அரச கழகத்தின் மெய்யியல் இதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"ஃபில். டிரான்சு" என்று பின்னர் அழைக்கப்ட்ட பிலசாபிக்கல் மாகசீன் ஆவ் த ராயல் சொசையிட்டி என்னும் ஆய்விதழின் முதல் தொகுப்பின் (ஆண்டுகள் 1666). முகப்பு

அரச கழகத்தின் மெய்யியல் இதழ் (Philosophical Transactions of the Royal Society, பிலசாபிக்கல் மாகசீன் ஆவ் த ராயல் சொசையிட்டி) ("ஃபில். டிரான்சு.", Phil. Trans.) என்பது இலண்டனின் அரச கழகம் (வேந்தியக் குமுகாயம்) என்னும் அமைப்பு ஆங்கில மொழியில் வெளியிடும் ஓர் அறிவியல் ஆய்விதழ். இது 1665 இல் நிறுவப்பட்டது[1]. அறிவியலுக்காகவே தொடங்கப்பட்டு இன்றும் தொடர்ந்து வெளிவரும் ஆங்கில மொழி முதல் அறிவியல் ஆய்விதழ் இது. இரண்டு மாதங்களுக்கு முன்னராகத் தொடங்கப்பெற்ற பிரான்சிய மொழி அறிவியல் ஆய்விதழ் சூர்ணால் டி சவான் உலகின் முதல் அறிவியல் ஆய்விதழ் என்றாலும், அதில் அறிவியல் சாராத சில பகுதிகளும் இருப்பதைக் குறிப்பிடுவர் சிலர்.[2]. இந்த ஆங்கில ஆய்விதழில் பயன்படும் பிலசாபிக்கல் ("philosophical") என்னும் சொல், அறிவியல் துறையை அன்று குறிப்பிட்ட இயற்கை மெய்யியல் (natural philosophy) என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாகும். இது இன்று ஆங்கிலத்தில் சயன்சு (science) (தமிழில் அறிவியல்) என்று பரவலாகவும் பொதுவாகவும் அறியப்படுகின்றது. சில நேரங்களில் "natural science" (இயற்கை அறிவியல்) என்றும் அழைக்கப்பெறுகின்றது.

வரலாறு[தொகு]

பிலசாபிக்கல் மாகசீனின் முதல் இதழ் மார்ச்சு 6, 1665 இல், இலண்டன் வேந்தியக் குமுகாயத்தின் (The Royal Society of London) முதல் செயலாளர் என்றி ஓல்டன்பர்கு (Henry Oldenburg) என்பாரால் திருத்தங்கள் பார்த்து வெளியிடப்பெற்றது. இவ் வெளியீடு இலண்டன் வேந்தியக் குமுகாயம் (த ராயல் சொசையிட்டி ஆவ் லண்டன்) தொடங்கப்பெற்று ஆறு ஆண்டுகள் கழித்து வெளிவந்தது[3]. ஓல்டன்பர்கு, தன் சொந்தப் பணத்தில்தான் இவ் ஆய்விதழை வெளியிட்டார், ஆனால் வேந்தியக் குமுகாயக் குழுவினரின் ஒப்புதலோடு, இதில் இருந்து வரும் இலாப வருமானத்தை தான் வைத்துக்கொள்ளுமாறு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் ஓல்டன்பர்கு காலத்தில் இந்த ஆய்விதழில் வெளியீட்டின் வழி வரும் பண ஈட்டம் பெரும் இழப்பை அடைந்தது[4] நூற்றாண்டுகள் காலப்போக்கில் பெரும் தாக்கம் பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்த பிலசாபிக்கல் மாகசீனில் வெளியாயின. புகழ்பெற்ற கட்டுரையாளர்கள் வரிசையில் ஐசாக் நியூட்டன், சேம்சு கிளார்க்கு மாக்சுவெல், மைக்கேல் பாரடே, சார்லசு டார்வின் போன்றவர்கள் அடங்குவர். நியூட்டனின் முதல் ஆய்வுக்கட்டுரையை 1672 இல் பிலசாபிக்கல் மாகசீன் வெளியிட்டது; இவ் ஆய்வுத்தாள் "ஒளி, நிறங்கள் பற்றிய புதிய கொள்கை" என்னும் பொருளில் New Theory about Light and Colours என்று பெயரிடப்பட்டிருந்தது [5]. இதுவே நியூட்டனின் பொதுவெளியில் தொடங்கிய அறிவியல் வாழ்க்கை என்பர். இவ் ஆய்விதழின் பொறுப்பாசிரியராக சில நேரங்களில் பலர் கூட்டாக இயங்கியும் உள்ளனர்; இவர்களுள் வில்லியம் முசுகிரேவ் (William Musgrave) (இதழ்கள் 167 to 178), இராபர்ட்டு பிளாட்டு (Robert Plot) (இதழ்கள் 144 to 178) ஆகியோரைக் குறிப்பிடலாம்[6]

