உள்ளடக்கத்துக்குச் செல்

அரிகே ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிகே ராமசாமி
Arige Ramaswamy
பிறப்பு1885
இராமன்கோல், ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு23 சனவரி 1973
ஐதராபாத்து (இந்தியா), இந்தியா
பணி
வாழ்க்கைத்
துணை
இராசம்மா (1921) இலலிதாபாய் (1929)

அரிகே ராமசாமி (Arige Ramaswamy) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர், அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் ஐதராபாத்து சமசுத்தானத்தின் இராமன்கோல் என்ற இடத்தில் 1885 ஆம் ஆண்டு அரிகே பலையா என்பவருக்கு மகனாக மாலா குடும்பத்தில் இவர் பிறந்தார். தற்பொழுது இப்பகுதி ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் செகந்திராபாத்து நகரமாக அறியப்படுகிறது. நிசாமின் இரயில்வேயில் பயணச்சீட்டு பரிசோதகராகவும் பணியாற்றினார்.[1]

அசைக்க முடியாத உள் அமைதி மற்றும் சுய உணர்தலை வலியுறுத்தும் ஒரு பழங்கால, முழுமையான இந்தியத் தத்துவ சித்தாந்தத்தைப் பின்பற்றுபவராகவும், பிரம்ம சமாசத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தார். சுனிதா பால சமாச்சத்தை நிறுவி, தலித் மக்களிடையே சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டார்.

இயக்கம்

[தொகு]

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தலித்துக்களை ஒருங்கிணைத்த பாக்ய ரெட்டி வர்மா, எசு. வெங்கட் ராவ் மற்றும் பிற ஆர்வலர்களுடன் இணைந்து பணியாற்றினார்.[2] மாதிகா இனத்தவர்களின் சமூக-பொருளாதாரப் பின்தங்கிய நிலையை உணர்ந்து, அவர்களின் நலனுக்காக அருந்ததியர் சங்கத்தை நிறுவினார்.

மாதிகா சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனுக்கும் மாலா சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இவர் திருமணம் செய்து வைத்தார். இதற்கு பாக்கிய ரெட்டி வர்மா மற்றும் சமூக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.[3] 1922 ஆம் ஆண்டில், ஆதி இந்து இயாதயோன்னதி சபையை நிறுவினார்.

அரசியல்

[தொகு]

இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து தெலங்கானா காங்கிரசின் இணைச் செயலாளரானார் மாநில அரசாங்கத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தார். 'நூலக' இயக்கத்துடனும் தொடர்புடையவராக இருந்தார்.[4]

1973 ஆம் ஆண்டு சனவரி மாதம் 23 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத்து நகரத்தில் காலமானார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Kshīrasāgara, Rāmacandra (1994). Dalit Movement in India and Its Leaders, 1857-1956 (in ஆங்கிலம்). M.D. Publications Pvt. Ltd. p. 166. ISBN 978-81-85880-43-3.
  2. Sachdeva, Vivek; Pradhan, Queeny; Venugopalan, Anu (2019-04-09). Identities in South Asia: Conflicts and Assertions (in ஆங்கிலம்). Taylor & Francis. ISBN 978-0-429-62779-8.
  3. Teltumbde, Anand (2020-01-31). Hindutva and Dalits: Perspectives for Understanding Communal Praxis (in ஆங்கிலம்). SAGE Publishing India. ISBN 978-93-81345-51-1.
  4. India, The Hans (2017-12-16). "Highly Decorated Personalities". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2020-06-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிகே_ராமசாமி&oldid=4450428" இலிருந்து மீள்விக்கப்பட்டது