அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரமங்கலம்
Jump to navigation
Jump to search
கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியில் அமைந்துள்ளது. இப்பள்ளி நூற்றாண்டுகள் கடந்த வரலாற்று சிறப்பு மிக்க பள்ளி ஆகும். இங்கு 6 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். 1997 ம் ஆண்டு வரை இது இருபாலர் பயிலும் மேல்நிலைப்பள்ளியாக இருந்தது.1998 ம் ஆண்டு முதல் இது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் கல்விக்கு இணையாக விளையாட்டும் சிறப்புற கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.