உள்ளடக்கத்துக்குச் செல்

அரவிந்த் ஶ்ரீனிவாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரவிந்த் ஶ்ரீனிவாஸ்
2024 டெக்கிரஞ்ச் டிஸ்ரப்ட் நிகழ்வில்
பிறப்புசூன் 7, 1994 (1994-06-07) (அகவை 32)
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியா
கல்விஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (இளநிலைத் தொழிற்நுட்பம், முதுநிலை தொழிற்நுட்பம்), கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) (முனைவர் பட்டம்)
ஆய்வேடுஉள்ளுணர்விற்கும் கட்டுப்பாட்டிற்குமான பிரதிநிதித்துவக் கற்றல் (2021)
ஆய்வு நெறியாளர்பீட்டர் அப்பீல்
அறியப்படுவதுஇணை நிறுவனர், பெர்ப்ளெக்ஸிட்டி செநு

அரவிந்த் ஶ்ரீனிவாஸ் (பிறப்பு: 7 ஜூன் 1994) என்பவர் இந்திய வம்சாவளி கணினி அறிவியலாளரும் தொழில் முனைவோரும் ஆவார். இவர் உரைவழித் தேடல் தொழில்நுட்பச் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான பெர்ப்ளெக்ஸிட்டி செநுவின் இணை நிறுவனராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் உலக அளவில் கவனம் பெறுகிறார்.[1][2]

இளமையும் கல்வியும்

[தொகு]

ஶ்ரீனிவாஸ் 1994ஆம் ஆண்டு சூன் 7இல் சென்னையில் பிறந்தார்[3][4] இவர் சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் மின்பொறியியல் துறையில் இரட்டை பட்டங்களைப் (இளநிலை மற்றும் முதுநிலை) பெற்றார்.[3] பின்னர் இவர் அமெரிக்க பெர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[5]

தொழில் வாழ்க்கை

[தொகு]

கல்வி பயிலும்போதே ஶ்ரீனிவாஸ் ஓபின்ஏஐ, கூகிள் பிரைன், டீப்மைண்ட் உள்ளிட்ட இயந்திரவழிக் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் ஆய்வுப் பொறுப்புகளில் இருந்துள்ளார்.[6][7]

2022இல் சொந்தமாக பெர்ப்ளெக்ஸிட்டி செநு என்ற நிறுவனத்தை டெனீஸ் யாரட்ஸ், ஜானி ஹோ மற்றும் ஆண்டி கொன்வின்ஸ்கி ஆகியோருடன் இணைந்து உருவாக்கினார். வழக்கமான தேடல் இயந்திரங்களுக்கு மாற்றாக இந்த நிறுவனம் செநு நுட்பத்தில் பதிலியந்திரத்தை உருவாக்கி நேரடியான பதில்களைப் பயனர்கள் கேள்விகளுக்குத் தரத் தொடங்கியது.[4][8][9] இவரின் தலைமையில் இந்நிறுவனம் கனிசமான முதலீடுகளைப் பெறத்தொடங்கியது. குறிப்பாக ஜெப் பெசோஸ்,[10] எல்ட் கில், நட் ஃப்ரைமென்,[11] மற்றும் என்விடியா[12][13][14] போன்ற முதலீடுகள் கவனம் பெற்றன. இந்நிறுவனம் ஜெர்மன் தொலைதொடர்பு நிறுவனத்துடன் இணைந்து செநு இணைந்த திறன்பேசிகளை உருவாக்குகின்றது.[1][15]

