உள்ளடக்கத்துக்குச் செல்

அரீக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரீக்கோடு
நகரம்
ஆள்கூறுகள்: 11°14′16″N 76°03′00″E / 11.237716°N 76.050088°E / 11.237716; 76.050088
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
அரசு
 • வகைBlock Panchayath
 • நிர்வாகம்UDF
மொழிகள்
 • அதிகார்ப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
673639
தொலைபேசி குறியீடு0483
வாகனப் பதிவுகேஎல்-84
இணையதளம்https://www.areekode.com/

அரீக்கோடு (Areekode) என்பது கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் சாலியாற்றின் கரையில் அமைந்துள்ள ஓர் ஊராகும்.[1][2] இது அரீக்கோடு கிராம ஊராட்சியால் நிருவகிக்கப்படுகிறது. இது பிரித்தானிய இந்தியாவில் மலபார் மாவட்டத்துக்கு உட்பட்டதாக இருந்தது.

அரீக்கோடு 7.25 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. இது கேரள மாநிலத்தில் அதிக எழுத்தறிவு பெற்ற பகுதிகளில் ஒன்றாகும். மலப்புறம் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஊர், பசுமை போர்த்திய குன்றுகளாலும் சிறு மலைகளாலும் சூழப்பட்டுள்ளது. அரீக்கோடு மண்டலத்தில் உறங்காதிரி, கீழ்பரம்பா, காவனூர், அரீக்கோடு ஆகிய ஊராட்சிகள் உள்ளன.

இது  மஞ்சேரியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும்,  மலப்புறத்திலிருந்து 27 கி.மீ தொலைவில்,  கோழிக்கோடு நகரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது.

சொற்பிறப்பியல்

[தொகு]
அரீக்கோட்டில் உள்ள சாளியாறு

'அருவிக்கோடு' என்ற சொல்லிலிருந்து 'அரீக்கோடு' என்ற பெயர் உருவானதாக நம்பப்படுகிறது. இதற்கு மலையாளத்தில் 'ஆற்றங்கரை' என்று பொருள். பொதுச் சாலைப் போக்குவரத்து மூலம் இந்த ஊரை எளிதில் அடையலாம்.

மற்றொரு கூற்றின்படி, 'அரிக்கோடா' என்ற சொல்லிரிலுந்து 'அரிக்கோடு' என்ற பெயர் உருவானதாக்க் கூறப்படுகிறது. அரிக்கோடா என்பதற்கு 'அரிசி கிடைக்கும் இடம்' என்று பொருள்படும். இது இங்கு செயல்பட்ட வாரச்சந்தையைக் குறிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

வரலாறு

[தொகு]
குருமாத்தூர் கல்வெட்டு (871 CE)

அரீக்கோடுக்கு அருகில் காணக் கிடைத்த குருமாத்தூர் கல்வெட்டு கி.பி. 871 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.[3]

போக்குவரத்து

[தொகு]
அரீக்கோட்டில் ஒரு சாலை

அரீக்கோடு நகரானது, மேற்கில் கோழிக்கோடு, கிழக்கில் நிலம்பூர் , தெற்கில் மஞ்சேரி ஆகிய நகரங்களின் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகிறது. இது கோழிக்கோடு நகரத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கோழிக்கோடு வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 66 இன் வடக்குப் பகுதி கோவா , மும்பை ஆகியப் பகுதிகளை இணைக்கிறது. தெற்குப் பகுதி கொச்சி , திருவனந்தபுரம் ஆகியப் இணைக்கிறது. நிலம்பூரில் தொடங்கும் மாநில நெடுஞ்சாலை 28, நெடுஞ்சாலைகள் 12, 29 , 181 வழியாக உதகமண்டலம், மைசூர் , பெங்களூர் ஆகிய நகரங்களை இணைக்கிறது.

அருகிலுள்ள வானூர்தி நிலையம் கரிப்பூர் சிசிஜே- வில் அமைந்துள்ளது. கரிப்பூர் வானூர்தி நிலையம் (சிசிஜே - கோழிக்கோடு விமான நிலையம்) அரீக்கோட்டிலிருந்து 30 நிமிடப் பயணத் தொலைவில் அமைந்துள்ளது.

அரீக்கோடு பகுதி வழியாக பாலக்காட்டிலிருந்து கோழிக்கோடு செல்லும புதிய நெடுஞ்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மிக அருகிலுள்ள முக்கிய தொடர்ந்து நிலையம் கோழிக்கோடு தொடருந்து நிலையம் நிலம்பூர் சாலை தொடருந்து நிலையம் ஆகியவை ஆகும்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Areekode Village Population - Ernad - Malappuram, Kerala". www.census2011.co.in. Retrieved 2026-08-05.
  2. ↑ "Areekode PS". ps.keralapolice.gov.in. Retrieved 2026-08-05.
  3. ↑ Veluthat, Kesavan (1 June 2018). "History and historiography in constituting a region: The case of Kerala". Studies in People's History. 5 (1): 13–31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரீக்கோடு&oldid=4619514" இலிருந்து மீள்விக்கப்பட்டது