அரிச்சந்திரன் கோயில் திருப்பணி திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரிச்சந்திரன் கோவில் என்றாலே உலகத்தில் வாழும் அனைத்து இந்துக்களுக்கும் நினைவிற்கு வருவது காசி (பனாரஸ்) என்னும் வாரணாசி நகரம் ஆகும். காரணம் என்னவென்றால் இந்துவாகப் பிறந்த ஒருவரின் சடலத்தை காசியில் கங்கைக் கரையில் அரிச்சந்திர மயானத்தில் எரித்தால் அவர்கள் சொர்கலோகம் அடைவார்கள் என்கிற நம்பிக்கையில் வசதி படைத்தவர்கள் இறந்தவுடன் பூத உடலை காசிக்கு எடுத்துச் சென்று அரிச்சந்திர மயானத்தில் எரியூட்டி அஸ்தியை கங்கையில் கரைக்கும் வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு ஊரிலும் மயானம் இருக்கின்றது. அப்படி இருக்கின்றபோது காசி நகர் மயானத்திற்கு அப்படி என்ன சிறப்பு? என்று அனைவரும் கேட்பதில் வியப்பொன்றும் இல்லை. உண்மையில் காசி நகர் மயானத்திற்கு சிறப்பு ஏற்பட்டதற்கு காரணம் அம்மயானத்தை ஒரு காலத்தில் அரிச்சந்திரன் காவல் காத்து விஸ்வநாதரின் நேரடி ஆசியும் பெற்று வரம் பெற்ற காரணத்தினால் தான் காசி மயானம் சிறப்பு பெறுகிறது. அந்த நாள் முதல், பூலோகத்தில் உள்ள அனைத்து மயானங்களையும் அரிச்சந்திரன் காவல் காக்கின்றார் என்ற தத்துவத்துடன் ஒவ்வொரு மயானத்திலும் அரிச்சந்திரன் கோவில்கள் அமைக்கப்பட்டு அரிச்சந்திரன் ஆலயத்தில் அபிஷேகம் செய்து, ஆசீர்வாதம் பெற்று அனுமதி பெற்ற பிறகே மயானத்துக்குள் நுழைந்து இறந்த உடலுக்கு ஈமச்சடங்குகள் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு விளங்கி வருகிறது.


அரிச்சந்திரன் கோயிலின் உயர்வுகள்[தொகு]

இந்து மயானம் ஒவ்வொன்றிலும் அரிச்சந்திரன் ஆலயம் இருக்கவேண்டியது கட்டாயமாகும். இந்துவாகப் பிறந்த அனைவரும் காசிக்குச் சென்று தகனம் செய்ய முடியாது. ஏனென்றால் மிகவும் வசதிபடைத்தவர்களால் மட்டுமே அத்தகைய செயலை செய்ய முடியும். வசதி படைத்தவர்களுக்கு இணையாக சாதாரண இந்துவின் உடலுக்கு ஈமச்சடங்கு செய்யவேண்டும் என்றால் அந்த மயானத்தில் அரிச்சந்திரன் கோவில் கண்டிப்பாக இருக்க வேண்டும். காசியில் நடப்பது போன்றே ஒவ்வொரு ஊர் மயானத்திலும் பிணத்தை எரியூட்டின பிறகு அதை ஆற்றில் கறைக்க வேண்டும் என்பதற்காகத் தான் பெறும்பாலான மயானங்கள் ஆற்றின் கரையோரத்தில் அமைக்கப்படுகிறது. ஆறு இல்லாத ஊர்களில் மயானத்தின் பக்கத்தில் கங்கைக்கு நிகரான திருக்குளம் அமைக்கப்பட்டிருக்கும். ஈமச்சடங்கு முடிந்தவுடன் அஸ்தியை அந்த தடாகத்தில் கரைத்து விட்டு புனித நீராடும் வழக்கம் தொன்றுதொட்டு விளங்கி வருகிறது.

உயர்வுகள் பல கொண்ட அரிச்சந்திரன் ஆலயங்கள் பல மயானங்களில் தற்பொழுது காணப்படவில்லை. பல மயானங்களில் அரிச்சந்திர வழிபாடும் நடைபெறுவதில்லை. தமிழகத்தில் உள்ள பெறும்பாலான மயானங்களில் அரிச்சந்திரனுக்கு ஆலயமோ, சிலையோ காணப்படுவதில்லை. ஆனால் அரிச்சந்திரன் வழிபாடு இன்றைக்கும் நடைபெற்று வருகிறது என்பது பெறும்பாலான தமிழர்களுக்குத் தெரியும்.