தற்காலத்தின் இதன் வெளியீடு[தொகு]

பிலசாபிக்கல் டிரான்சாக்சன்சு ஏ மற்றும் பி (Philosophical Transactions A and B) என்பன முறையே இயறியல், உயிரியல் அறிவியற்துறைகளைச் சார்ந்தவை பிலசாபிக்கல் டிரான்சாக்சன்சு ஏ மற்றும் பி (Philosophical Transactions A and B) என்பன முறையே இயறியல், உயிரியல் அறிவியற்துறைகளைச் சார்ந்தவை
பிலசாபிக்கல் டிரான்சாக்சன்சு ஏ மற்றும் பி (Philosophical Transactions A and B) என்பன முறையே இயறியல், உயிரியல் அறிவியற்துறைகளைச் சார்ந்தவை

இவ் ஆய்விதழ் 1887 இல் விரிவாக்கப்பெற்று இரண்டு தனி இதழ்களாக வெளிவரத் தொடங்கியது. இவை (1) பிசிக்கல் சயன்சு (இயற்பியல், கணித, பொறியியல் அறிவியற்துறைகள்)(Philosophical Transactions of the Royal Society A: Physical, Mathematical and Engineering Sciences) என்றும், மற்றது (2) உயிரியல் அறிவியற்துறைகள் (Philosophical Transactions of the Royal Society B: Biological Sciences) என்றும் பிரிக்கப்பட்டு வெளிவருகின்றன. இவ்விரண்டு ஆய்விதழ்களும் வேந்தியக் குமுகாயத்தின் (ராயல் சொசையிட்டியின்) கூட்டங்களுக்கு ஏற்ப சிறப்புத் தலைப்புகளில் கட்டுரைகள் வெளியிடுகின்றன. இவை பெரும்பாலும், வேந்தியக் குமுகாயத்தின் உறவின ஆய்விதழ்களாகிய புரசீடிங்குங்சு ஆவ் த ராயல் சொசையிட்டி (Proceedings of the Royal Society), பயாலச்சியி லெட்டர்சு (Biology Letters), செர்ணல் ஆவ் த ராயல் சொசையிட்டி இண்டர்ஃபேசு (Journal of the Royal Society Interface) முதலானவை ஆகும். .

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. எஆசு:10.1098/rstl.1665.0001
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. "Special Collections | The Dibner Library of the History of Science and Technology". பார்க்கப்பட்ட நாள் 2010-04-17.
  3. "Philosophical Transactions of the Royal Society of London - History". பார்க்கப்பட்ட நாள் 2010-02-06.
  4. எஆசு:10.1098/rsnr.1960.0018
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  5. எஆசு:10.1098/rstl.1671.0072
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  6. A. J. Turner, ‘Plot, Robert (bap. 1640, d. 1696)’, Oxford Dictionary of National Biography, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2004

வெளியிணைப்புகள்[தொகு]