அரசு நிஜாமியா திப்பி கல்லூரி
![]() | |
வகை | யூனானி மருத்துவக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1810 |
அமைவிடம் | ஐதராபாத்து, மொகல்புரா , , , 500002 , 17°21′38″N 78°28′30″E / 17.3605319°N 78.4750474°E |
வளாகம் | சார்மினார் அருகில் |
அரசு நிஜாமியா திப்பி கல்லூரி (Government Nizamia Tibbi College) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒரு யூனானி மருத்துவக் கல்லூரி ஆகும்.[1][2][3]
இக்கல்லூரியுடன் மருத்துவமனை உள்ளது. சிகிச்சைக்காகத் தயாரிக்கப்படும் பெரும்பாலான மருந்துகள் மருத்துவ மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இக்கல்லூரி ஒரு இளநிலை மருத்துவப் படிப்பை (யூனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) வழங்குகிறது. இது தவிர, கல்லூரி முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளையும் வழங்குகிறது.
வரலாறு
[தொகு]அரசு நிஜாமிய திப்பி கல்லூரியின் வரலாறு 1810ஆம் ஆண்டு முதல் தொடங்குகிறது. இது ஆப்கானிய அறிஞர் சாஜிதா பேகம் மஜித் என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர், ஏழாவது நிஜாம் ஒசுமான் அலி கானால் 1938-ல் புதுப்பிக்கப்பட்டது.
கல்லூரி
[தொகு]ஐதராபாத்தில் உள்ள சார்மினார் என்ற இடத்தில் அரசு நிஜாமியா திப்பி கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியானது இந்தியாவின் தெலங்காணாவில் உள்ள கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கல்வி
[தொகு]கல்லூரியில் வழங்கப்படும் முக்கிய இளநிலை படிப்பு இளநிலை யூனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பாடமாகும்.[4] கூடுதலாக, கல்லூரி முதுநிலை மருத்துவப் படிப்பையும் வழங்குகிறது.
மேலும் பார்க்கவும்
[தொகு]- இந்தியாவில் கல்வி
- இந்தியாவில் எழுத்தறிவு
- தெலுங்கானாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல்
- அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ News18.com: CNN-News18 Breaking News India, Latest News, Current News Headlines
- ↑ Patients suffer as Nizamia hospital’s clinics shut early
- ↑ Mohammad., Said, Hakim (c. 1992). Research on Unani tibb. Hamdard Foundation Pakistan. கணினி நூலகம் 30922565.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Nizamia college problems to be sorted out