அரிச்சந்திர புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரிச்சந்திர சரித்திரம்[1] என்னும் நூல் அரிச்சந்திர புராணம் என வழங்கப்படுகிறது. இந்நூல் புராணம் என்னும் பெயரோடு அச்சிடப்பட்டிருந்தாலும் புராணம் அன்று காப்பியம்.[2]

இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி காலம் வரையில் இந்நூல் பலராலும் பயிலப்பட்டுவந்தது. இது வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட தமிழ்க்காப்பியம். 16-ஆம் நூற்றாண்டில் தோன்றியது.[3]

இதன் ஆசிரியர் பெயர் ‘வீரன்’.[4] இவரைக் ‘கவிராசர்’ எனச் சிறப்புப்பெயரால் அழைப்பர். [5] ஊர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நல்லூர். இதனைக் குலோத்துங்க சோழநல்லூர் என்றும் கூறுவர்.

நூல்[தொகு]

கவிராசரின் அரிச்சந்திர புராணத்துக்கு மூலநூலாக அரிச்சந்திர வெண்பா என்னும் நூலும் இருந்தது. அரிச்சந்திர புராணம் பத்துக் காண்டங்களைக் கொண்டது. 1215 பாடல்கள் இந்நூலில் உள்ளன.

பாடல்[தொகு]

சந்தப்பா[தொகு]

பெரும்புகழை பெறும்படி அருந்துயர் கெடும்படி பிரியம்பல வரும்படி யுளம்
விரும்பிய தனம்பெற மிகும்பெரு பதம்பெற விளங்கிய தவம்செய நெடும்
கரும்பவல் பெரும்பயன் தருகனி ரசங்கொடு கவர்ந்ததேன் உவந்தருள் புரிந்
இருங்கரி முகன்சிறு சதங்கையொடு கிண்கிணி இலங்கிய பதம்பெறு வனே [6]

மடக்கு[தொகு]

அறமி ருக்கும் மனத்தில் அனைவர்க்கும்
திறமி ருக்கும் புயத்தில் செழுஞ்சுடர்
நிறமி ருக்கும் படையின்கண் நீக்கமில்
மறமி ருக்கும் மடந்தையர் கண்ணினே [7]

நகர் நீங்கு படலம்[தொகு]

தொடைதுறந்து முடிதுறந்து பணிதுறந்து துடிமுரசம் துரந்து தாமக்
குடைதுறந்து வெண்கவரிக் குழாம்துறந்து கரிபரிதேர்க் குலம்து றந்து
கடைதுறந்து மறுகணைந்த காவலன்தன் திரிமுகத்தைகு கண்டோ ரெல்லாம்
அடையமனம் அழிந்துருகி அவரவரே முகத்தில்மறைந் தழுவார் ஆனார்[8]

இப்படியெல்லாம் மரபுவழியில் வந்த வளமான தமிழ்நடையை இந்நூலில் காணமுடிகிறது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. 1838 தணிகை சரவண பெருமாள் ஐயர் பதிப்பு. மற்றும் காஞ்சி குமாரசாமி தேசிகர் பதிப்பு
  2. பெரியபுராணம் என்பதை எண்ணுக.
  3. சாலிவாகன சகாப்தம் 1446. அதற்கு இணையான ஆங்கில ஆண்டு 1524.
  4. ‘நல்லூர் வீரக்கவிராயன்’ சோலைக்கண் கவிகள் குதிபாயும் நல்லூர் வீரக் கவிராசனே விருத்தக்கவி செய்தானே - நூலின் பாயிரம் 1
  5. நல்லூர்வாழ் வீரன் ஆக கவிராசன் கவியரங்கம் ஏற்றினானே – நூல் பாயிரம் 2
  6. பிள்ளையார் வணக்கம்
  7. நகர்ச்சிறப்பு
  8. அரசன் துறந்ததும் மக்கள் அழுகையும்

மேற்கோள்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, 2005

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிச்சந்திர_புராணம்&oldid=1114165" இருந்து மீள்விக்கப்பட்டது