கால வெள்ளத்தால் தமிழ்நாட்டு கிராமங்களில் மயானத்தில் அரிச்சந்திரனுக்கு முறையான ஆலயம் இல்லாத நிலையில் சவத்தைக் கொண்டு வந்து மயானத்திற்கு முன் உள்ள ஏதாவது ஒரு " கருங்கல் " அருகே சடலத்தை கீழே இறக்கி வைத்துவிடுவார்கள். பிறகு அந்த கல்லை அரிச்சந்திரனாக பாவித்து அனைத்து விதமான பால், தயிர், பஞ்சாமிர்தம் பன்னீர், மஞ்சள், விபூதி போன்றவைகளால் அபிஷேகங்களெல்லாம் அக்கல்லிற்கு முறைப்படி செய்து அந்த அரிச்சந்திரனாக பாவிக்கப்பட்ட கல்லுக்கு விபூதி, சந்தனம் திலகமிட்டு மாலை சாற்றி ஆராதனை செய்வார்கள். பிறகு மயானக் காவலர் ஒரு மனிதன் இறந்தபிறகு அவன் எங்கு செல்வான்? அவனது ஆன்மா எத்தகைய துன்பங்களையெல்லாம் அடையும்? என்றும், புண்ணீய ஆத்மாக்கள் எத்தகைய உயர்வுகளெல்லாம் அடையும் என்றபடி விளங்கும் பாடலை ராகத்துடன் பாடுவார். பாடலின் முடிவில் " அரிச்சந்திரா வழிவிடு (மயானத்தைக் காவல் காக்கும் அரிச்சந்திர தேவரே! மயானத்திற்கு செல்ல வழி விடுங்கள்)", காளி கதவைத் திற (மயானத்திற்கு போகும் வழியில் நின்று கொண்டிருக்கும் மயான தேவதையே! மயான காளியே மயானத்தின் கதவை சற்று திறவு செய்யுங்கள்) என்னும் வரிகளுடன் முடியும். இதன் பிறகுதான் மயானத்தின் உள்ளே சென்று எரிக்கவோ அல்லது புதைக்கவோ செய்யவேண்டும். தர்மநீதி தவறாமல் முறைப்படி மேற்கண்ட வழிகளின்படி ஈமச்சடங்குகள் செய்தால் தான் அந்த ஆன்மாவிற்கு நல்ல கதி கிடைக்கும்.

ஒரு மனிதன் இறந்த பிறகு 13,14,15,16ஆம் நாளில் இறந்தவரின் ஆன்மா இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகவும், பிதுர்லோகத்தில் உள்ள தனக்கு முன் இறந்த ஏழு தலைமுறையினரின் குடும்பத்தினருடன் சேர்ந்து சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக காரிய சடங்குகள் கண்டிப்பாக செய்யப்பட வேண்டும். காரியம் செய்யும் போது மயானத்திற்கு சென்று அரிச்சந்திரனுக்கு முறைப்படி அபிஷேகம் செய்து ஆராதனை செய்து இறந்தவருக்கு கொள்ளி வைத்தவர் வழிபாடு செய்ய வேண்டும். இறந்தவர் நல்ல கதிக்குப் போய் சேரவேண்டும் என்றும் அதற்கு " அரிச்சந்திரரே! தாங்கள் ஆசி செய்ய வேண்டும் " என்று வேண்டிக் கொண்ட பிறகு தான் தகனத்தன்று நீராடிய கங்கை (ஆறு அல்லது குளத்தின்) கரையில் பிண்டங்கள் செய்வித்து பிதுர் தேவர்களை வரவழைத்து முறைப்படி வேள்விகள் செய்து பிதுர்களுக்கு தர்பணம் செய்து இறந்தவருக்கு ஒரு பிண்டத்தை தானம் செய்து வழிபாடு செய்வதன் மூலம் பிண்ட தேகம் பெற்று இறந்தவரின் ஆன்மா எமலோகம் அடையும் என்று நம்பப்படுகிறது.

