அரண்மனைப் பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரண்மனைப் பொருளாதாரம் (palace economy) அல்லது மறுபகிர்வுப் பொருளாதாரம்[1] (redistribution economy) என்பது, ஒரு பொருளாதார ஒழுங்கமைப்பு முறை ஆகும். இதில் பெருமளவு செல்வம் மையப்படுத்திய நிர்வாகத்தின் ஊடாக, அதாவது அரண்மனை ஊடாகச் சென்று மீண்டும் மக்களுக்கு மறுபகிர்வு செய்யப்படுகிறது. இம்முறையின் கீழ், மக்களுக்கு ஓரளவு சொந்த வருமானம் அனுமதிக்கப்பட்ட போதிலும், பொருளாதாரம், அரண்மனையினால் மீள்பகிர்வு செய்யப்படும் செல்வத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது.

மறுபகிர்வுக் கருத்துரு, அரண்மனையைக் குறிக்கும் பெரிய வீடு எனப் பொருள்படும் "பாரோ" என்னும் கருத்துருவின் அளவுக்காவது பழமையானது. பிற்காலத்தில் புதிய ஏற்பாடு, மக்கள் தங்களிடம் இருப்பதைத் தமது சமய முதல்வரிடம் கொடுத்துவிட்டுத் தாம் வாழ்வதற்குத் தேவையானதை மீளப் பெற்றுக்கொள்ளும் தொடக்க கிறித்தவ சமுதாயம் பற்றிக் குறிப்பிடுகிறது. இங்கே அரண்மனை எதுவும் இல்லாவிட்டாலும், கருத்துரு அளவில் ஒரே மாதிரியானவையே.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரண்மனைப்_பொருளாதாரம்&oldid=3583313" இலிருந்து மீள்விக்கப்பட்டது