அரிமளம் சு. பத்மநாபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிமளம் சு. பத்மநாபன்
புதுவை அரசின் தமிழ்மாமணி விருது

முனைவர் அரிமளம் சு. பத்மநாபன் (Arimalam S. Padmanabhan, பிறப்பு: ஜூன் 14, 1951) இசையியல் அறிஞரும் இசைக்கலைஞரும் நாடகத் தமிழ் ஆராய்ச்சியாளரும் ஆவார். இசையமைப்பாளர், தேசிய சேர்ந்திசைப் பயிற்றுநர், கல்வியாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர், இசைத் தமிழுக்கான முதல் கலைச்சொல் அகராதியை உருவாக்கியவர் எனப் பலதுறைகளிலும் இயங்கி வருபவர். வானொலி, தொலைக்காட்சி நிகழ்வுகளில் தொடர்ந்து இசைக் கலையை வளர்த்து வருபவர்.அரங்கிசைக் கலைஞராக 50ஆண்டு அனுபவம் உடையவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் புதுக்கோட்டை மாவட்டத்தின் அரிமளத்தில் 1951 ஜூன் 14-ஆம் நாள் பிறந்தவர். இவர் மரபுவழி இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தையார் (இசையுலகில் புகழ்பெற்ற ,அரிமளம் சகோதரர்கள்’ என்னும் இருவரில் மூத்தவரான) இசைக்கலைஞர் அரிமளம் பி.எஸ்.வி. சுப்பிரமணியம் ஆவார். தாயார் திருமதி மங்களம் அம்மையார். தன் தந்தையையே குருவாகக் கொண்டு இசைக்கலை பயின்று தேர்ந்த இவர், தம் இளவயதிலேயே பொது நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கியவர். இவர் 43 ஆண்டுகளாகப் புதுச்சேரியில் வசித்து வருகிறார். இசைத்தமிழ் சார்ந்தும் முத்தமிழ் ஆய்வுப் பணிகளிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

கல்வியும் பயிற்சியும்[தொகு]

அரிமளம் அரசு உயர் நிலைப் பள்ளியில் தாம் பயின்ற காலத்தில் அங்கு நடைபெற்ற கலை, இலக்கியப் போட்டிகளில் தாம் கலந்துகொண்ட அனைத்திலும் பரிசுகளை வென்றவர்.

கர்நாடக இசையில் மட்டுமின்றி தமிழ் இலக்கியத்திலும் இளவயது முதலே ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 1967ஆம் ஆண்டு பள்ளிக் கல்வியை நிறைவு செய்து அவ்வாண்டில் நடைபெற்ற திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழாவில் பங்குபெற்றுப் பாடினார். அதன் வாயிலாக மூத்த இசைக் கலைஞர்களின் கவனங்களை ஈர்த்தார். இதனால் இசைப் பணியில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார்.[1]

அக்காலத்தில் காரைக்குடி தமிழிசைச் சங்கம் தமிழக அளவில் நடத்திய கர்நாடக இசைப் போட்டிகளில் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பரிசு பெற்றவர். மேலும் கதாகாலட்சேபம், இசை நாடகங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இளம் வயதில் பண்ணாராய்ச்சி வித்தகர் சுந்தரேசனார் அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் பயனாக பழந்தமிழிசை பற்றி அறியும் ஆர்வமும் தோன்றியது.

இவர் ஆங்கில இலக்கியத்திலும் கல்வியியலிலும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் இசைக் கூறுகள் என்னும் தலைப்பினில் ஆய்வு மேற்கொண்டு புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தில் 1998 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.இதுவே தமிழில் நாடக இசை குறித்த முதல் முனைவர் பட்ட ஆய்வாகும்.[2]

கல்விப் பணிகள்[தொகு]

1976ஆம் ஆண்டில் மத்திய அரசுப் பள்ளியில் இசை ஆசிரியர் பணியில் சேர்வதற்காகப் புதுச்சேரிக்கு வந்தார். 1977 ஆம் ஆண்டில் புதுச்சேரி அரசின் கல்வித் துறையில் இசை ஆசிரியராகப் பணியேற்றார்.17ஆண்டுகள் இசையாசிரியராகவும்,7ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றினார்.2000ஆவது ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றதனைத் தொடர்ந்து புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறை, சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறை ஆகியவற்றில் வருகை தரு பேராசிரியாகவும் பணியாற்றியவர். மேலும் பல கல்லூரிகளின் இசைத் துறைகளிலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பயிலரங்குகளில் தமிழியல், இசை, நாடகத் துறைகள் சார்ந்த வல்லுநராகப் பயிற்சி அளித்து வருகிறார்.[3]

