அரித்துவாரமங்கலம் கி. ரி. பழனிவேல்
அரித்துவாரமங்கலம் கி. ரி. பழனிவேல் (Haridwaramangalam A. K. Palanivel) (பிறப்பு: 1948) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலத்தில் குமாரவேல் பிள்ளை, சேதுகண்ணு அம்மாள் இணையருக்கு மகனாக 1948 ஏப்ரல் 6 அன்று பழனிவேல் பிறந்தார். ஆரம்ப காலத்தில் தன் தந்தையார் எஸ். குமாரவேலிடம் தவில் வாசிக்கக் கற்றுக் கொண்டார். 1959 ஆம் ஆண்டு முதல் திருச்சேறை டி. எம். முத்துக்குமார சுவாமிப் பிள்ளையிடம் மாணாக்கராக சேர்ந்து இசைப் பயிற்சியினைப் பெற்றார். தன் பனிரெண்டு வயதிற்குள்ளாகவே பல முன்னணி நாதசுவரக் கலைஞர்களுடன் தவில் வாசித்தார். இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னணிக் கலைஞர்களுடன் இணைந்து 'ஒருங்கிணைந்த வாத்திய இசை' நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். நாகசுரம் மட்டுமின்றி வயலின், புல்லாங்குழல், வீணை, கித்தார், கிளாரின்ட், மாண்டலின், சாக்சபோன், வாய்ப்பாட்டு, மேலைநாட்டு இசை ஆகியவற்றோடு தவிலை இணைத்து இசை நிகழ்ச்சிகளில் வாசித்துள்ளார்.
வகித்த பொறுப்புகள்
[தொகு]திருவையாறு தியாகய்யர் மகோத்சவ சபா செயலாளர், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் வருகை தரும் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழிசைச் சங்கம், இராஜா அண்ணாமலை மன்றம் ஆகியவற்றில் இசைத் தேர்வராகவும், தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தில் நுண்கலைப் படிப்புகளுக்கான குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசு இயலிசை நாடக மன்ற இசை ஆசிரியர்கள் நியமிப்பாளர், சங்கீத நாடக அகதாமி உறுப்பினர், அகில இந்திய வானொலியின் மேனிலை தவில் கலைஞர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுண்கலை துறைத் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார்.[1]
விருதுகள்
[தொகு]- கலைமாமணி விருது, 1979-1980
- தமிழ்நாட்டின் அரசவைக் கலைஞராக 1989 இல் நியமனம்
- சங்கீத நாடக அகாதமி விருது, 2001[2]
- பத்மசிறீ விருது 2004
- இசைப்பேரறிஞர் விருது, 2015. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ லயவேட்டைக்காரர் 'பத்மஸ்ரீ' அரித்துவாரமங்கலம் கி. ரி. பழனிவேல் பேட்டி..! சந்திப்பு: கே. வி. ராகவன், நூல்: பேசும் புதிய சக்தி நேர்காணல்கள், தொகுப்பாசிரியர்: எஸ் செந்தில்குமார், பதிப்பு: 2018, பேசும் புதியசக்தி பதிப்பகம், எண்: 29எச், ஏ.என்.ஆர். காம்ப்ளக்ஸ் தெற்கு வீதி, திருவாரூர். பக்கம்: 12-18
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
- ↑ கலையும், கைத் தொழிலும் கட்டாயப் பாடமாக வேண்டும்: கவிஞர் வைரமுத்து
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. http://www.tamilisaisangam.in/awards.php. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2018.
வெளி இணைப்புகள்
[தொகு]- [http://sangeetnatak.org/sna/home.htm Sangeet Natak Akademi