2024 திசம்பரில் இவர் ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமைக்கு காத்திருப்பதாகக் கூறினார்[16] இவருக்கு குடியுரிமை வழங்க வேண்டுமா என்ற விவாதத்தில் எலான் மசுக் 'ஆம்' என்றது அமெரிக்க குடிபெயர்வு முறை அப்போது பேசுபொருளானது.[17] இதே ஆண்டு டைம் இதழ் செயற்கை நுண்ணறிவு உலகில் செல்வாக்குள்ள நூற்றுவருள் ஒருவராகப் பட்டியலிட்டது.[18] இவருடன் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இணைந்து சீக்ரெட் மவுண்டைன் என்ற திட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.[19]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Peluso, Olivia (2025-03-12). "Who Is Aravind Srinivas, the Founder and CEO Behind $9B Perplexity AI?". Observer (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-05-10.
  2. Sharma, Nonika (2025-02-10). "Who Is Aravind Srinivas, CEO Who Has Challenged Elon Musk Over USAID" (in ஆங்கிலம்). NDTV. Retrieved 2025-05-10.
  3. 1 2 Adhikary, Mukesh (2024-03-01). "'I was depressed': Silicon Valley-based CEO on not getting admission in Computer Science at IIT Madras - 'I was depressed': Silicon Valley based CEO on not getting admission in Computer Science at IIT Madras BusinessToday". Business Today (in ஆங்கிலம்). Retrieved 2025-05-10.
  4. 1 2 Goode, Lauren. "Perplexity's Founder Was Inspired by Sundar Pichai. Now They're Competing to Reinvent Search". Wired (in அமெரிக்க ஆங்கிலம்). ISSN 1059-1028. Retrieved 2025-05-10.
  5. Ellery, Marni (2025-03-10). "Berkeley alum wants to 'make the planet smarter'". Berkeley Engineering (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-05-10.
  6. "Event: The Future of AI with Perplexity CEO Aravind Srinivas |…". Harvard Innovation Labs (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-05-10.
  7. Love, Julia; Anand, Priya (2023-03-28). "AI Search Startup Raises $26 Million to Offer Rival to Google". Bloomberg News. https://www.bloomberg.com/news/articles/2023-03-28/ai-search-startup-raises-26-million-to-offer-rival-to-google.
  8. "Report: Perplexity Business Breakdown & Founding Story | Contrary Research". research.contrary.com (in ஆங்கிலம்). Retrieved 2025-05-10.
  9. Jackson, Amber (2024-06-09). "Perplexity AI: A Startup Backed by Billion-Dollar Investors". technologymagazine.com (in ஆங்கிலம்). Retrieved 2025-05-10.
  10. O'Brien, Matt (2024-06-14). "Jeff Bezos-backed Perplexity AI wants to upend search business". Fortune (in ஆங்கிலம்). Retrieved 2025-04-16.
  11. Lunden, Ingrid (2024-04-23). "EXCLUSIVE: Perplexity is raising $250M+ at a $2.5-$3B valuation for its AI search platform, sources say". TechCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-05-10.
  12. Hu, Krystal; Biswas, Pritam (2024-01-04). "Search startup Perplexity AI valued at $520 mln in funding from Bezos, Nvidia". ராய்ட்டர்ஸ். Retrieved 2025-07-17.
  13. Temkin, Marina (2025-03-16). "Nvidia's AI empire: A look at its top startup investments". TechCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-05-10.
  14. Thompson, Patrick (2024-01-05). "Nvidia and Jeff Bezos back Perplexity AI in $73.6M round". CoinGeek (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-05-10.
  15. Bagalkote, Kaustubh (2024-12-19). "Jeff Bezos-Backed Perplexity Raises $500 Million, Tripling Its Valuation To $9 Billion As Competition With Google And OpenAI Heats Up - Alphabet (NASDAQ:GOOG), Alphabet (NASDAQ:GOOGL)". Benzinga (in English). Retrieved 2025-04-16.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  16. "Perplexity AI CEO says “still haven’t gotten” a green card amid immigration debate ahead of U.S. Presidential Election 2024" (in en-IN). The Hindu. 2024-11-01. https://www.thehindu.com/sci-tech/technology/perplexity-ai-ceo-says-still-havent-gotten-a-green-card-amid-immigration-debate-ahead-of-us-presidential-election-2024/article68819206.ece.
  17. "Indian-origin CEO asks 'Should I get a green card?' on X; Elon Musk’s reply sparks debate on US immigration". The Times of India. 2024-12-16. https://timesofindia.indiatimes.com/world/us/should-i-get-a-green-card-indian-origin-ceos-post-goes-viral-elon-musks-reply-sparks-debate-on-us-immigration/articleshow/116358904.cms.
  18. Perrigo, Billy (2024-09-05). "TIME100 AI 2024: Aravind Srinivas". TIME (in ஆங்கிலம்). Archived from the original on 2025-04-17. Retrieved 2025-06-23.
  19. "AR Rahman meets OpenAI’s Altman, Perplexity AI’s Arvind Srinivas for ‘Secret Mountain’ project". The Economic Times. economictimes. 25 July 2025. https://economictimes.indiatimes.com/tech/artificial-intelligence/ar-rahman-meets-openais-altman-perplexity-ais-arvind-srinivas-for-secret-mountain-project/articleshow/122898216.cms?from=mdr. பார்த்த நாள்: 15 August 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்த்_ஶ்ரீனிவாஸ்&oldid=4564982" இலிருந்து மீள்விக்கப்பட்டது