அரச சப்பானிய இராணுவம்
| அரச சப்பானிய இராணுவம் Imperial Japanese Army | |
|---|---|
| 大日本帝國陸軍 Dai-Nippon Teikoku Rikugun | |
அரச ஆயுதப்படையின் உதய சூரியக் கொடி பத்தோதாய் அணிவகுப்பு பாடல் | |
| செயற் காலம் | 1871 |
| கலைக்கப்பட்டது | 1945 |
| நாடு | |
| வகை | தரைப்படை |
| பொறுப்பு | இராணுவ தரைப்படை |
| அளவு | 6,095,000 (ஆகத்து 1945) |
| பகுதி | அரச ஆயுதப் படைகள் |
| நிறம் | சிவப்பு வெள்ளை
|
| சண்டைகள் |
|
| தளபதிகள் | |
| சப்பான் அரசர் | |
| இராணுவ அமைச்சர் |
|
| படைத்துறைச் சின்னங்கள் | |
| Infantry Regimental Colour | |
அரச சப்பானிய இராணுவம் (ஆங்கிலம்: Imperial Japanese Army (IJA); சப்பானியம்: 大日本帝国陸軍) என்பது 1868 முதல் 1945 வரை செயல்பாட்டில் இருந்த சப்பானிய பேரரசின் முக்கியத் தரைப்படை ஆகும். சப்பானிய மொழியில் அதன் முழுப் பெயர் டாய்-நிப்பான் தெய்கோக்கு ரிகுகன் (Dai-Nippon Teikoku Rikugun), அதாவது பெரிய சப்பானியப் பேரரசின் இராணுவம் என பொருள்படும்.[1] மெய்ஜி காலத்தில் சப்பானின் துரிதமான நவீனமயமாக்க தாக்கத்தில் முதன்மைப் பங்கைக் கொண்டிருந்தது.
- முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895)
- உருசிய-சப்பானியப் போர்
- முதலாம் உலகப் போர்
- இரண்டாம் சீன-சப்பானியப் போர்
- இரண்டாம் உலகப் போர்
போன்ற ஏராளமான பெரும் போர்களில் பங்களித்து உள்ள இந்த இராணுவம், ஒரு காலக்கட்டத்தில் சப்பானிய அரசியலில் மேலாதிக்க நிருவாகத் திறன் கொண்ட அமைப்பாகவும் விளங்கியது.[1] இந்த இராணுவம், அரச சப்பானிய இராணுவத்தின் பொதுப் பணியாளர் அலுவலகம் (Imperial Japanese Army General Staff Office); மற்றும் போர்த் துறை அமைச்சினால் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு அமைப்புக்களும் சப்பானிய அரசரின் பார்வையில் இருந்தன. இராணுவம் மற்றும் கடற்படை இரண்டிற்கும் உச்சத் தளபதியாக சப்பானிய அரசர் பொறுப்பு வகித்தார்.
மெய்ஜி மறுசீரமைப்பிற்குப் பிறகு, இந்த இராணுவம் சப்பானியப் போர்ப் படைகளில் இருந்து உருவாக்கப்பட்டது. இது பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் முன்மாதிரிகளால் ஈர்க்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த நவீன இராணுவமாக பரிணமித்தது. சப்பானில் தொழில்மயமாக்கத்திற்கு முன் இருந்த சப்பானிய படைத்துறையின் சாமுராய் பிரிவிற்குப் பதிலாக 1868-ஆம் ஆண்டில் அரச சப்பானிய இராணுவம் உருவாக்கப்பட்டது.
பொது
[தொகு]மஞ்சூரியாவின் மீது படையெடுப்பு, பாக்சர் கிளர்ச்சியில் பங்களிப்பு; மற்றும் பசிபிக் போரின் போது ஆசிய-பசிபிக் முழுவதும் சமர் கொள்ளுதல்; உள்ளிட்ட பல வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு அரச சப்பானிய இராணுவம் பொறுப்பேற்றது. பரவலான போர்க் குற்றங்களைப் புரிந்ததற்காகப் பெயர் பெற்ற இந்த இராணுவம்,[2][3][4] 1945-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரில் சப்பான் சரணடைந்த பிறகு அரச சப்பானிய இராணுவம் கலைக்கப்பட்டது. பின்னர் அதன் செயல்பாடுகள் சப்பான் தரைவழி தற்காப்புப் படைக்கு (Japan Ground Self-Defense Force) மாற்றப்பட்டன.
