அராடைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அராடைட்டு (Aradite) என்பது BaCa6[(SiO4)(VO4)](VO4)2F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் மிகவும் அரிய ஒரு கனிமமாகும் [1][2]. அராடைட்டும் அதனுடைய பாசுபரசை ஒத்த அமைப்புக் கனிமமான சாடோவைட்டும் [3] ஆட்ரூரிம் என்ற நிலவியல் தோற்றத்தினை உருவாக்கும் செயல்முறையில் [1], பரலவாசு எனப்படும் வெப்பவெளியுரு மாற்றத்தினால் உருவாகும் பாறை வகைகளில் காணப்படுகின்றன. இவ்விரண்டு கனிமங்களும் நாபிமுசாயிட்டு கனிமத்தின் கட்டமைப்பை ஒத்த கட்டமைப்பைப் பெற்றுள்ளன. இம்மூன்று கனிமங்களின் கட்டமைப்பும் ஏட்ரூரைட்டின் கட்டமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளன [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Galuskin, E.V., Gfeller, F., Galuskina, I.O., Pakhomova, A., Armbruster, T., Vapnik, Y., Włodyka, R., Dzierżanowski, P., and Murashko, M., 2015. New minerals with a modular structure derived from hatrurite from the pyrometamorphic Hatrurim Complex. Part II. Zadovite, BaCa6[(SiO4)(PO4)](PO4)2F and aradite, BaCa6[(SiO4)(VO4)](VO4)2F, from paralavas of the Hatrurim Basin, Negev Desert, Israel. Mineralogical Magazine 79(5), 1073-1087
  2. "Aradite: Aradite mineral information and data". Mindat.org. 2016-03-02 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Zadovite: Zadovite mineral information and data". Mindat.org. 2016-03-08 அன்று பார்க்கப்பட்டது.
  4. Galuskin, E.V., Gfeller, F., Armbruster, T., Galuskina, I.O., Vapnik, Y., Murashko, M., Włodyka, R., and Dzierżanowski, P., 2015. New minerals with a modular structure derived from hatrurite from the pyrometamorphic Hatrurim Complex. Part I. Nabimusaite, KCa12(SiO4)4(SO4)2O2F, from larnite rocks of Jabel Harmun, Palestinian Autonomy, Israel. Mineralogical Magazine 79(5), 1061-1072
"https://ta.wikipedia.org/w/index.php?title=அராடைட்டு&oldid=2572900" இருந்து மீள்விக்கப்பட்டது