எனவே அரிச்சந்திரன் வழிபாடு இறந்த பிரேதத்தை எரியூட்டுவதற்கு முன்பு ஒரு முறையும், காரியம் தர்பணம் செய்யும் நாளில் இரண்டாம் முறையும் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். ஆனால், நாம் அரிச்சந்திர வழிபாட்டின் முக்கியத்துவம் அறியாமல் ஈமச்சடங்குகளையும், காரிய சடங்கு முறைகளையும் செய்கிறோம். கால வெள்ளத்தால், கலாச்சார சீரழிவினால் மிகமிக சிறப்பு பெற்ற அரிச்சந்திர வழிபாடு முற்றிலும் காணாமல் போய்விட்டது இந்து தர்மத்திற்கு ஒரு பேரிழப்பாகும். ஆனால், ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அடுத்த நிலையை அடைய விதிவகுப்பவர் அரிச்சந்திரரே என்பதில் எவ்வித ஐயமில்லை.


அரிச்சந்திரன் கோயில்கள் கட்டாயம் கட்டப்பட வேண்டியதின் அவசியங்கள்[தொகு]

ஒவ்வொரு மனிதனின் பிறப்பும் இறப்பும் மிக முக்கியமான அம்சங்கள்: பிறந்தவன் வாழ்கின்ற காலத்தில் எத்தனையோ பாவங்களையும், புண்ணியங்களையும் செய்கிறான். ஆனால் அவனவன் வினைப்பயனின் அடிப்படையில் அடுத்தநிலை அவனுக்கு அமையும் என்பது உண்மை. உயிரோடு இருக்கின்ற காலத்தில் எந்த புண்ணியங்களையும் செய்யவில்லை என்றாலும், தெய்வங்களை மதிக்கவில்லை என்றாலும் இறந்த பிறகாவது அவனது சடலம் அரிச்சந்திரனின் பாதத்தில் வைக்கப்படுகிறது. இறந்த பிறகாவது ஒரு புண்ணியவானின் ஆசிர்வாதம் அவனுக்கு கிடைக்க வேண்டும் என்றால் அங்கு அரிச்சந்திரன் கோவில் கட்டாயம் இருக்க வேண்டும். இறந்தவரின் உறவினர்களும் நண்பர்களும் திரளாக மயானத்திற்கு வருவார்கள். அவர்களில் பாவம் செய்தவர்கள் பலபேர் இருக்கலாம். அவர்களெல்லாம் ஒரு நீதிபோதனை பாடம் கற்றுக் கொண்டு வரும் காலத்திலாவது அரிச்சந்திரனைப் போன்று நேர்மையாக வாழவேண்டும் என்கிற எண்ணம் கொள்ள வேண்டுமானால் அரிச்சந்திரன் ஆலயம் ஒவ்வொரு மயானத்திலும் இருக்க வேண்டியது கட்டாயமாகும். நமது இந்து தர்மத்தின் கலாச்சார சின்னங்கள் நாளுக்கு நாள் அழிந்து வருகின்ற .காரணத்தினால் தான் வருங்கால தலைமுறையினருக்கு தர்மத்தின் உயர்வுகள் தெரியாமல் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். நம் எதிர்கால தலைமுறையினர் தர்மத்துடன் அகிம்சையை பின்பற்றி வாழ வேண்டுமென்றால் அரிச்சந்திரன் ஆலயங்கள் போன்ற உன்னத தர்மச்சின்னங்கள் காக்கப்பட வேண்டும். எனவே அழிந்துவிட்ட அரிச்சந்திரன் கோயில்கள் ஒவ்வொரு மயானத்திலும் கட்டாயம் கட்டப்பட வேண்டும்.


அரிச்சந்திரன் கோயில்களின் திருப்பணிகள்[தொகு]

