அரட்டுப்புழா வேலாயுத பணிக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆறாட்டுப்புழை வேலாயுத பணிக்கர் என்பவர் கேரளத்தைச் சேர்ந்த சமூகச் சீர்திருத்தவாதி ஆவார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் சாதிய கொடுமைகளுக்கு எதிராகப் போரிட்டவர். [1]

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

வசதியான ஈழவக் குடும்பத்தில் பிறந்த இவரின் இயற் பெயர் ஆறாட்டுப்புழை வேலாயுத செக்கவர் ஆகும் திருவாங்கூர் அரசர் இவருக்கு பணிக்கர் என்ற பட்டத்தை அளித்தார். மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட மேல் சாதி அடக்குமுறையை எதிர்த்துச் செயல்பட்டார். கேரளத்தில் சில சமூகத்தில் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்ற வழக்கத்தை முறியடிக்க பாடுபட்டார். இவரை நினைவு கூரும் வகையில் இவர் பெயரில் ஓர் ஆய்வு அறக்கட்டளை நிறுவியுள்ளார்கள். [2]

மேற்கோள்[தொகு]

  1. "Ezhava Warrior From Central Travancore". haripad website. haripad web. பார்த்த நாள் 2007-05-05.
  2. "Panicker Research Foundation and Cultural Centre". The Hindu. The Hindu. பார்த்த நாள் 2005-05-01.