அரரியா
அரரியா | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°09′N 87°31′E / 26.15°N 87.52°E | |
நாடு | ![]() |
மாநிலம் | பீகார் |
பிரதேசம் | மிதிலை பிரதேசம் |
மாவட்டம் | அரரியா மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | அராரியா நகராட்சி |
ஏற்றம் | 47 m (154 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 79,021 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி,[1]மைதிலி மொழி |
• கூடுதல் மொழி | உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | BR-38 |
மக்களவை தொகுதி | அரரியா மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற தொகுதி | அரரரியா சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | https://araria.nic.in |
அரரியா (Araria), வட இந்தியாவின் பீகார் மாநிலத்தின் வடகிழக்கில், நேபாளம் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்த அரரியா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான பட்னாவிற்கு வடகிழக்கில் 322.கிலோ மீட்டர் தொலைவிலும்; பூர்ணியாவிற்கு வடக்கில் 45.9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதன் தெற்கில் பூர்ணியா மற்றும் மதேபுரா நகரங்களும், வடக்கில் கிசன்கஞ்சு நகரமும் உள்ளது. கோசி ஆறு அரரியா நகரம் வழியாகப் பாய்கிறது. [2]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 29 வார்டுகளும், 15,248 குடியிருப்புகளும் கொண்ட அரரியா நகரத்தின் மக்கள் தொகை 79,021 ஆகும். அதில் 42,136 ஆண்கள் மற்றும் 36,885 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 875 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 72.40% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 10.55 % மற்றும் 0.35 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 59.05%, இசுலாமியர் 40.11%, சமணர்கள் 0.59% மற்றும் பிற சமயத்தினர் 0.24% வீதம் உள்ளனர்.[3]
போக்குவரத்து
[தொகு]அராரியா கோர்ட் இரயில் நிலையம்[4]பூர்ணியா, கொல்கத்தா, பட்னா, அலகாபாத், கான்பூர், தில்லி போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. Retrieved 23 March 2019.
- ↑ "Bihar to change Kosi's course to save ancient site, says Nitish". www.downtoearth.org.in (in ஆங்கிலம்). Retrieved 2021-11-13.
- ↑ Araria Town Population Census 2011
- ↑ Arariya Court (ARQ) Railway Station