ஆய்வறிஞர் & ஒருங்கிணைப்பாளர்[தொகு]

  1. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,சென்னை.
  2. செம்மொழித் தமிழ் இலக்கிய, இலக்கணக் காட்சிக் குறும்படங்கள் தயாரிக்கும் திட்டம்
  3. தமிழின் தொன்மை - ஒரு பன்முக ஆய்வுத் திட்டம் [4]

வருகைதரு பேராசிரியர்[தொகு]

  1. நிகழ்கலைத் துறை, புதுவைப் பல்கலைக் கழகம்,
  2. இசைத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,
  3. கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
  4. உள்ளுறை ஆய்வுத் தகைஞர் புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்,[5]

ஆய்வுப் பணிகள்[தொகு]

இசைத்துறையில் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் இவர், இசைத்தமிழ் நாடகத் தமிழ் ஆய்வுத் துறையில் 28 ஆண்டுகளாகப் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.

இசைக்கலைஞர், இசையமைப்பாளர், தேசிய சேர்ந்திசைப் பயிற்றுநர், கல்வியாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முக தளங்களிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வறிஞராகவும் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரிந்த காலத்தில் திரைப்படம், இசை, ஒவியம், சிற்பம், சார்ந்த கலைத்துறை மாணவர்கள், படைப்பிலக்கியவாதிகள் என அனைவருக்கும் சங்க இலக்கியத்தை கொண்டுசேர்க்கும் பணியில் ஈடுபட்டவர்.[6]

பாடத்திட்டப் பணிகள்[தொகு]

  1. உறுப்பினர், பாடத் திட்டக் குழு, நிகழ்கலைப் புலம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.
  2. சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழக இசைத்துறைப் பட்டப் படிப்புகளுக்கான பாடங்களில் சில.
  3. புதுச்சேரி அரசுக் கல்வித்துறைக்காக ஒன்று முதல் பத்தாம் வகுப்புகளுக்கான இசைப் பாடத்திட்டத் தயாரிப்பு.[7]

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆற்றிய பணிகள் (2006 – 2010)[தொகு]

செம்மொழித் தமிழ் இலக்கிய, இலக்கணக் காட்சிக் குறும்படங்கள் தயாரிக்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகத் திகழ்ந்து தொல்காப்பியம், சங்க இலக்கியம், நாணயவியல், முத்துக் குளிப்பு, மொழியியல் தொடர்பான 20 காட்சிக் குறும்படங்களைத் தக்க இயக்குநர்களைக் கொண்டு தயாரித்து அளித்துள்ளார்.

தமிழின் தொன்மை: ஒரு பன்முக ஆய்வுத் திட்டம் - ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக மறைந்து போன தமிழ்ச் செய்யுளை ஓசை நயத்துடன் படிக்கக் கூடிய (ஓதுதல்) மரபினை மீட்டுருவாக்கம் செய்யும் பணியினைத் தகுதி வாய்ந்த வல்லுநர் குழுவுடன் மேற்கொண்டார்.

அதன் விளைவாக கீழ்க்காணும் குறுவட்டுகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் வெளியாயின.[1]

  1. பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழிப் படித்தல், பாடுதல்
  2. தொல்காப்பியம் முற்றோதல்
  3. பத்துப்பாட்டு முற்றோதல்[2]

இசைப்பணிகள்[தொகு]

இசையமைப்பாளராக 40 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அரிய தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியும் கற்பித்தும் வந்துள்ளார். சிலப்பதிகாரம், சங்க இலக்கியம், கம்பராமாயணம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், திருவருட்பா பாடல்களை இசையமைத்துத் தம் இசை அரங்கு நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். பரிபாடல் முதல் பாரதிதாசன் வரை இசைத்தமிழ் நாடகத் தமிழ்ப் பாடல்களை மரபு வழிப்பட்டு இசை யமைத்துப் பாடி வருகி்றார். அவற்றில் சில பதிவுகளாகப் பின்வருமாறு அமைகின்றன.[3]

வ.எ இசைப் பணிப் பதிவுகள் தொகை
1, ஆவணப்படங்கள் 2
2, தமிழிசைக் குறுவட்டு 2
3. இசை நாட்டிய நாடகங்கள் 10
4. பழந்தமிழிசையில் திருக்குறள் முழுமையும்

(ஆவணப் பதிவாக உருவாக்கம்) அகில இந்திய வானொலி நிலையம், புதுச்சேரி.

