அரிப்புப் பாலம்

ஆள்கூறுகள்: 8°48′14″N 79°57′02″E / 8.8038°N 79.9506°E / 8.8038; 79.9506
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிப்புப் பாலம்
போக்குவரத்து பி403 நெடுஞ்சாலையில் மோட்டார் வண்டிகள்
தாண்டுவது அருவி ஆறு
இடம் அரிப்பு, மன்னார் மாவட்டம்
மொத்த நீளம் 258 m (846 அடி)
அகலம் 7.35 m (24 அடி)
அமைவு 8°48′14″N 79°57′02″E / 8.8038°N 79.9506°E / 8.8038; 79.9506

அரிப்புப் பாலம் (Arippu Bridge) அல்லது தள்ளாடி-அரிப்புப் பாலம் என்பது, வடமேற்கு இலங்கையில் அருவி ஆற்றுக்குக் குறுக்கே அமைந்துள்ள சாலைப் பாலம் ஆகும். இது 2011 அக்டோபர் 16 ஆம் தேதி முறைப்படி திறந்துவைக்கப்பட்டது.[1]

இப்பாலம் 258 மீட்டர் (846 அடி) நீளமும் 7.35 மீட்டர் (24 அடி) அகலமும் கொண்டது.[2] 540 மில்லியன் இலங்கை ரூபா (US$4.9 மில்லியன்) செலவில் அமைக்கப்பட்ட இப்பாலக் கட்டுமானத்துக்குப் பிரித்தானிய அரசின் உருக்குப் பாலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இலகு கடன் வசதியூடாக நிதி அளிக்கப்பட்டது.[2] அரிப்புப் பாலம், மன்னாரையும் புத்தளத்தையும் இணைக்கும் பி403 சாலையின் ஒரு பகுதியாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Thallady-Arippu bridge opened". Daily News (Sri Lanka). 18 October 2011 இம் மூலத்தில் இருந்து 20 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111020201958/http://www.dailynews.lk/2011/10/18/news11.asp. 
  2. 2.0 2.1 "Arippu Bridge declared opened by Basil Rajapaksa – 16 October 2011". Northern Provincial Council. 18 October 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிப்புப்_பாலம்&oldid=3850821" இலிருந்து மீள்விக்கப்பட்டது