அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கீரனூர், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, , அமைந்துள்ளது. புதுக்கோட்டை- திருச்சி செல்லும் வழியில் புதுக்கோட்டையிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

நிர்வாகம்[தொகு]

இப்பள்ளி மதிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படுகிறது. இதன் நிர்வாகப்பொறுப்பை மாவட்ட அளவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலவலர் கவனிக்கிறார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்[தொகு]

இப்பள்ளியில் 2016-17 கல்வியாண்டின்படி 700 க்கும் மெற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 1 தலைமையாசிரியர், 12 பட்டதாரி ஆசிரியரும், 14 முதுநிலை பட்டாதாரி ஆசிரியரும், 2 இடைநிலையாசிரியர்களும், 2 உடற்கல்வியாசிரியரும் அலுவலக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தேரச்சி விவரம்[தொகு]

12ம் வகுப்பில் 2015-16 ம் கல்வியாண்டு முதல் மாணவர்கள் 1000 க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை பெற்று பெறுமை சேர்த்து வருகின்றனர். பொது தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 2015-16 ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலை பள்ளிகளில் முதலிடம் பெற்றது இப்பள்ளி. கடந்த ஆண்டு (2016-17) 10 ம் வகுப்பு பொது தேர்வில் 98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது. இங்கு கணினிகள் போன்ற தொழில்நுட்பம் கொண்டு பாடம் கற்பிக்கப்படுகிறது.கலை, பேச்சு, மற்றும் பிற துறைகளிலும் இப்பள்ளி மாணவர்கள் பரிசு பெற்றுள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]