முக்தி தரும் நகர் ஏழனுள் முதலாம் காஞ்சி மாநகரில் வாழும் " ஸ்ரீ பாஸ்கர மகரிஷி " என்னும் தர்மவான் " ஸ்ரீ காகபுஜண்டர் அறக்கட்டளை " (Sre Kagabujandar Charitable Foundation) என்னும் அறக்கட்டளையை ஏற்படுத்தி மயானங்கள் தோறும் அரிச்சந்திரன் ஆலயங்கள் அமைப்பதையே தன் வாழ்நாளின் தர்மமாக நினைத்து மயானம் தோறும் அரிச்சந்திரன் ஆலயங்கள் கட்டிக்கொண்டு முறைப்படி திருக்குட நன்னீராட்டு விழாவும் மண்டல நன்னீராட்டு விழாக்களும் செய்து கொண்டு வருகிறார். இதுவரை தமிழகத்தில் காஞ்சீபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களின் 56 கிராமங்களில் அரிச்சந்திரன் ஆலயங்கள் அமைத்திருக்கின்றார். பூலோகத்தில் உள்ள அனைத்து மயானங்களிலும் அரிச்சந்திரன் ஆலயங்கள் அமைக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டு இயங்குகிறார். இந்த தர்ம நிலையில் முதல் படியாக 1008 - கிராம மயானங்களில் அரிச்சந்திரன் ஆலயம் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்றது. உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் மற்றும் இந்து அறக்கட்டளைகள் உயரிய திட்டத்திற்கு நன்கொடைகள் வழங்கினால் பூலோகத்த்ல் ஒரு உயரிய தர்மம் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் உலக அழிவுகள் தவிர்க்கப்படும் என்பது பேருண்மையாகும்.


அரிச்சந்திரன் கோயில் திருப்பணிக்கு உபயம் செய்பவர்கள் பெறும் உயர்வுகள்[தொகு]

அரிச்சந்திரன் கோவில் திருப்பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு நன்கொடை அளிப்பவர்கள் அளவறியா நன்மைகளைப் பெறுவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பஞ்சமா பாதகங்கள் செய்தால் கூட அரிச்சந்திரன் திருப்பணி செய்தால் அவர்களின் பாவம் விமோசனமாகும். அரிச்சந்திரன் நவகிரகங்களாலும் சோதிக்கப்பட்டு தன் நாட்டை இழந்தார், நாட்டு மக்களை இழந்தார், மனைவியை இழந்தார், மகனையும் இழந்தார், தன்னையே புலையனிடம் அடிமையாக விற்றார், மயானத்தில் காவல் காத்தார், எல்லாவற்றையும் இழந்தும் சத்தியத்தையும் தர்மத்தையும் மட்டும் கடைசிவரை இழக்கவில்லை. எனவே, பரமேஸ்வரன் அவருக்கு மயானத்தில் காட்சி அளித்து மீண்டும் நாட்டை கொடுத்தார், நாட்டு மக்களைக் கொடுத்தார், மனைவியை திரும்பக் கொடுத்தார், இறந்த குழந்தையை பிழைக்க வைத்துக் கொடுத்தார், மீண்டும் மகுடம் சூட்டினார்.

பல்லாயிரம் சதுர்யுக ஆண்டுகளுக்கு தர்மத்தின் தலைவனாக எல்லா உலகத்திலும் வாழும் வரம் கொடுத்தார். எனவே திருமணம் ஆகாதவர்கள், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு கொண்டவர்கள், உத்தியோகம் இழந்தவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்ட நாள் நலியினால் துன்பப்படுபவர்கள், ராஜாங்கத்தில் பதவி இழந்தவர்கள், அரசியலில் பதவி இழந்தவர்கள் போன்றவர்களுக்கெல்லம் அரிச்சந்திரன் விமோசனம் தந்து இழந்ததை மீண்டும் கொடுப்பார். அரிச்சந்திரன் ஒரு சத்தியவான் எனவே கேட்டவர்களுக்கு கேட்டவுடன் இல்லை என்று சொல்லாமல் கட்டாயம் கொடுப்பார்.

(1). ஓர் அரிச்சந்திரன் கோவில் நன்கொடை அளிப்பவர்களின் திருமண, புத்திர, தொழில் பிரச்சினைகள் நீங்கி நலமுடன் வாழ்வர்.

(2). மூன்று அரிச்சந்திரன் கோவில் நன்கொடை அளிப்பவர்கள் நல்ல திருமண வாழ்வு, புத்திரர்களின் மேலான வாழ்வு போன்றவைகளை அனுபவிப்பதுடன் தனக்கு பிறகு வரும் மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையையும் மலரச் செய்வார்கள். இவர்கள் செய்யும் புண்ணியத்தின் பலன் தனக்கு முன் இறந்த மூன்று தலைமுறையினரையும் சேர்ந்து அவர்களுக்கும் உயர்வை அளிக்கும்.

