அரவிந்து தாவே
அரவிந்து தாவே (Arvind Dave) முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரியும், இந்தியாவின் நான்கு மாநிலங்களின் முன்னாள் ஆளுநரும் ஆவார். இராசத்தான் மாநிலத்தின் உதய்பூர் நகரத்தைச் சேர்ந்த இவர்[1] 1940 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று பிறந்தார். 1999 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராகவும்,[2] 2003 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை மணிப்பூரின் ஆளுநராகவும்,[3] முறையே 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் குறுகிய காலத்திற்கு மேகாலயா மற்றும் அசாம் மாநிலங்களின் பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்தார்.[4][5]
1997 முதல் 1999 ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான 'ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின்' இயக்குநராகப் பணியாற்றினார். கார்கில் போர் மற்றும் இந்தியாவின் அணுசக்தித் திட்டமான ஆபரேசன் சக்தி என்ற சக்தி நடவடிக்கை ஆகியவற்றின் போது, இவ்வமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். உளவு அமைப்பின் இயக்குநராக இருந்த காலத்தில், 'கூட்டு உளவுத் குழுவிற்கும்' தலைமை தாங்கினார்.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Singh, Rahul (1 May 2000). "Udaipur Diary". Outlook. Retrieved 19 February 2010.
- ↑ "List of Former Governors". Government of Arunachal Pradesh. Retrieved 19 February 2010.
- ↑ "Past Governors". Raj Bhavan Manipur official website.
- ↑ Rao, Raghvendra (5 February 2010). "Second innings: Retired IPS men outshine IAS". Indian Express. Retrieved 19 February 2010.
- ↑ CHAUDHURI, KALYAN (4 January 2002). "Once more in Meghalaya". Frontline. The Hindu Group. Archived from the original on 11 January 2003. Retrieved 19 February 2010.
- ↑ "Who will succeed RAW chief Vikram Sood?". Rediff. 21 January 2003. Retrieved 19 February 2010.
- ↑ Bhushan, Ranjit (10 April 2010). "Given A Raw Deal?". Outlook. Retrieved 19 February 2010.