உள்ளடக்கத்துக்குச் செல்

அரவம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரவம்பட்டி
Kurumpoondi
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை மாவட்டம்
வட்டாரம்கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம்
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்1,092
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)

அரவம்பட்டி (Aravampatti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தரவக்கோட்டை வருவாய்த் தொகுதியில் உள்ள ஒரு கிராமமாகும்.[1]

மக்கள்தொகையியல்

[தொகு]

2001 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், அரவம்பட்டி கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 1,038 ஆகும். இம்மக்கள்தொகையில் 529 ஆண்களும் 509 பெண்களும் இருந்தனர். மொத்த மக்கள்தொகையில் 545 பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர்.

2011-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு மொத்தம் 265 குடும்பங்கள் வசித்தன. அரவம்பட்டி கிராமத்தின் மக்கள்தொகை 1,092 ஆக இருந்தது. இதில் 557 ஆண்களும் 535 பெண்களும் இருந்தனர்.

0-6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 134 ஆக இருந்தது. இது கிராமத்தின் மொத்த மக்கள்தொகையில் 12% ஆகும். அரவம்பட்டி கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 942 ஆகும். இது தமிழக மாநில சராசரியான 996 என்பதை விடக் குறைவு.

புதுக்கோட்டை மாவட்டத்தை விட அரவம்பட்டி கிராமம் அதிக எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. 2011-ஆம் ஆண்டில், அரவம்பட்டி கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 73.6% ஆகவும், புதுக்கோட்டையின் எழுத்தறிவு விகிதம் 68.6% ஆகவும் இருந்தது. இதில் ஆண் எழுத்தறிவு விகிதம் 83.2% ஆகவும், பெண் எழுத்தறிவு விகிதம் 63.62% ஆகவும் இருந்தது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Village Boundary Map". Archived from the original on 2015-05-25. Retrieved 2012-02-27.
  2. "Aravampatti Village Population, Caste - Gandarvakkottai Pudukkottai, Tamil Nadu - Census India". www.censusindia.co.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-10-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவம்பட்டி&oldid=4524700" இலிருந்து மீள்விக்கப்பட்டது