வரலாறு
[தொகு]


1800-களின் நடுப்பகுதி வரையில், சப்பானிடம் ஒருங்கிணைந்த தேசிய இராணுவப் படை எனும் முதனமை இராணுவப் படை எதுவும் இல்லை; அதாவது சப்பானிடம் தனி ஒரு தேசிய இராணுவம் இல்லை. அந்தக் காலக்கட்டத்தில் சப்பான் நாடு ஆன் முறைமை (Han system) எனும் நிர்வாக முறைமையில் சிறிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நில மானிய முறைமை அரசுகளைப் போன்று இயங்கின.[5]
அந்த மானிய அரசுகளை, தொக்குகாவா சோகுனேட் (Tokugawa shogunate) எனும் இராணுவத் தலைமைத்துவம் நிர்வகித்தது. தொக்குகாவா இராணுவத் தலைமைத்துவம் 1603-ஆம் ஆண்டில் இருந்து 1868-ஆம் ஆண்டு வரை சப்பானை ஆட்சி செய்தது. தொக்குகாவா சோகுனேட் என்பது பக்காவூ இராணுவம் (bakufu) என்றும் அழைக்கப்பட்டது. பக்காவூ இராணுவம் பெரியதாக இருந்தது. ஆனாலும் நாட்டைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மற்ற உள்ளூர்ப் படைகளின் உதவிகளும் தேவைப்பட்டன.[6]
இரண்டு நூற்றாண்டுகள் சகோக்கு (sakoku) எனும் தனிமைக்குப் பிறகு சப்பான் நாடு வெளியுலகப் பார்வைக்குத் திறக்கப்பட்டது. இதுவே பின்னர் 1868-ஆம் ஆண்டு மெய்சி மீள்விப்பு மற்றும் போசின் போருக்கு (Boshin War) வழிவகுத்தது. சோகுனேட் இராணுவத் தலைமைத்துவத்திற்கு எதிரான கூட்டணியில் சட்சுமா (Satsuma Domain) மற்றும் சோசுவின் (Chōshū Domain) எனும் ஆட்சிக் களங்கள் ஆதிக்கம் செலுத்தின. எனினும், சப்பான் ஒரு நவீன, ஒருங்கிணைந்த இராணுவத்தை உருவாக்க முடிவு செய்தது.
முடிவு
[தொகு]இரண்டாம் உலகப் போரின் முடிவில் அரச சப்பானிய இராணுவத்தின் ஆளுமை முறைப்படி ஒரு முடிவுக்கு வந்தது. இன்று, சப்பானின் அரசியலமைப்பில் பிரிவு 9-இன் கீழ் ஒரு சட்ட விதி உள்ளது.[5] சப்பான் மற்ற நாடுகளுடனான பிரச்சினைகளைத் தீர்க்க இராணுவ கட்டமைப்பைப் பயன்படுத்த முடியாது என்று அந்தச் சட்டவிதி கூறுகிறது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "The Imperial Japanese Army (IJA) was Japan's main ground fighting force. It existed from 1868 to 1945. Its full name in Japanese was Dai-Nippon Teikoku Rikugun". kids.kiddle.co (in ஆங்கிலம்). Retrieved 14 November 2025.
- ↑ "Reddit - Why were the Imperial Japanese soldier so cruel?". www.reddit.com. Retrieved 14 November 2025.
- ↑ Harries & Harries 1994, ப. 475–476.
- ↑ "Sterling and Peggy Seagrave: Gold Warriors". The Education Forum. 25 January 2007.
- ↑ 5.0 5.1 Harries & Harries 1994, ப. 471.
- ↑ Jansen 2002, ப. 60.
- ↑ Harries & Harries 1994, ப. 487.
முதன்மை சான்றுகள்
[தொகு]- United States War Department. TM 30–480 Handbook On Japanese Military Forces, 1942 (1942) online; 384pp; highly detailed description of wartime IJA by U.S. Army Intelligence.
மேலும் காண்க
[தொகு]- சாமுராய்
- சப்பானிய வரலாறு
- மெய்சி மீள்விப்பு
- பேரரசர் மெய்சி
- சப்பான் தற்பாதுகாப்புப் படைகள்
- பேர்ள் துறைமுகத் தாக்குதல்
- முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895)
- இரண்டாம் சீன-சப்பானியப் போர்
- மங்கோலியர்களின் ஜப்பானியப் படையெடுப்புகள்
- இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு
நூல்கள்
[தொகு]- Harries, Meirion; Harries, Susie (1994). Soldiers of the Sun: The Rise and Fall of the Imperial Japanese Army. New York: Random House. ISBN 0679753036.
- Jansen, Marius B (2002). The Making of Modern Japan. Harvard University Press. ISBN 0674003349.
- Ravina, Mark (2004). The Last Samurai : The Life and Battles of Saigō Takamori. John Wiley & Sons. ISBN 0471089702.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Category:Imperial Japanese Army தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Overview of Imperial Japanese Army weapons and armaments in World War II
- Army of the Land of the Rising Sun 100 years ago. Part 1. Leap from the Middle Ages into the XX century (part 1 of 4)
- The PBS program Victory in the Pacific பரணிடப்பட்டது 2010-03-26 at the வந்தவழி இயந்திரம்