அரியத்னெசு குன்றுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரியத்னெசு குன்றுகள்
Ariadnes Colles
அரியத்னெசு குன்றுகளின் மேற்கு பகுதி, செவ்வாய் விரைவுத் திட்ட உயர் மேம்பாட்டு முப்பரிமான புகைப்படக் கருவியில் பார்க்கப்பட்ட காட்சி. வலது புறத்தில் வடக்கு திசை
அமைவிடம்பேய்தோண்டிசு நாற்கர வரைபடம்

அரியத்னெசு குன்றுகள் (Ariadnes Colles) என்பவை செவ்வாய் கோளின் எரிதானியா நாற்கர வரைபடத்திற்கு வடகிழக்கில் அமைந்துள்ள குன்றுகளைக் குறிக்கிறது. 34.5 ° தெற்கு அட்சரேகை, மற்றும் 172.78 ° கிழக்கு தீர்க்கரேகை ஆகிய அடையாள ஆள்கூறுகளில் இக்குன்றுகள் அமைந்துள்ளன. 180 X 160 கிலோ மீட்டர் அல்லது 112 X 99 மைல் பரப்பளவில் இக்குன்றுகள் பரந்து விரிந்துள்ளன. 1982 ஆம் ஆண்டு உலகளாவிய வானியல் ஒன்றியம் மரபுவழி எதிரொளித் திறன் அடிப்படையில் இக்குன்றுகளுக்கு அரியத்னெசு குன்றுகள் என பெயர் சூட்டியது. [1]

செவ்வாய் விரைவு விண்வெளித் திட்டத்தின் உயர் மேம்பாட்டு முப்பரிமான புகைப்படக் கருவியால் எடுக்கப்பட்ட அரியத்னெசு குன்றுகளின் முன்னோக்கு பார்வை. புகைப்படம் தென்மேற்கு நோக்கி எடுக்கப்பட்டதால், வடக்கு திசை கீழ் வலதுபுறம் உள்ளது
எர்தானியா ஏரியின் வரைபடம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Blue, Jennifer. "Ariadnes Colles". Gazetteer of Planetary Nomenclature. USGS Astrogeology Research Program.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியத்னெசு_குன்றுகள்&oldid=3111157" இலிருந்து மீள்விக்கப்பட்டது