5. திருக்குறள் இசைத் தமிழ் (தமிழிசைக் குறுவட்டு), தமிழ் மையம், சென்னை 56 குறள் பாக்கள்
6. மரியம்மை காவியம் - ஒரு சிறு பகுதி மட்டும் 36 பாடல்கள்
7. திருவருட்பா பாடல்கள்
8. திருவருட்பாவைப் பாடல்கள்

படைப்புகள்[தொகு]

மொழிபெயர்ப்பு  நூல்  உள்பட  இசைத் தமிழ்,  நாடகத் தமிழ்  தொடர்பான  9  நூல்களையும் 75க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் தொல்காப்பியம், பத்துப்பாட்டு முற்றோதல் உள்ளிட்ட பல குறுவட்டுகளையும் வெளியிட்டுள்ளார். இசைத் தமிழுக்கான முதல் கலைச்சொல் அகராதியை உருவாக்கியுள்ளார்.

  1. தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் இசைக் கூறுகள், 2000[4][8]
  2. சங்கரதாஸ் சுவாமிகளின் சந்தங்கள் ஓர் ஆய்வு, 2002.[5]
  3. சங்கரதாஸ் சுவாமிகளின் இரு நாடகங்கள், 2006, சாகித்திய அகாதமி வெளியீடு
  4. சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் களஞ்சியம், 2008, காவ்யா வெளியீடு.[6]
  5. தமிழிசையும் இசைத்தமிழும், 2009, காவ்யா வெளியீடு.[7]
  6. பார்சி அரங்கு தோற்றமும் வளர்ச்சியும் (மொ.பெ.), 2014, காவ்யா வெளியீடு.[8]
  7. கம்பனில் இசைத்தமிழ்,  2016, உமா பதிப்பகம்,  சென்னை.[9]
  8. சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக் கருவூலம், 2017, காவ்யா வெளியீடு.[10]
  9. இசைத் தமிழ்க் கலைச் சொல் அகராதி, 2018, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

கட்டுரைப் பங்களிப்பு[தொகு]

  1. Encyclopaedia of  Indian Poetics (ஆங்கிலம்) வெளியீடு : சாகித்திய அகாடமி, புதுதில்லி.
  2. A  New    Comprehensive  History of Tamil Literature (தமிழ்) வெளியீடு : சாகித்திய அகாடமி, புதுதில்லி.

பெற்றுள்ள விருதுகள்[தொகு]

  1. தமிழ் மாமணி விருது - புதுச்சேரி அரசு[11]
  2. கலைமாமணி விருது -  புதுச்சேரி  அரசு[12]
  3. விபுலானந்தர் விருது -  கிழக்குப் பல்கலைக்கழகம், ஸ்ரீலங்கா[13]
  4. முத்துத் தாண்டவர் விருது - 2018   தமிழ்ப் பேராயம், S R M பல்கலைக்கழகம்[14]  
  5. இராஜா சர் முத்தையா செட்டியார் விருது- மதுரை[15]
  6. பெரும்பாண நம்பி  விருது-லால்குடி[16]
  7. அருட்பா இசைமணி விருது - வடலூர்[17]
  8. சங்கரதாஸ் சுவாமிகள் விருது - புதுச்சேரி
  9. நாடகச் செல்வம் - சென்னை
  10. நாடக நற்றமிழ் ஞாயிறு - மதுரை
  11. டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் நினைவு விருது -சென்னை
  12. இசைத்தமிழ் அறிஞர்  -மதுரை
  13. சிறந்த இசை விளக்க உரை விருது -    மியூசிக் அகாடமி,  சென்னை
  14. தமிழிசைப் பேரொளி(வாழ்நாள் சாதனையாளர் விருது) SIGNIS தமிழ்நாடு
  15. ‘கலைக் காவிரி’ இசை அறிஞர் விருது திருச்சிராப்பள்ளி
  16. தமிழிசைப் பேரறிஞர் விருது மதுரை
  17. டாக்டர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது கரூர்
  18. நிகழ்த்துக் கலைச் செம்மல் விருது - கோவை
  19. சென்னைக் கம்பன் கழகம் தமிழிசையறிஞர் மாரிமுத்தாப்பிள்ளை விருது.
  20. மியூசிக் அகாதெமி - சிறந்த இசையறிஞர் விருது (2023)[18]

