உள்ளடக்கத்துக்குச் செல்

அரச மலேசிய இராணுவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரச மலேசிய இராணுவக் கல்லூரி
Royal Military College
Maktab Tentera DiRaja
RMC / MTD
அரச மலேசிய இராணுவக் கல்லூரி, 2003
பொதுவான தகவல்
அமைவு3 சூலை 1952
நாடு மலேசியா
எண்ணிக்கை500 (ஓராண்டு)
குறிக்கோள்தலைமை தாங்க சேவை செய்
வேறு பெயர்மலாயாவின் சாண்ட்ஹர்ஸ்ட், பூடக் பாய், புத்ரா
நிறங்கள்பச்சை, மஞ்சள், சிவப்பு
            
நிறுவனர்துன் சர் ஜெரால்ட் டெம்பிளர்
இணையத்தளம்www.rmc.edu.my

அரச மலேசிய இராணுவக் கல்லூரி (மலாய்: Maktab Tentera Diraja Malaysia; ஆங்கிலம்: Royal Military College Malaysia) (RMC) என்பது மலேசிய பாதுகாப்பு படைகளில் பணியாற்ற இளம் மலேசியர்களைப் பயிற்றுவிப்பதற்காக நிறுவப்பட்ட ஓர் இராணுவப் பள்ளியாகும்.[1] இந்தக் கல்லூரி சில நேரங்களில் மலாயாவின் சாண்ட்கர்ஸ்ட் (Royal Military Academy Sandhurst) என்றும் அழைக்கப்படுகிறது.[2]

திசம்பர் 9, 1966 அன்று, மலேசிய அரசர், சுல்தான் இசுமாயில் நசிருதீன், முன்பு கூட்டரசு இராணுவக் கல்லூரி (Federation Military College) என்று அழைக்கப்பட்ட இந்தக் கல்லூரிக்கு "அரச" (மலாய்: DiRaja) எனும் பட்டத்தை வழங்கினார். அதன் பின்னர் 1966-ஆம் ஆண்டு தொடங்கி இந்த இராணுவக் கல்லூரி அரச மலேசிய இராணுவக் கல்லூரி என்று அறியப்படுகிறது.[1]

இடம்

[தொகு]

அரச மலேசிய இராணுவக் கல்லூரியின் வளாகம் 1,200 ஏக்கர் (4.9 கிமீ2) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது சுங்கை பீசி நகருக்கு அருகில் கோலாலம்பூரிலிருந்து ஏறக்குறைய 10 மைல்கள் (16 கிமீ) தொலைவில் உள்ளது. அத்துடன் மைன்ஸ் ரிசார்ட் நகரம் (Mines Resort City); மற்றும் 1998 காமன்வெல்த் விளையாட்டுகள் நடைபெற்ற புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம் போன்ற இடங்கள் இந்தக் கல்லூரிக்கு அருகில் உள்ளன.[3] இந்தக் கல்லூரி அதன் திடல் வளாகத்தை மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்துடன் பகிர்ந்து கொள்கிறது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "The Royal Military College (MTD) is an elite military education institution located in Sungai Besi, Kuala Lumpur". Royal Military College. Retrieved 9 January 2026.
  2. "The Royal Military College". National Digital Department. Retrieved 9 January 2026.
  3. IMC, Admin (22 June 2021). "The Royal Military College main focus is to become the nation prestigious learning institution". Royal Military College. Retrieved 9 January 2026.

வெளி இணைப்புகள்

[தொகு]