உள்ளடக்கத்துக்குச் செல்

அரவ ஸ்ரீதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரவ ஸ்ரீதர்
சட்டமன்ற உறுப்பினர்
ஆந்திரப் பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்கோரமுட்லா ஸ்ரீனிவாசுலு
தொகுதிகோடூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜனசேனா கட்சி

அரவ ஸ்ரீதர் (Arava Sreedhar) (பிறப்பு 1997)[1]ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கோடூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். இவர் ஜனசேனா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஸ்ரீதர், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஜனசேனா கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.[2][3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

ஸ்ரீதர் தற்போதைய அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கோடூரைச் சேர்ந்தவர். இவரின் தந்தை ஆரவ வெங்கடையா ஒரு விவசாயி. இவர் நந்தியாலில் உள்ள ராஜீவ் காந்தி நினைவு பொறியியல் கல்லூரியில் இளநிலை தொழில்நுட்பக் கல்வியினை முடித்தார்.[1]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

ஸ்ரீதர் 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஜனசேனா கட்சியின் வேட்பாளராகக் கோடூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 78,594 வாக்குகளைப் பெற்று, ஒய். எசு. ஆர் காங்கிரசு கட்சியின் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோரமுட்லா ஸ்ரீனிவாசுலுவை 11,101 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2][4] ஏப்ரல் 4, 2024 அன்று கட்சித் தலைவர் பவன் கல்யாண் தனது வேட்புமனுவை அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இவர் ஜன சேனா கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில் ஸ்ரீதர் தனது தலைவரின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டு இந்த இடத்தில் வென்றார்[5][6] பின்னர் நவம்பர் 12, 2024 அன்று கொறடாவாக நியமிக்கப்பட்டார்.[7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Arava Sreedhar(Janasena Party):Constituency- KODUR (SC)(KADAPA) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-06-22.
  2. 1 2 "Kodur Assembly Election Results 2024: Kodur Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday". India Today (in ஆங்கிலம்). Retrieved 2024-06-22.
  3. "Kodur (SC) Constituency Election Results 2024: Kodur (SC) Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-06-22.
  4. "Arava Sreedhar, JSP Candidate from Kodur Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Assembly Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-22.
  5. "Janasena: అభ్యర్థిని మార్చిన పవన్ కళ్యాణ్.. 3 రోజుల కింద చేరిన నేతకు టికెట్". Samayam Telugu (in தெலுங்கு). Retrieved 2024-06-22.
  6. Raghavendra, V. (2024-04-04). "A.P. Elections: Mandali Buddha Prasad is Jana Sena Party candidate for Avanigadda" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/ap-elections-mandali-buddha-prasad-is-jana-sena-party-candidate-for-avanigadda/article68028273.ece.
  7. "AP CM Naidu Appoints Chief Whips, Whips" (in en). 13 November 2024 இம் மூலத்தில் இருந்து 13 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241113173223/https://www.deccanchronicle.com/southern-states/andhra-pradesh/ap-cm-naidu-appoints-chief-whips-whips-1837719. பார்த்த நாள்: 13 November 2024.
  8. The Times of India (12 November 2024). "Andhra Pradesh govt names whips for assembly, council" இம் மூலத்தில் இருந்து 13 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241113173158/https://timesofindia.indiatimes.com/city/vijayawada/andhra-pradesh-government-appoints-new-whips-for-assembly-and-council/articleshow/115227312.cms. பார்த்த நாள்: 13 November 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவ_ஸ்ரீதர்&oldid=4447067" இலிருந்து மீள்விக்கப்பட்டது