அரியானா அரசு
மாநில அரசு | சண்டிகர் |
---|---|
வலைத்தளம் | haryana |
சட்டம் | |
மாநிலச் சட்டப் பேரவை | |
சபாநாயகர் | அர்விந்தர் கல்யாண் |
பேரவைத் தலைவர் | கிருஷ்ணன் லால் மித்தா |
சட்டமன்ற உறுப்பினர் | 90 |
செயல் | |
இந்திய மாநில ஆளுநர் | பி. தத்தாத்திரேயா |
அரியானா முதலமைச்சர் | நயாப் சிங் (பாரதிய ஜனதா கட்சி) |
துணை முதலமைச்சர் | காலி |
தலைமைச் செயலாளர் | விவேக் ஜோசி, இந்திய ஆட்சிப் பணி |
நீதித்துறை | |
இந்திய உயர் நீதிமன்றங்கள் | பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் |
இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் (நடப்பு) | சீலா நாகு |
அரியானா அரசு (Government of Haryana) அல்லது அரியானா மாநில அரசு என்பது இந்திய மாநிலமான அரியானாவின் 22 மாவட்டங்களின் உச்ச நிர்வாக அதிகார அமைப்பாகும். இது அரியானா ஆளுநரால் வழிநடத்தப்படும் ஒரு நிர்வாகத்தைக் கொண்டுள்ளது. முதலமைச்சர், நீதித்துறை, அரியானா மாநிலத்தினை ஆட்சி செய்யும்.
அரசின் பிரிவுகள்
[தொகு]நிர்வாகி
[தொகு]மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர் அரியானா மாநிலத்தின் தலைவராக உள்ளார். இவரது பதவி பெரும்பாலும் சடங்குகள் சார்ந்ததாகும். அரியானாவின் முதலமைச்சரே அரசாங்கத்தின் தலைவராக உள்ளார். மேலும் அரியானாவின் 22 மாவட்டங்களை அதன் ஆறு பிரிவுகளில் நடத்துவதற்கான பெரும்பாலான நிர்வாக அதிகாரங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.[1]
சட்டமன்றம்
[தொகு]சண்டிகர் அரியானாவின் தலைநகரமாகும்.மேலும் அரியானா சட்டமன்றமும் தலைமைச் செயலகமும் இங்கு உள்ளது. இந்த நகரம் பஞ்சாப்பின் தலைநகரமாகவும் செயல்படுகிறது. மேலும் இது இந்தியாவின் ஒன்றிய பிரதேசமாகும்.
அரியானாவின் தற்போதைய சட்டமன்றம் ஒரே அவையினைக் கொண்டது. இதில் 90 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். முன்னதாக கலைக்கப்படாவிட்டால் சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.[2]
நீதித்துறை
[தொகு]சண்டிகரில் அமைந்துள்ள பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம், மாநிலம் முழுவதிலும் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.[3]
அரியானா அரசின் திட்டங்கள்
[தொகு]எண் | அரசின் திட்டத்தின் பெயர் | துவக்கப்பட்டது | துறை |
---|---|---|---|
1.
|
முதியோர் சம்மன் கொடுப்பனவு[4] | 1/11/2014 | சமூக நலன் |
2. | விதவை ஓய்வூதியத் திட்டம்[5] | 1/11/2014 | சமூக நலத் திட்டம் |
3. | ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதி உதவி திட்டம்[6] | 1/11/2014 | நிதி உதவி-மாநில திட்டம் |
4. | பரிவார் பெக்சன் பத்ரா[7] | 04/08/2020 | மாநில அரசு |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Haryana Government | Birth Place of the Gita | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-13.
- ↑ "Haryana Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre, Government of India. பார்க்கப்பட்ட நாள் 2008-05-12.
- ↑ "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. பார்க்கப்பட்ட நாள் 2008-05-12.
- ↑ "Old Age Samman Allowance | Haryana Government | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
- ↑ "Widow Pension Scheme | Haryana Government | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
- ↑ "Financial Assistance to Destitute Children Scheme(FADC) | Haryana Government | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
- ↑ PPP, Haryana (2022-02-26). "PPP haryana - Parivar Pehchan Patra Yojana 2022". PPP Haryana (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2 May 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-05-04.