உள்ளடக்கத்துக்குச் செல்

அரியானா சரசுவதி பாரம்பரிய மேம்பாட்டு வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரியானா சரசுவதி பாரம்பரிய மேம்பாட்டு வாரியம்
The Haryana Sarasvati Heritage Development Board (HSHDB)
துறை மேலோட்டம்
அமைப்பு12 அக்டோபர் 2015
ஆட்சி எல்லைஅரியானா அரசாங்கம்
ஆண்டு நிதி14 கோடி
அமைப்பு தலைமைகள்
  • நயாப் சிங், தலைவர்
  • தூமன் சிங் கிர்மாச்சு, துணைத் தலைவர்
வலைத்தளம்https://haryanasarasvatiboard.in/

அரியானா சரசுவதி பாரம்பரிய மேம்பாட்டு வாரியம் (Harayana Saraswati Heritage Development Board) என்பது அரியானா மாநில அரசால் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி, அப்போதைய அரியானா முதலமைச்சரான மனோகர் லால் கட்டாரின் தலைமையில் அமைக்கப்பட்ட ஓர் இந்திய அரசு அமைப்பாகும்.

சரசுவதி ஆற்றுக்கு புத்துயிர் அளிப்பது மற்றும் சரசுவதி ஆற்றுடன் தொடர்புடைய பாரம்பரியத்தை மேம்படுத்துவது ஆகியவை இந்த வாரியத்தின் நோக்கங்களாகும். சரசுவதியின் பழங்கால ஆற்றுப் பாதையில் நீரோட்டம் தொடர்வதற்காக அணை, நீர்த்தேக்கம் மற்றும் தடுப்பணை கட்டுதல், கோயில்களைப் புதுப்பித்தல், வருகை தரும் யாத்ரீகர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் குடிமை வசதிகளை வழங்குதல் ஆகியவையும் இதன் நோக்கங்களில் அடங்கும்.[1][2]

திட்டங்கள்

[தொகு]

2021 ஆம் ஆண்டில், முதல் கட்ட சரசுவதி ஆற்றை அழகுபடுத்தும் திட்டத்திற்காக அரியானா அரசாங்கத்தால் இந்த வாரியத்திற்கு 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.[3] ஆதி பத்ரியில் அணை கட்டுவதிலும் இந்த வாரியம் பங்கேற்கும்.[4] மேலும், குருசேத்திரா மாவட்டத்தில் உள்ள பிப்லி மற்றும் பெகோவா, யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள பிலாசுபூர், தோசர்கா கிராமத்திற்கு அருகிலுள்ள பஞ்ச்குலா-யமுனாநகர் நெடுஞ்சாலை மற்றும் கைத்தல்-குக்லா சாலை ஆகிய இடங்களில் 5 ஆற்றங்கரைப் பகுதிகளை உருவாக்கும் திட்டத்தையும் இந்த வாரியம் வகுத்துள்ளது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Home - Haryana Sarasvati Heritage Development Board" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-03-06.
  2. "'Will bring Sarasvati river on surface', says Dhuman Singh after becoming vice-chairman of Haryana Sarasvati Heritage Development Board". The Times of India. 2020-10-18. https://timesofindia.indiatimes.com/city/chandigarh/will-bring-sarasvati-river-on-surface-says-dhuman-after-becoming-vice-chairman-of-haryana-sarasvati-heritage-development-board/articleshow/78732807.cms.
  3. "Under phase-I Budget of Rs 14 crore to be spent on beautification project of Saraswati channel". The Times of India. 2021-11-14. https://timesofindia.indiatimes.com/city/gurgaon/under-phase-i-budget-of-rs-14-crore-to-be-spent-on-beautification-project-of-saraswati-channel/articleshow/87700543.cms.
  4. "'Haryana, Himachal Pradesh CMs to sign MoU to construct dam at Adi Badri to rejuvenate Saraswati river'". The Times of India. 2022-01-06. https://timesofindia.indiatimes.com/city/gurgaon/haryana-himachal-pradesh-cms-to-sign-mou-for-developing-dam-at-adi-badri-to-rejuvenate-saraswati-river/articleshow/88738440.cms.
  5. "Haryana's Saraswati heritage board to develop 5 riverfronts". The Tribune. 18 July 2021. Archived from the original on 31 July 2022. Retrieved 6 March 2023.