அரசு விருந்தினர் மாளிகை



அரசு விருந்தினர் மாளிகை அல்லது டாக் பங்களா (Dak bungalow) என்பது குடிமைப்பட்ட கால இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பனி அதிகாரிகள் பயணம் செய்யும் போது தங்கிச் செல்லும் அரசு இல்லம் ஆகும். இப்பங்களாவில் படுக்கை அறைகள் மற்றும் சமையல் அறை மற்றும் கூட்ட அறை இருக்கும். இப்பங்களாவை பராமரிக்க ஒரு பராமரிப்பாளர் மற்றும் ஒரு சமையல்காரர் இருப்பர். டாக் என்ற சொல்லிற்கு இந்தி மொழியில் அஞ்சலகம் என்பர். கிழக்கிந்திய கம்பனி ஆட்சியின் போது இந்த டாக் பங்களாவை அஞ்சல் அலுவலகம் மற்றும் தற்காலிக நீதிமன்றங்களாகவும் பயன்படுத்தப்பட்டது. டாக் பங்களாக்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் உள்ளது.
டாக் பங்களாக்கள் கிழக்கிந்திய உயர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் சுற்றுலாவில் உள்ள பிற கிழக்கிந்திய உயர் அதிகாரிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இவைகள் முக்கியச் சாலைகளில் அமைந்திருக்கும்.[1]
வரலாறு
[தொகு]1676ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பல் அதிகாரிகள் & பொறியாளர்கள் துறைமுக நகரங்களில் இலவசமாகத் தங்கி ஓய்வு எடுத்துச் செல்வதற்கு டாக் பங்களாக்கள் நிறுவப்பட்டது.[2] [3]அனைத்து வசதிகளுடன் கூடிய முறையான டாக் பங்களாக்கள் 1840களில் நிறுவப்பட்டது.[4]மேலும் இப்பங்களாக்கள் காலியாக இருக்கையில் பிற பயணிகளுக்கு சில நிபந்தனைகளுடன் வாடகைக்கு விடப்பட்டது.[5][6]. இவைகளை அரசு விருந்தினர் மாளிகை (Travellers' Bungalows) என்றும் அழைக்கப்பட்டது. 1920களில் இம்மாளிகையில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு 8 அணாவும், திருமணமான தம்பதியருக்கு 12 அணாவும் வசூலிக்கப்பட்டது[7]
மேலும் இவைகள் பெரிய பிரித்தானியாவிற்கு அஞ்சலகச் சேவை மையமாகச் செயல்பட்டது. மேலும் அஞ்சல் பணிக்காக, இந்தியத் துணைக்கண்டத்தின் முக்கிய சாலைகளில் 12 முதல் 15 மைல்களுக்கு ஒரு டாக் பங்களா, குறைந்த வசதிகளுடன் நிறுவப்பட்டிருந்தது.[3]
1857 சிப்பாய்க் கிளச்சியின் போது, பிரித்தானிய குடும்பத்தினர், படைவீரர்கள் இந்த டாக் பங்களாவில் ஒழிந்து கொண்டு உயிர் தப்பினர்.[8]பல டாக் பங்களாக்கள் சிப்பாய்கள் தீவைத்து கொளுத்தினர். சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் டாக் பங்களாவின் மேற்கூரைகள் ஓலைகளால் மூடிப்படுவதை ஒழித்து, செங்கல் & சுண்ணாம்பால் கட்டிடம் கட்டினர்.[9]
உசாத்துணை
[தொகு]- ↑ Nehchal Sandhu,The Tribune. "Dak bungalows and ghosts who stay there". Retrieved 30 March 2023.
- ↑ (Bhandari 2012, ப. 12).
- ↑ 3.0 3.1 (Lancaster 1985, ப. 19).
- ↑ (Bhandari 2012, ப. 20).
- ↑ (Bhandari 2012, ப. 13).
- ↑ Stanford (1961).
- ↑ Molony (1921), ப. 112.
- ↑ (Bhandari 2012, ப. 14).
- ↑ (Lancaster 1985, ப. 20).
மேற்கோள்கள்
[தொகு]- Bhandari, Rajika (2012), The Raj on the Move: Story of the Dak Bungalow, New Delhi: The Lotus Collection for Roli Books, ISBN 978-81-7436-849-2.
- Lancaster, Clay (1985), The American Bungalow, 1880–1930, New York: Abbeville Press, ISBN 0-486-28678-9.
- Molony, John Chartres (1921), The Civilian's South India: Some Places and People in Madras, London: Lane Bodley, ISBN 9788120616844.
- Stanford, J.K. (1961), "Dak Bungalows", Readers' Guide to the Works of Rudyard Kipling, Vol. I, Gibbs