அரவிந்த் காம்ப்ளே
தோற்றம்
அரவிந்த் துளசிராம் காம்ப்ளே (Arvind Kamble)(28 பிப்ரவரி 1952 - 29 திசம்பர் 2009) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள உசுமானாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து எட்டாவது மக்களவைக்கு உறுப்பினராத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காம்ப்ளே மகாராட்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள உத்கிரில் பிறந்தார். இவர் உசுமானாபாத்திலிருந்து 9வது, 10வது மற்றும் 12வது மக்களவைக்கும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]
இறப்பு
[தொகு]காம்ப்ளே திசம்பர் 29, 2009 அன்று தனது 57 வயதில் பன்றிக் காய்ச்சலால் இறந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lok Sabha Members Bioprofile-". Retrieved 12 December 2017.
- ↑ "Former Lok Sabha MP dies of swine flu". https://zeenews.india.com/news/nation/former-lok-sabha-mp-dies-of-swine-flu_590983.html. பார்த்த நாள்: 30 July 2022.