அராகெர் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அராகெர் போர் (Battle of Arakere) என்பது மூன்றாவது ஆங்கில மைசூர் போர் நடந்த காலத்தில் 1791 ஆம் ஆண்டு மே மதம் 15 இல் மைசூரின் தலைநகரமான சிறீரங்கப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு சண்டையாகும். சார்லசு ஏர்ல் கார்ன்வாலிசு தலைமையில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் படைகளும் ஐதராபாத் நிசாமின் கூட்டணிப் படையினரும் இணைந்து சிறீரங்கப்பட்டினம் வந்து அராகெர் கிராமத்திற்கு அருகே காவிரியாற்றை கடக்க முயன்றனர். [மைசூர் ஆட்சியாளர், திப்பு சுல்தான் அங்கு ஒரு தற்காப்பு படையை நிறுவி நிலைப்படுத்திக் கொண்டார். காரன்வாலிசு தனது தொடக்க தாக்குதலை மே மாதம் 15 இல் தொடங்கி திப்புவை அவ்விடத்தில் இருந்து விரட்டினார். திப்புசுல்தான் சிறீரங்கப்பட்டினத்திற்கு பின்வாங்கினார். காரன்வாலிசு படையினரும் போருக்குப் பின்னர் உணவு பற்றாக்குறையால் பெங்களுருக்குப் பின்வாங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அராகெர்_போர்&oldid=2830289" இருந்து மீள்விக்கப்பட்டது