உள்ளடக்கத்துக்குச் செல்

அரித்துவார் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரித்துவார் மக்களவைத் தொகுதி (Haridwar Lok Sabha constituency) உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள ஐந்து மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும். இது டெராடூன் மாவட்டம் மற்றும் அரித்துவார் ஆகிய இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கியது. 1977 ஆம் ஆண்டில் இந்த தொகுதி நடைமுறைக்கு வந்தது. 1977 மற்றும் 2009 காலகட்டங்களுக்கு இடையில், இந்த தொகுதி பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினர் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. [1]


அரித்வார் மக்களவைத் தொகுதியின் சட்டமன்ற தொகுதிகள்

[தொகு]

அரித்வார் மக்களவைத் தொகுதியில் பின்வரும் பதினான்கு உத்தராகண்டச் சட்டமன்றம் தொகுதிகளைக் கொண்டுள்ளது:

மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள்
எண் பெயர் SC/ST
டேராடூன்
18 தரம்பூர்
23 தோய்வாலா
24 ரிஷிகேஷ்
அரித்துவார்
26 பீல் ராணிப்பூர்
28 பகவான்பூர் SC/ST
25 அரித்வார்
35 அரித்துவார் கிராமப்புறம்
29 ஜாப்ரேரா SC/ST
27 ஜ்வாலாபூர் SC/ST
32 கான்பூர்
34 லக்சர்
33 மங்களூர்
30 பிரண் கலியார்
31 ரூர்க்கி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]

17வது மக்களவைத் தேர்தல் (2019)

[தொகு]

இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கட்சியை சேர்ந்த ரமேசு போக்கிரியால், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரான அம்ப்ரிஷ் குமாரை 2,58,729 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
ரமேசு போக்கிரியால் பாஜக 6,65,674 52.37%
அம்ப்ரிஷ் குமார் காங்கிரசு 4,06,945 32.02%
ஆண்ட்ரிக் சைனி பகுஜன் சமாஜ் கட்சி 1,73,528 13.65%
நோட்டா - - 6,281 0.49%

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]