அரிஸ்டாகஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சமோசின் அரிஸ்டாகஸ் (Ἀρίσταρχος, Aristarkhos, 310 BC – ca. 230 BC) என்பவர் பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஒரு வானியலாளரும் கணிதவியலாளருமாவார். சூரிய மையக் கொள்கையை முதன்முதலில் மொழிந்தவர் இவரேயாவார். சூரியனே அகிலத்தின் மையம் எனவும் பூமி அதனைச் சுற்றி வருவதாகவும் இவர் குறிப்பிட்டார். மேலும் கோள்களை, அவை சூரியனைச் சுற்றிவரும் சரியான ஒழுங்கில் வரிசைப்படுத்தியவரும் இவரே.[1] இவரது கொள்கைகள் பின்பு அரிஸ்டாட்டலினாலும் தொலெமியாலும் நிராகரிக்கப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Draper, John William "History of the Conflict Between Religion and Science" in Joshi, S. T., 1874 (2007). The Agnostic Reader. Prometheus. பக். 172–173. ISBN 978-1-59102-533-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிஸ்டாகஸ்&oldid=1829112" இருந்து மீள்விக்கப்பட்டது