அரசு மேல்நிலைப்பள்ளி, மண்ணவேளாம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரசு மேல்நிலைப்பள்ளி மண்ணவேளாம்பட்டி, அன்னவாசல் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து மனப்பாறை செல்லும் வழியில் புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ தொலைவில் இப்பள்ளி அமைந்துள்ளது.

நிர்வாகம்[தொகு]

இப்பள்ளி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இப்பள்ளியைக் கண்காணிக்கும் உயர் அலுவலர் ஆவார்.

தேசிய பசுமைப் படை[தொகு]

1000 மரங்கள் கொண்ட இப்பள்ளி தேசிய பசுமை படைத் திட்டத்தில் சிறந்த பள்ளி என்று பரிசு பெற்று உள்ளது. மரங்களை வளருங்கள் என்பதை விட மரங்களோடு வளருங்கள் என்ற உயரிய நோக்கத்தோடு இப்பள்ளி குழந்தைகள் வளர்கின்றனர். இப்பள்ளியில் சந்தனம், வேம்பு, புங்கை, வாகை போன்ற மரங்கள் வளர்க்கப்படுகின்றன.[1]

மாணவர் திறமைகள்[தொகு]

இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அறிவியல் கண்காட்சிகளில் பங்குபெற்று பரிசுகளைப் பெற்றுள்ளனா்.[2]

மேற்கோள்கள்[தொகு]