(3). ஐந்து அரிச்சந்திரன் கோவில் நன்கொடையாளர்கள் பூர்வபுண்ணியம் பலம் பெற்று தானும் தன் பின்னால் வரும் ஐந்து தலைமுறையினரும் நலமாக வாழ்வதுடன் தானும் பன்சாட்சர பொருளாக விளங்கக்கூடிய சிவனுடன் ஐக்கியமாகி சாலோகம் என்னும் முதலாம் படி முக்தியை அடைவார்கள். இவர்கள் செய்யும் புண்ணியத்தின் பலன் தனக்கு முன் இறந்த ஐந்து தலைமுறையினரையும் சேர்ந்து அவர்களுக்கும் உயர்வை அளிக்கும்.

(4). ஏழு அரிச்சந்திரன் திருக்கோயில் திருப்பணி நன்கொடையாளர்கள் பூலோகத்தில் அரசனுக்கு நிகராக வாழ்வதுடன் பல புண்ணியங்களை செய்து பேரும் புகழும் பெறுவார்கள். இவர்கள் செய்யும் புண்ணிய பலன்களினால் தனக்குப் பின்னால் வரும் ஏழு தலைமுறையினரும் மிக செல்வ செழிப்புடன் குறைவில்லாமல் தர்மவான்களாக நோய்நொடி இல்லாமல் வாழ்வார்கள். ஏழு அரிச்சந்திர தர்மத்தின் பலன் தனக்கு முன் இறந்துபோன தன் மூதாதையரான ஏழு தலைமுறையினரையும் சேர்வதன் மூலம் முன்னேழு தலைமுறையினரும் புண்ணியம் பெற்றும் சிவலோ கம் அடைவார்கள். இவர் இப்பிறவியில் குறையில்லாமல் வாழ்ந்து மோட்ச லோகத்தின் இரண்டாம் படியான சாமிபம் என்கிற இறைவனுக்கு சம ீபத்தில் இருக்கக் கூடிய மோட்ச நிலையை அடைவர்.

(5). பத்து அரிச்சந்திரன் கோயில் திருப்பணி நன்கொடையாளர்கள் இப்பிறவியில் எல்லா உயர்வுகளையும் அனுபவிப்பதுடன் இறந்த பிறகு அவதார புருஷனாக எல்லோராலும் மதிக்கப்பட்டு தெய்வத்திற்கு நிகரான அம்சத்தைப் பெறுவார். இவருக்கு பின் மற்றும் பத்து தலைமுறையி னரும் இவன் செய்யும் தர்மத்தின் பலனுடனும், புகழுடனும், பொருளுடனும் வாழ்வாங்கு வாழ்வதுடன் இவனது குலம் குருகுலம் என்று பத்து தலைமுறை வரை உலகத்தால் பேசப்படும். மோட்சத்தின் மூன்றாம் படியான சாரூபம் என்னும் தெய்வீக ரூபம் பெற்று பல்லாண்டு காலம் தேவலோகத்தில் வசிப்பார்கள். பத்து அரிச்சந்திர தர்மத்தின் பலன் தனக்கு முன் இறந்துபோன தன் மூதாதையரான பத்து தலைமுறையி னரையும் சேர்வதன் மூலம் முன் பத்து தலைமுறையினரும் புண்ணியம் பெற்றும் சிவலோகம் அடைவார்கள்.

(6). நூற்று எட்டு அரிச்சந்திரன் கோவில் திருப்பணியாளர்கள் இப்பிறவியில் அரசனைப் போல் வாழ்வார்கள் அல்லது அரசனாக வாழ்வார்கள். இழந்த பதவியை மீண்டும் பெற்று, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வாழ்வார்கள். தெய்வலோகத்திலும் பதவி பெற்று தேவர்களின் ஒரு பிரி விற்கு தலைமை வகிக்கும் நிலையையும் பெற்று தேவ அரசனாக வாழ்வதுடன் மோட்சத்தின் நான்காம் படியான (கடைசி படியாக) சாயுச்சியம் என்னும் இறைவனோடு கலக்கும் முழு முக்தியை அடைவதுடன் பிறவியின் பெரும் பயனை அடைவதுடன் பிறவியிலா பெருவாழ்வும் அடைவார்கள். இவர்களின் தலைமுறையில் இவருக்கு பின் வரும் 108 தலைமுறையினரும் அரசனுக்கு நிகராக பேரும் புகழும் தனமும் செல்வாக்கும் பெற்று வாழ்வார்கள். இவர்களின் குலம் தெய்வகுலம் என்று உலகத்தாரால் பேசப்படும்.

