், பகுப்பாய்வு, வடிவியல் & இடவியல் மற்றும் எண் கோட்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நான்கு குழுக்கள் உள்ளன. [5] இயற்பியல் ஆராய்ச்சி குழுவில் வானியற்பியல், அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல், உயர் ஆற்றல் இயற்பியல், சரக் கோட்பாடு மற்றும் குவாண்டம் தகவல் & கணக்கீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் குழுக்கள் உள்ளன.[6] சரக் கோட்பாட்டுத் துறையில் நிறுவன முக்கிய ஆசிரிய உறுப்பினர்களில் அசோக் சென் மற்றும் இராஜேஷ் கோபகுமார் ஆகியோர் இருந்தனர்.[7] குவாண்டம் தகவல் மற்றும் கணக்கீடு துறையில் அருண் கே. பதி, அதிதி சென் தே மற்றும் உச்சவல் சென் ஆகியோர் இருந்தனர்.
ஆராய்ச்சிக்கு மேலதிகமாக, இந்நிறுவனத்தின் கணிதக் குழு ஆண்டுதோறும் கோடைக்கால கணிதத் திட்டத்தை நடத்துகிறது. இத்திட்டம் இந்தியா முழுவதிலுமிருந்து ஆர்வமுள்ள இளங்கலை மாணவர்களை மேம்பட்ட கணிதத்தில் ஒரு மாத கால தீவிரமான ஆழமான படிப்புக்கு அழைக்கும் மிகவும் பிரபலமான திட்டமாகும்.[8][9] இயற்பியல் குழு, இயற்பியலில் உயர் படிப்புகளுக்கு மாணவர்களை ஊக்குவிப்பதற்காக இயற்பியலில் வருகை தரும் மாணவர்கள் திட்டத்தை தொடங்கியுள்ளது.[10][11]
விருதுகள்
[தொகு]அரீசு-சந்திரா ஆராய்ச்சி நிறுவன ஆசிரிய உறுப்பினர்கள் ஏராளமான ஆராய்ச்சி விருதுகளைப் பெற்றுள்ளனர். நிறுவனத்தின் பின்வரும் ஆசிரிய உறுப்பினர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசைப் பெற்றுள்ளனர்:
- அசோக சென் - 1994
- அமிதவா ராய்சௌத்ரி- 1997
- பிசுவரூப் முகோபாத்யாயா- 2003
- பினாகி மசூம்தார்- 2007
- இராஜேஷ் கோபகுமார் - 2009
- அதிதி சென் டே - 2018
அசோக் சென் 2009 ஆம் ஆண்டு மதிப்புமிக்க இன்ஃபோசிசு பரிசையும், 2012 ஆம் ஆண்டு சூலையில் அடிப்படை இயற்பியல் பரிசையும் பெற்றார்.[12][13] 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் மதிப்புமிக்க குடிமை விருதான பத்ம பூசண் விருதையும் பெற்றார். இராஜேஷ் கோபகுமார் 2006 ஆம் ஆண்டில் பன்னாட்டு கோட்பாட்டு இயற்பியல் மையப் பரிசைப் பெற்றார்
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "Academic Report 2010-2011" (PDF). Harish-Chandra Research Institute. Retrieved 12 June 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "History of HRI". www.hri.res.in. Archived from the original on 11 June 2024. Retrieved 11 June 2024.
- ↑ "Home". Harish-Chandra Research Institute. Archived from the original on 17 May 2013. Retrieved 12 June 2012.
- 1 2 "History". Harish-Chandra Research Institute. Archived from the original on 18 February 2013. Retrieved 12 June 2012.
- ↑ "Mathematics Research at HRI". Harish-Chandra Research Institute. Archived from the original on 28 August 2013. Retrieved 22 June 2012.
- ↑ "Physics Research at HRI". Harish-Chandra Research Institute. Archived from the original on 28 August 2013. Retrieved 22 June 2012.
- ↑ "Stringing together the ultimate law". The Hindu. 7 January 2001 இம் மூலத்தில் இருந்து 13 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120913054321/http://hindu.com/2001/01/07/stories/0207000o.htm.
- ↑ "Summer Programme in Mathematics". Harish-Chandra Research Institute. Archived from the original on 28 August 2013. Retrieved 22 June 2012.
- ↑ "Harish-Chandra Research Institute (HRI) - Summer Programme in Mathematics". Ideology Speaks. Archived from the original on 4 March 2016. Retrieved 22 June 2012.
- ↑ "The Graduate Program in Physics at HRI". Harish-Chandra Research Institute. Archived from the original on 28 August 2013. Retrieved 6 January 2013.
- ↑ "Summer Project/Internship 2013 at HRI Allahabad". UpdateMoi. Archived from the original on 23 January 2013. Retrieved 6 January 2013.
- ↑ "FPP". Archived from the original on 3 August 2012. Retrieved 1 August 2012.
- ↑ Allahabad physicist Ashoke Sen wins prize, becomes crorepati overnight பரணிடப்பட்டது 19 ஏப்ரல் 2013 at the வந்தவழி இயந்திரம். Indiatvnews.com (1 August 2012). Retrieved on 6 December 2013.