அரியானா மாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹரியானா காளை
ஹரியானா பசு

ஹரியானா மாடு (Hariana ) என்பது வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாட்டினமாகும்.

பகுதிகள்[தொகு]

இது ஹரியானா மாநிலத்தின் ரோத்தக் மாவட்டம், கர்னால் மாவட்டம், ஜிந்து, ஹிசார், குருகிராம் போன்ற மாவட்டங்களை பூர்வீகமாக‍க் கொண்டது. இந்த மாடுகள் நடுத்தர அளவு முதல் பெரிய அளவுவரை உள்ளன, இவை பொதுவாக சாம்பல் நிறம் திட்டுக்களுடன் வெண்மையாக உள்ளன. [1][2]

அம்சங்கள்[தொகு]

இவற்றின் கொம்புகள் குறுகியதாகவும் அதன் முகம் குறுகி நீண்டதாக இருக்கும். இந்த மாடுகள் மிகவும் நல்ல பால் தருபவையாகவும், மற்றும் எருதுகள் நன்கு வேலை செய்பவையாகவும் உள்ளன. இவை கறவை உழைப்பு ஆகிய இருநோக்கங்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.[3] இவற்றின் முதல் கன்று ஈனும் வயது சராசரியாக 40-60 மாதங்கள் ஆகும்.[4]

பிறப்பிடம்[தொகு]

ஹரியானா இனம், அரியானா மற்றும் கிழக்கு பஞ்சாப் பகுதிகளை பூர்வீகமாக‍க் கொண்டவை. இவை இண்டிகா சீபு மாட்டினத்தில் அறியப்பட்ட 75 இனங்களில் ஒன்றாகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hariana cattle". Department of Animal Husbandry, Government of India. பார்த்த நாள் 16 May 2015.
  2. "Breeds of Livestock - Hariana Cattle". Department of Animal Science - Oklahoma State University. பார்த்த நாள் 16 May 2015.
  3. "Hariana cattle - Origin and Distribution". Gou Vishwakosha - VishwaGou. பார்த்த நாள் 16 May 2015.
  4. "ஹரியானா". தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இணையதளம். பார்த்த நாள் 8 சனவரி 2017.
  5. "Hariana — India: Haryana, eastern Punjab" page 245 In Porter, Valerie (1991) Cattle: A Handbook to the Breeds of the World Helm, London, ISBN 0-8160-2640-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியானா_மாடு&oldid=2967776" இருந்து மீள்விக்கப்பட்டது