(7). ஆயிரத்து எட்டு அரிச்சந்திரன் கோயில் திருப்பணிக்கு நன்கொடை அளிப்பவர்கள் பூலோகத்தில் வாழும் போதே தெய்வமாக வழிபடுவா ர்கள். மனித ரூபத்தில் உள்ளவரை உலகம் தெய்வமாக வழிபடும். தெய்வத்திற்கு கிடைக்கும் அனைத்தும் உயர்வுகளையும் பெறுவார்கள். ஜீவ நிலையிலேயே (ஜீவ சமாதி) இறைவனை அடைவதுடன் தான் விரும்பிய வகையில் தேவர்களுக்கு தலைமை பதவி பெற்று இந்திரனுக்கு சமமா க தேவலோகத்தில் தேவர்களுக்கு தலைமை வகித்து பல கற்பகாலங்கள் தேவலோகத்தில் தவம் பெற்று வாழக்கூடிய பாக்கியத்தை பெறுவர். இவர்களது வருங்கால தலைமுறையினர் பல தெய்வீகத் திருப்பணிகளில் ஈடுபட்டு புண்ணியம் பெற்று குறைவில்லாமல் வாழ்வார்கள். பூலோ கத்தில் வாழும் காலத்தில் அட்டமாசித்துகளிலும் வல்லமை பெற்று சித்தனுக்கு சித்தனாய், குருவிற்கு குருவாய் நீடூடி வாழ்வார்கள். இவர்களுக்கு நிகர் பூலோகத்தில் யாரும் இல்லை எனும் நிலையை அடைவார்கள்.

அரிச்சந்திரன் திருப்பணி வாழும் மக்களுக்கு மட்டும் அல்லாமல் இறந்த ஆன்மாக்களுக்கும் உயர்வு அளிக்கும் சர்வ வல்லமை படைத்தாகும். உங்கள் தாய், தந்தை, பாட்டன், பாட்டி, அண்ணன், தம்பி, தங்கை போன்ற ரத்த உறவினர் யாராவது அண்மையில் இறந்ததிருக்கலாம். அப்படி இறந்தவர்கள் தேவையான புண்ணிய பலம் இல்லாமல் சூன்ய திதி காலத்தில் உயர்வு நிலை பெற முடியாமல் பேய், பிசாசாக சுற்றிக் கொண்டிருக்கலாம். சிலர் பிதுர்லோகத்தில் அடுத்த பிறவி எடுப்பதற்கான புண்ணிய பலம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கலாம். சிலர் நரக லோகத்தில் வதைபட்டுக் கொண்டிருக்கலாம். சிலர் மோட்சம் அடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கலாம். மேற்கண்ட குறைபாடுடன் ஏதேனும் கொண்டு உங்கள் ரத்த உறவினர்களின் ஆத்மா தத்தளித்துக் கொண்டிருந்தால் அவர்களின் திருப் பெயரால் சங்கல்பம் செய்து ஓர் அரிச்சந்திரன் கோயில் உபயத்தினை நீங்கள் செய்தால் 48 நாட்களில் (ஒரு மண்டல காலத்தில்) அந்த ஆன்மாக்கள் வேண்டிய வரத்தை அரிச்சந்திரன் அருளால் பெறும் என்பது பேருண்மையாகும்.

அரிச்சந்திரன் கோயில் அமைக்க செய்ய வேண்டிய வழிமுறைகள்[தொகு]

