அரி ராம் கோயில்
அரி ராம் கோயில் Hari Ram Temple | |
---|---|
![]() அரி ராம் கோயில் வளாகம். | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பாகோ, மணிலா |
சமயம் | இந்து சமயம் |
மண்டலம் | தேசிய தலைநகர் பிராந்தியம் |
மாகாணம் | மணிலா |
அரி ராம் கோயில் (Hari Ram Temple) பிலிப்பைன்சு நாட்டின் மணிலாவில் உள்ள பாக்கோவில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோயிலாகும். தேசிய தலைநகர் பிராந்தியத்தில் அமைந்துள்ள மூன்று இந்துக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். அரி ராம் கோயிலை பிலிப்பைன்சு நாட்டின் இந்திய சமூகத்தினர் அதிகம் பார்வையிடுகின்றனர்.[1]
பின்னணி[தொகு]
மணிலாவில் சிறிய அளவில் இந்திய சமூகம் உள்ளது. அவர்களில் பலர் இந்துக்கள் ஆவர். பெரும்பாலும் இவர்கள் பாகோ பிராந்தியத்தில் வாழ்கின்றனர். இப்பகுதியில் இதைத்தவிர சிவன் கோவில் மற்றும் பாபா பாலக்நாத் கோவில் என்ற மேலும் இரண்டு கோயில்கள் உள்ளன.[2] இக்கோவில் கட்டப்பட்டு இசுகான் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
புற இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் அரி ராம் கோயில் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.