உள்ளிட்ட மேலும் பல  மதிப்புறு விருதுகளைப் பெற்றவர்.                                  

பொறுப்புகள்[தொகு]

இந்திய அரசின் சாகித்திய அகாடமி வல்லுநர் குழு, தென்னகப் பண்பாட்டு மைய ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் என மேலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

குறிப்பிடத்தகுந்த பொறுப்புகள்[தொகு]

  1. உறுப்பினர், ஆட்சிமன்றக்குழு, தென்னகப் பண்பாட்டு மையம் (இந்திய அரசு)
  2. ஆளுநரின் நியமன உறுப்பினர், ஆட்சிமன்றக்குழு, பாரதியார் பல்கலைக் கூடம் (புதுவைஅரசு நிறுவனம்), புதுச்சேரி.
  3. உறுப்பினர், பாடத் திட்டக் குழு, நிகழ்கலைப் புலம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.
  4. உறுப்பினர், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கான நெறியாளர் குழு, கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), திருச்சிராப்பள்ளி..

சான்றுகள்[தொகு]

  1. "Google Groups". groups.google.com. பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2020.
  2. "வரலாற்று வரிசை - 4" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2022.
  3. "வரலாற்று வரிசை - 4" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2022.
  4. இசைநூல், அரிமளம் சு.பத்மநாபன் (2019-08-30). "தினமணி". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. இசை நூல், அரிமளம் சு. பத்மநாபன் (2004-06-13). "தேசிய நூலகம் சிங்கப்பூர்". இசைத் தமிழ் ஆய்வு நூல். Archived from the original on 2020-07-14. பார்க்கப்பட்ட நாள் 2004-04-15. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. அரிமளம் சு.பத்மநாபன், நாடகங்கள் (2008-03-18). காமன்போக்ஸ். https://www.commonfolks.in/books/d/sankaradas-swamigalin-iru-nadagangal. பார்த்த நாள்: 2020-07-14. 
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-14. பார்க்கப்பட்ட நாள் 2020-07-14.
  8. "நூல் அரங்கம்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2020-07-14.
  9. "வரலாற்று வரிசை - 4" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-14.
  10. "#புதிய_புத்தகங்கள் #சங்கரதாஸ்_சுவாமிகளின்_150ஆம்_ஆண்டு_சிறப்பு_நூல்கள் 01. சங்கரதாஸ் சுவாமிகளின் – நாடகக் களஞ்சியம் ~… | Online bookstore, Books online, Bookstore". Pinterest (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-14.
  11. "தமிழ் மாமணி விருது அறிவிப்பு". Dinamalar. 2017-04-16. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  12. "புதுச்சேரி - விருது பெற்றோர் பட்டியல்". www.pudhucherry.com. Archived from the original on 2020-01-17. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  13. "வரலாற்று வரிசை - 4" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  14. "எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் அறிவிப்பு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  15. "ARUL". arulinfo.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  16. "வரலாற்று வரிசை - 4" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  17. "Dr. Arimalam Padmanabhan". www.drarimalammusic.com. Archived from the original on 2018-08-31. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  18. "மியூசிக் அகாடமி விருதுகள் அறிவிப்பு: பாம்பே ஜெயஸ்ரீ, வசந்தலட்சுமி நரசிம்மாச்சாரி, அரிமளம் பத்மநாபன் தேர்வு".

வெளி இணைப்புகள்[தொகு]

  1. முனைவர் அரிமளம் சு. பத்மநாபனின் காணொலித் தளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிமளம்_சு._பத்மநாபன்&oldid=3749754" இலிருந்து மீள்விக்கப்பட்டது