உள்ளடக்கத்துக்குச் செல்

அரவிந்த பால பஜனோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரவிந்த பால பஜனோர்
அமைச்சர்-பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்தியா, இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
பதவியில்
19 ஆகத்து 1979  23 திசம்பர் 1979
பிரதமர்சரண் சிங்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
25 மார்ச்சு 1977  22 ஆகத்து 1979
முன்னையவர்மோகன் குமாரமங்கலம்
பின்னவர்ப. சண்முகம்
தொகுதிபுதுச்சேரி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1935-12-05)5 திசம்பர் 1935
புதுச்சேரி (நகரம்), இந்தியா[1]
இறப்பு20 மார்ச்சு 2013(2013-03-20) (அகவை 77)
ஐக்கிய நாடுகள்[2]
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
முன்னாள் மாணவர்டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை

அரவிந்த பாலா பஜனோர் (Aravinda Bala Pajanor) (5 திசம்பர் 1935 மார்ச் 2013) ஓர் இந்திய அரசியல்வாதியும், வழக்கறிஞரும் முன்னாள் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரும் ஆவார்.[3] இவர் புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலிருந்து 5வது மற்றும் 6வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரான இவர், மத்திய அமைச்சராகச் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிமுக அரசியல்வாதி ஆவார்.[4]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் நகரில் 5 திசம்பர் 1935 அன்று அப்பசாமி பஜனருக்கு மகனாகப் பிறந்தார். காரைக்கால் புனித மேரி மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் கல்லூரியிலும் சென்னை, இலயோலா கல்லூரியிலும் தனது கல்வியைப் பெற்றார்.[1] பின்னர் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பயின்றார்.

புதுச்சேரி விளையாட்டு குழுமத் தலைவராகவும், மாணவர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

அரவிந்த பால பஜனோர், பரீதா கஜலட்சுமியினை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவர் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். இங்கு வயது முதிர்வு காரணமாக 20 மார்ச் 2013 அன்று இறந்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 "Members Bioprofile". Parliament of India, Lok Sabha. 1935-12-05. Retrieved 2021-08-20.
  2. "24th March 2013". The Hindu. 2013-03-25. Retrieved 2021-08-20.
  3. "Council of Ministers (1947-2015)" (PDF). eparlib.nic.in.
  4. 1 2 "Former union minister Aravinda Bala Pazhanoor passes away". News18. 2013-03-23. Retrieved 2021-08-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்த_பால_பஜனோர்&oldid=4044805" இலிருந்து மீள்விக்கப்பட்டது