அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு
சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி
குறிக்கோளுரைKnowledge is Power
வகைபொது
உருவாக்கம்1984
வேந்தர்தமிழ்நாடு அரசு
முதல்வர்முனைவர் ஆர். முருகேசன்
அமைவிடம், ,
வளாகம்396 ஏக்கர்கள் (1.60 km2)
சுருக்கப் பெயர்IRTT
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.irttech.ac.in/

அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு (Government College of Engineering, Erode) (முன்னதாக ஐ.ஆர்.டி.டி) என்பது தமிழ்நாட்டின், ஈரோடு சித்தோடில் உள்ள ஒரு பொறியியல் கல்வி நிறுவனம் ஆகும். இது தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்தால் துவங்கப்பட்டது. தற்போது தமிழக அரசால் நேரடியாக ஏற்று நடத்தப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் முதலாம் வகை கல்லூரிகளின் கீழ் இது பட்டியலிடப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் 1984 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரனால் ஊர்தி போக்குவரத்து ஆராய்ச்சி சார்ந்த பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்டது. இது தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்தால் நடத்தப்படுகிறது மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இதன் வளாகமானது 350-ஏக்கர் (1.4 km2) ) பரப்பளவில் அமைந்துள்ளது. [1]

போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, 2021 - 2022-ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு இக்கலூரியை நேரடியாக ஏற்று நடத்த அரசாணை பிறப்பித்து அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கல்வி[தொகு]

இந்த நிறுவனம் நான்கு ஆண்டு இளநிலை பொறியியல் படிப்புகளை வழங்குகிறது. கல்லூரியின் 35% இடங்கள் தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்டுகிறது, மீதமுள்ள 65% இடங்கள் டி.என்.இ.ஏ. ஆலோசனையுடன் நிரப்பப்பட்டுள்ளன.

நிரல் பெயர் ஆண்டுகளில் படிப்பு காலம்
ஊர்திப் பொறியியல் 4
குடிசார் பொறியியல் 4
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் 4
மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் 4
மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் 4
தகவல் தொழில்நுட்பம் 4
இயந்திரப் பொறியியல் 4

இந்த நிறுவனம் பின்வரும் முதுநிலை படிப்புகளையும் வழங்குகிறது

நிரல் பெயர் ஆண்டுகளில் படிப்பு காலம்
முதுநிலை கணினி பயன்பாடு 3
முதுநிலை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் 2
முதுநிலை கட்டமைப்பு பொறியியல் 2

குறிப்புகள்[தொகு]

  1. "About Us | IRTT". www.irttech.ac.in. Archived from the original on 2019-07-19. பார்க்கப்பட்ட நாள் 2019-07-19.

வெளி இணைப்புகள்[தொகு]