அரசின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அராசகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அரசின்மை அல்லது அராசகம் (Anarchism) என்பது அரசு, சமயம், நிறுவனம் போன்ற அதிகார மையங்களுக்கு எதிரான ஒரு அரசியல் கோட்பாடு ஆகும். மனித செயற்பாடுகளில் அரசை அல்லது அதிகாரத்தை மட்டுப்படுத்துவதை அல்லது இல்லாமல் செய்வதை இது நோக்கக் கொண்டது.

இதன் கருத்துருவுக்கான சொல் முதலில் ஆட்சியாளர் இன்றி எனப் பொருள்படும் கிரேக்கமொழியில் உருவாகி அதே பொருளுடன் வேறு மொழிகளுக்கும் பரவியது. அராஜகம் என்பது இதே பொருள் கொண்ட சமசுகிருதச் சொல்லாகும். அரசியலுக்கான சுருக்க ஆக்சுபோர்ட் அகரமுதலியில் (The Concise Oxford Dictionary of Politics) கொடுத்துள்ளபடி, அராஜகம் என்பது, இறுக்கமான அரசு இல்லாமல் ஒரு சமூகத்தை ஒழுங்கமைக்க முடியும் என்றும், ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் கருதும் ஒரு நோக்கு ஆகும். எனினும் பல்வேறு கருத்துநிலைகள் அரசின்மை கோட்பாட்டில் உள்ளன.

வரலாறு[தொகு]

மார்க்சிய எதிர்ப்பு[தொகு]

பல்வேறு இடதுசாரிகளும் அரசின்மைக் கோட்பாட்டாளர்களும் இணைந்து 1864 இல் முதலாம் தொழிலாளர் ஒன்றியத்தை அமைத்தனர். சில ஆண்டுகளிலேயே மார்க்சிய, சமவுடமை இடதுசாரியினருக்கும் அரசின்மைக் கொள்கையாளர்களுக்கும் இடையே வேறுபாடு வளர்ந்தது. எல்லா அதிகாரத்தையும், அரசுக் கட்டமைப்பையும் எதிர்த்தல் என்ற அரசின்மைக் கொள்கைக்கு மார்கிய கொள்கையாளர்கள் உடன்படவில்லை. அவர்கள் அதிகாரத்தை தொழிலாளர்கள் கைப்பற்ற வேண்டும் என்று கருதினர். அரசின்மைக் கொள்கையாளர்களுக்கு (Bakunin) அதிகாரம் புரட்சிவாதிகளையும், எல்லோரயும் மாசுபடுத்தும் என்றும், யார் அரசுக்கு வந்தாலும் அவர் சர்வதிகாரத்தை நோக்கி நகர்வார் என்றும் கூறினர். இந்த முக்கிய வேறுபாட்டால் அரசின்மையாளர்கள் 1872 இல் விலகினார்கள்.

சிந்தனைப் பிரிவுகள்[தொகு]

அரசின்மை கோபாடு பல கருத்து நிலைப்பாடுகளைக் கொண்டது. எந்த சட்டத்தையும், கொள்கையையும் பேணாமால் எல்லா அதிகாரத்தையும் எந்த வழியாலும் அழி என்ற நிலைப்பாடு Nechayev போன்றோரின் அரசின்மை. லியோ ரொல்சுரோய், Fernand Pelloutier போன்றோர் வன்முறை அற்ற வழிமுறைகளைக் கொண்டு ஒடுக்குமுறைகளை எதிர்க்க முயன்றனர். மக்சு இசுரேனர் போன்றோரின் அரசின்மை தனிமனிதரை முதன்மைப்படுத்தியது.

மாற்றுத் தீர்வுகள்[தொகு]

அரசு, சமயம், மற்றும் மற்றையை அதிகார மையங்ள், பொருளாதார சட்ட முறைமைகள் மனிதர்களின் சுதந்திரத்தை ஒடுக்கும், சுரண்டும் கருவிகளாக அரசின்மை அணுகியது. அவற்றை எதிர்ப்பதுற்கு, அவை இன்றி வாழ்வதற்கு தீர்வுகளைத் தர அரசின்மை முயற்சி செய்கிறது.

எதிர்த்தல்[தொகு]

சிறிய குமுகங்கள்[தொகு]

ஒடுக்குமுறைகளை எதிர்க்க மார்க்சிய சிந்தனை அரசை தொழிலாளர்கள் கைப்பற்ற வேண்டும் என்று கூறியது. அரசை யார் வைத்திருந்தாலும், அது ஒடுக்குமுறைக் கருவியாக மாறும் என்று கருதிய அரசின்மையாளர்கள் அதற்கு மாற்றாக சிறிய குமுகங்களைப் பரிந்துரைத்தார்கள். சிறிய குமுகங்களில் அதிகார அடுக்கமைவு இல்லாமல் செய்யலாம் எனப்பட்டது.

தமிழ்ச் சூழலில் அரசின்மை[தொகு]

சமூக அதிகார அடுக்கமைவால் மிகவும் பாதிக்கப்பட்ட தலித் சிந்தனையாளர்கள் பலர் அரசின்மை கருத்துக்களை கொண்டுள்ளனர். இவர்களின் "எதிர்க்கிறோம் அதலால் இருக்கிறோம்", "அடங்கமறு, அத்துமீறு" போன்ற பிடிவரிகள் இதற்கு எடுத்துக்காட்டு. ஈழத்தில் சிங்களப் பேரினவாத அரசாலும், இயக்கங்களாலும் பாதிக்கப்பட்ட சிலரும் அரசின்மை கொள்கையாளாராக உள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசின்மை&oldid=2309828" இருந்து மீள்விக்கப்பட்டது