அரசு மருத்துவக் கல்லூரி, அல்துவானி
| வகை | மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
|---|---|
| முதல்வர் | டாக்டர் கோவிந்த் சிங் தித்தியல் |
| பட்ட மாணவர்கள் | ஆண்டுக்கு 125 |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | ஆண்டுக்கு 65 |
| அமைவிடம் | , , இந்தியா |
| வளாகம் | நகர்ப்புறம் |
| சுருக்கப் பெயர் | ஜி. எம். சி. அல்துவானி |
| சேர்ப்பு | ஹேமாவதி நந்தன் பகதூனா உத்தரகாண்ட் மருத்துவப் பல்கலைக்கழகம், தேசிய மருத்துவ ஆணையம் |
| இணையதளம் | gmchld |
அரசு மருத்துவக் கல்லூரி, அல்துவானி (முன்னர் உத்தராகண்ட் வன மருத்துவமனை அறக்கட்டளை மருத்துவக் கல்லூரி என அழைக்கப்பட்டது) என்பது ஹல்துவானி-காட்டுகோதாமில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரியாகும். இது 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி ஹேமாவதி நந்தன் பகதூனா உத்தரகாண்ட் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் (தேராதூன்) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தங்குமிடம், இணைக்கல்வி வழங்கும் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும்.
இக்கல்லூரி தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் பெற்றதாகும்.[1]
வரலாறு
[தொகு]இக்கல்லூரியின் அடிக்கல் 1997 மார்ச் 19 அன்று அப்போதைய உத்தரப் பிரதேசம் ஆளுநர் ரொமேஷ் பண்டாரி அவர்களால் நாட்டப்பட்டது. 2004 மே மாதத்தில் முதல் 100 மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
2010 ஏப்ரல் மாதத்திற்குள் "உத்தராகண்ட் வன மருத்துவமனை அறக்கட்டளை" கலைக்கப்பட்டது.[2] அறக்கட்டளையின் கீழ் செயல்பட்ட ஐந்து நிறுவனங்களும் உத்தராகண்டம் அரசின் மருத்துவக் கல்வித் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2010 மே 1 முதல் "அரசு மருத்துவக் கல்லூரி, ஹல்துவானி" என்ற பெயரில் செயல்படத் தொடங்கின.
சேர்க்கை முறை
[தொகு]இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கை முழுமையாக நீட்தேர்வில் பெறப்படும் தரவரிசையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
- 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்படுகின்றன.
- 85% இடங்கள் மாநில ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்படுகின்றன.
முதுகலைப் படிப்புகளிலும் இதே முறை பின்பற்றப்படுகிறது.
- 50% முதுகலை இடங்கள் அகில இந்திய முதுகலை மருத்துவ நுழைவுத் தேர்வின் மூலம் நிரப்பப்படுகின்றன.
- மீதமுள்ள 50% இடங்கள் மாநில அளவிலான நுழைவுத் தேர்வின் மூலம் நிரப்பப்படுகின்றன.
படிப்புகள்
[தொகு]2013 நவம்பர் நிலவரப்படி, இக்கல்லூரி இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் மற்றும் எம்.டி/ எம்.எஸ். படிப்புகளை வழங்கியது. மாணவர் சேர்க்கை முறையே 100 மற்றும் 65 ஆக இருந்தது.
இளங்கலைப் படிப்புகள்
[தொகு]- இளாநிலை மருத்துவம்– 5½ ஆண்டுகள் (ஒரு ஆண்டு கட்டாய சுழற்சி பயிற்சி மருத்துவர் பயிற்சி உட்பட)
முதல் தொழில்முறை (2 பருவங்கள்):
இரண்டாம் தொழில்முறை (3 பருவங்கள்):
- மருந்தியல்
- நோயியல்
- நுண்ணுயிரியல்
- பொது உடல்நலவியல்
- அறுவை சிகிச்சை
- குழந்தை மருத்துவம்
- மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம்
- முடவியல்
- கண் மருத்துவம்
- தோல் மருத்துவம்
- உளநோய் மருத்துவம்
- ஊடுகதிரியல்
மூன்றாம் தொழில்முறை – பகுதி I (2 பருவங்கள்):
- பொது உடல்நலவியல்
- கண் மருத்துவம்
- மருத்துவம்
- அறுவை சிகிச்சை
- முடவியல்
- மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம்
- குழந்தை மருத்துவம்
- மயக்க மருத்துவம்
- பல் மருத்துவம்
- ஊடுகதிரியல்
- கதிர்வீச்சு சிகிச்சை
மூன்றாம் தொழில்முறை – பகுதி II (2 பருவங்கள்):
- மருத்துவம்
- குழந்தை மருத்துவம்
- மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம்
- அறுவை சிகிச்சை மற்றும் முடவியல்
முதுகலைப் படிப்புகள்
[தொகு]அரசு மருத்துவக் கல்லூரி, ஹல்துவானி, உத்தராகண்டம் மாநிலத்தின் முதல் முதுகலை மருத்துவக் கல்லூரியாகும். தற்போது பல்வேறு துறைகளில் 65 முதுகலை இடங்களை வழங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Government Medical College, Haldwani, Uttarakhand". dooneducation.com. Archived from the original on 31 March 2022. Retrieved 16 July 2012.
- ↑ Prashant, Shishir (7 November 2009). "U'khand to set up NIT for Rs 400-500 crore". Business Standard இம் மூலத்தில் இருந்து 2 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130202045312/http://www.sify.com/finance/ukhand-to-set-up-nit-for-rs-400-500-crore-news--news-jlhb5obgcjc.html. பார்த்த நாள்: 16 July 2012.
