அரிஃபா ஜான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Arifa Jan
பிறப்பு1987
தேசியம்இந்தியா
அறியப்படுவதுreviving handicrafts in India

ஆரிஃபா ஜான் (Arifa Jan) (பிறப்பு 1987கள்) இந்தியாவின் காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த கம்பளி தயாரிப்பதற்கான ஆர்வலர் ஆவார். இவருக்கு 2020 சனவரி 8 அன்று நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கை[தொகு]

இவர் 1987களில் பிறந்தார். நாம்தா என்று அழைக்கப்படும் கம்பளி தயாரிக்கும் காஷ்மீர் கலையை புதுப்பிப்பதில் இவர் அறியப்படுகிறார். [1] ஸ்ரீநகரின் கைவினை மேம்பாட்டு நிறுவனத்தில் பட்டம் பெற்ற இவர், நாம்தா ஜவுளி சார்ந்த திட்டத்தில் ஈடுபட்ட்டுள்ளார். [2] 11ஆம் நூற்றாண்டிலிருந்து நாம்தா விரிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. அவை நெய்யப்படுவதில்லை. ஆனால் கைகளால் உருவாக்கப்படுகின்றன. கம்பளி இழைகளின் அடுக்குகள் ஒன்றாக சேர்த்து பின்னர் பிரகாசமாக பூத்தையல் முறையில் செய்யப்படுகின்றன. ஸ்ரீநகரின் பழைய பகுதிகள் இதற்கு பெயர் பெற்றவை. [3]

பணி[தொகு]

அவர் 25 பணியாளர்களைக் கொண்டு மூன்று உற்பத்தி செய்யும் மையங்களை உருவாக்கியுள்ளார். மேலும் 100 பெண்களுக்கு இந்த விரிப்புகளை தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரின் பழைய பகுதியில் செகிதாஃபர் என்ற இடத்தில் முதலில் ஒரு உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீநகர், நூர்பாக் மற்றும் நாவா கடல் ஆகிய இரண்டு பகுதிகளிலும் இதே போன்ற அமைப்புகளை உருவாக்கினார். [2]

2020 ஆம் ஆண்டில் அனைத்துலக பெண்கள் நாளல் நாரி சக்தி விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி ஜான் முன் வரிசையில், வலது ஓரம்

2020 ஆம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தன்று இவர் இந்தியப் பிரதமரின் டுவிட்டர் கணக்கில் இவர் இடம் பெற்றார். [4] அன்றைய தினம் இவரது பெயரில் "அற்புதமான ஏழு" என்று பிரதமர் டுவிட் செய்த ஏழு பேர்களில் இவரும் ஒருவர். [5] குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இவருக்கு நாரி சக்தி விருது விருதை வழங்கியபோது இவரது பணி அங்கீகரிக்கப்பட்டது. புது தில்லியில் நடந்த சர்வதேச மகளிர் தினத்தன்று இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arifa Jan's journey: From reviving 'Namda' art to Nari Shakti Puraskar". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-03-08. பார்க்கப்பட்ட நாள் 2020-04-09.
  2. 2.0 2.1 "Arifa Jan's journey: From reviving 'Namda' art to Nari Shakti Puraskar". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-03-08. பார்க்கப்பட்ட நாள் 2020-04-09.
  3. "Namda - The traditional felted craft of Kashmir". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-02-17. பார்க்கப்பட்ட நாள் 2020-04-09.
  4. "Meet the 7 women achievers who took over PM Modi's social media accounts on Women's Day: PM Modi's 'magnificent seven'". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.
  5. Dainik Bhaskar Hindi. "Women's Day 2020: President Kovind awarded Nari Shakti Puraskar to Bina Devi and many women | Women's Day 2020: 103 वर्षीय मान कौर को नारी शक्ति पुरस्कार, 'मशरूम महिला' भी सम्मानित - दैनिक भास्कर हिंदी". bhaskarhindi.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிஃபா_ஜான்&oldid=3400281" இலிருந்து மீள்விக்கப்பட்டது