" ஸ்ரீ காகபுஜண்டர் அறக்கட்டளை (Sre Kagabujandar Charitable Foundation)" உங்களது அரிச்சந்திர புண்ணியத்தை நடைமுறைபடுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தும் செயலை செய்து வருகிறது. உங்களிடம் உரிய நன்கொடை பெற்று ஒரு கிராமத்தை தேர்வு செய்து அந்த கிராமத்தின் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அவர்களின் முழு ஒத்துழைப்போடு சித்தர் ஆகமசாஸ்திரப்படி மயானத்தின் அருகில் அரிச்சந்திரன் ஆலயம் கட்டிமுடிக்கப்படும். பிறகு உபயதாரருக்கு முறையாக கும்பாபிஷேக நாள் மற்றும் நிகழ்ச்சி நிரல் விபரங்கள் அனுப்பிவைப்பதுடன் உபயதாரர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவார்கள். உபயதாரர் வெளிநாடுகளிலோ அல்லது வெளி மாநிலத்திலோ இருக்கும் பட்சத்தில் அவர்கள் நேரடியாக கலந்து கொள்ள முடியாத பட்சத்தில் முழு நிகழ்ச்சியையும் உபயதாரர் சார்பாக அறக்கட்டளை நிர்வாகம் செய்து முழு நிகழ்ச்சிகளையும் வீடியோ பதிவு செய்து நிகழ்ச்சி முடிந்த பிறகு வீடியோவும் பிரசாதமும் உபயதாரருக்கு அனுப்பி வைக்கப்படும். உபயதாரரின் பெயர் அக்கோயிலின் கல்வெட்டில் பத்திக்கப்படும்.

கும்பாபிஷேகம் இரண்டு நாள் நிகழ்ச்சியாக நடைபெறும். முன் நாள் மாலைப் பொழுதில் அரிச்சந்திரன் சிலை கரிக்கோல வலமாக ஊரை சுற்றி வந்து மாலை நேரம் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டு முறைப்படி திரிபந்தனதின் மேல் அரிச்சந்திர மகா யந்திரதின் மேல் பிரதிஷ்டை செய்யப்படும். பிறகு கலசஸ்தாபனம் செய்து வைதீக முறைப்படி அரிச்சந்திரன் சிலைக்கு பிராண நேத்திரம் அளிக்கப்படும். பிறகு முறைப்படி உரிய பலிகளெல்லாம் அளிக்கப்படும். பிறகு அன்று இரவு 10மணியளவில் அவ்வூரில் " சம்பூரண அரிச்சந்திரா நாடகம் " ஆரம்பமாகும். பிறகு விடியவிடிய நாடகம் தொடர்ந்து மறுநாள் சுமார் 6மணி அளவில் அரிச்சந்திரா நாடகம் முடிந்தவுடன் அரிச்சந்திரன், சந்திரமதி, பார்வதி, பரமேஸ்வரன் ஆகிய இந்த நான்கு தேவர்களும் வேடத்தை கலைக்காமல் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து மயானத்தை அடைந்து இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால ஹோமங்கள் முடிந்தவுடன் பூரண கலசம் ஏந்தி நான்கு தேவர்களும் அரிச்சந்திரனுக்கு புனித நீர் அபிஷேகம் செய்து நேரடியாக திருக்குட நன்னீராட்டு விழாவை நடத்தி வைப்பார்கள். பொதுமக்களாகிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் பெருந்திரளாக வந்து புனித நீர் ஆசி பெற்று விபூதி பிரசாதம் பெற்று அரிச்சந்திரனுக்கு படைக்கப்பட்ட அன்னதான நெய்வேத்தியத்தை பிரசாதமாகப் பெற்று உண்டு ஆசீர்வாதம் பெற்று செல்வார்கள்.

திருக்குட நன்னீராட்டு விழா முடிந்தவுடன் தொடர்ந்து 48 நாட்கள் அரிச்சந்திர பகவானுக்கு மண்டல பூசை நடைபெறும். பிறகு, 48வது நாள் மீண்டும் வேள்விகள் செய்து கலசத்தாபனம் செய்து சகல அபிஷேகத்துடன் பக்தர்கள் புடைசூழ மண்டல குடமுழுக்கு விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெறும். மண்டல குடமுழுக்கு அன்று நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள், நீண்ட நாட்கள் கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்பவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், பதவியை இழந்தவர்கள், செல்வத்தை பறிகொடுத்தவர்கள் போன்றவர்கள் எலுமிச்சை கனி பிரசாததை அரிச்சந்திரனின் பாததில் வைத்து ஆசிபெற்று எடுத்து சென்று உண்பதம் மூலம் வேண்டியவைகளைப் பெற்று மகிழ்வுடன் வாழ்வார்கள். மேற்கண்ட தெய்வீக விவரங்கள் " ஸ்ரீ காகபுஜண்டர் ஓலைச்சுவடி நூலான ஆதிசிவ ரகசியத்தில் " சொல்லப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் மற்றும் வெளி இணைப்புகள் :[தொகு]