உள்ளடக்கத்துக்குச் செல்

அரனஅல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரனஅல்லி
Harana Halli
கிராமம்
நாடு இந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கருநாடகம்
மாவட்டம் சிமோகா மாவட்டம்
வட்டம் (தாலுகா)சிமோகா
மக்கள்தொகை
 (2001)
  மொத்தம்6,000
மொழிகள்
  அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
577416
தொலைபேசி குறியீடு(91) 8182
அருகிலுள்ள நகரம்சிமோகா

அரனஅல்லி (Harana Halli) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தில் உள்ள சிமோகா வட்டத்தில் அமைந்துள்ளது.[1][2] சிமோகா நகரத்திலிருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் உள்ளது. பிரூரிலிருந்து சாகராவுக்கு இயக்கப்படும் ரயில்கள் அரனா அல்லி ரயில் நிலையம் வழியாக செல்கின்றன. சிமோகா - தலகுப்பா ரயில் பாதை அரனா அல்லி வழியாக செல்வதனால் அங்கிருந்து எளிமையாக ஜோக் அருவி யை அடையலாம்.

மக்கள்தொகை

[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அரனா அள்ளியின் மக்கள் தொகை 5655 ஆகும், அதில் 2864 ஆண்கள் மற்றும் 2791 பெண்கள்.

கல்வி

[தொகு]

அரனா அள்ளியில், பல பள்ளிகள் உள்ளதால் இது ஒரு கல்வி மையமாக இருந்து வருகிறது, மேலும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கு வசதியாக அமைந்துள்ளது. இங்கு கன்னட மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகள் உள்ளன.

சாகுபடி மற்றும் கைவினைப்பொருட்கள்

[தொகு]

இப் பகுதியில் பல குளங்கள் உள்ளன. அக்குளங்கள் மழையினால் நிரம்புகின்றன, நெல், கேழ்வரகு, சோளம், இஞ்சி போன்ற முக்கிய பயிர்கள் இங்கு சாகுபடி செய்யப்படுகின்றன.

அரனா அள்ளி, குடிகாரிகே எனப்படும் களிமண்ணால் செய்யப்படும் பொம்மைகளுக்கு பிரபலமானது. பானைகள், விநாயகர் சிலைகள், சிலைகள் உள்ளிட்ட சிறிய பொருட்களைச் செய்தல் மற்றும் மரக் கைவினைப் பொருட்கள் தயாரிப்பது ஆகியவை இந்தப் பகுதியில் மிகவும் பிரபலமானது.


மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Village code= 1260200 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Retrieved 2008-12-18.
  2. "Yahoomaps India :". Retrieved 2008-12-18. Harana Halli, Shimoga, Karnataka

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரனஅல்லி&oldid=4470345" இலிருந்து மீள்விக்கப்பட்டது