அரசியல் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசியல் வரலாறு என்பது, அரசியல் நிகழ்வுகள், எண்ணங்கள், இயக்கங்கள், அரசாங்க உறுப்புக்கள், வாக்காளர்கள், கட்சிகள், தலைவர்கள் பற்றிய விபரிப்பும் பகுப்பாய்வும் ஆகும். இது, இராசதந்திர வரலாறு, அரசியல்சட்ட வரலாறு, பொதுமக்கள் வரலாறு போன்ற பிற வரலாறு சார்ந்த துறைகளுடன் தொடர்புடையது. அரசியல் வரலாறு, பெரிய சமூகங்களில் அதிகாரத்தின் அமைப்பையும் செயற்பாடுகளையும் பற்றி ஆய்வு செய்கிறது. இது, அதிகாரத்தில் உள்ள உயர்குடியினரைக் குவியப்படுத்தி, சமுதாயத்தின்மீது அவர்களுடைய தாக்கம், பொதுமக்கள் கருத்து, பிற சமூக வரலாறுகளில் உள்ள உயர் குடியினருடனான தொடர்பு என்பன பற்றி ஆராய்கிறது.

அண்மைக் காலங்களில் சமூக வரலாற்றுத் துறையுடன் ஒப்பிடும்போது குறைவான ஆய்வாளர்களே அரசியல் வரலாற்றில் ஆர்வம் காட்டுகின்னறர். 1975 இலிருந்து 1995 வரை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தம்மை சமூக வரலாற்றோடு அடையாளம் காணும் பேராசிரியர்களின் எண்ணிக்கை 31% இலிருந்து 41% ஆகக் கூடியுள்ளது. அதேவேளை அரசியல் வரலாற்றோடு அடையாளம் காண்பவர்களின் தொகை 40% இலிருந்து 30% ஆகக் குறைந்துள்ளது.[1] 2014 இல் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களின் வரலாற்று பிரிவு ஆசிரியர்கள் 3,410 இல் 878 (26%) பேர் சமூக வரலாற்றுடனும், 841 (25%) பேர் அரசியல் வரலாற்றுடனும் தம்மை அடையாளம் கண்டுள்ளனர்.[2]

உலக அரசியல் வரலாறு[தொகு]

உலக அரசியல் வரலாறு என்பது அரசியல் நிகழ்வுகள், எண்ணங்கள், இயக்கங்கள், தலைவர்கள், அரசியல் அலகுகள் ஆகியவற்றின் படிமலர்ச்சி வரலாற்றையும், இந்தக் கூறுகள் சமூகத்தை வடிவமைக்கும் வழிகள் ஆகியவற்றையும் குறிக்கிறது. இவை, குடியரசுகள், பேரரசுகள் போன்ற அரசியல் அலகுகளாக உருவாவது விடயங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதுடன், இவ்வாறான அலகுகளுக்கு இடையிலான பன்னாட்டு உறவுகள் தொடர்பான ஆய்வுகளும் உலக அரசியல் வரலாற்றுக்குள் அடங்குகின்றன. இந்த விளக்கப் பகுப்பாய்வுகளுடன், அரசியல் சிந்தனை வரலாறு, அரசியல் எண்ணங்களினதும் மெய்யியலினதும் படிமலர்ச்சியை விபரிக்கிறது. அறிவொளிக் காலத்தில், அரசியல் அலகுகள் தன்னாட்சி, முடியாட்சி போன்ற அடிப்படை முறைமைகளிலிருந்து சிக்கலான சனநாயக, கம்யூனிச முறைமைகளாக விரிவடைந்துள்ளன. அத்துடன், முன்னைய அரசியல் முறைமைகளில், தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்டிருந்த எல்லைப்புறங்கள் இன்றைய தெளிவான எல்லைகளாக மாறியுள்ளன.

அரசியல் வரலாற்று அம்சங்கள்[தொகு]

முதல் அறிவியல் அடிப்படையிலான அரசியல் வரலாறு 19 ஆம் நூற்றாண்டில் செருமனியைச் சேர்ந்த லியோபோல்ட் வொன் ராங்கே என்பவரால் எழுதப்பட்டது. இவருடைய வழிமுறைகள் வரலாற்றாளர்கள் மூலங்களைச் சோதிப்பது தொடர்பில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Diplomatic dropped from 5% to 3%, economic history from 7% to 5%, and cultural history grew from 14% to 16%. Based on the number of full-time professors in U.S. history departments. Stephen H. Haber, David M. Kennedy, and Stephen D. Krasner, "Brothers under the Skin: Diplomatic History and International Relations", International Security, Vol. 22, No. 1 (Summer, 1997), pp. 34–43 at p. 42 online at JSTOR
  2. See "Teachers of History in the Universities of the UK 2007 – listed by research interest" பரணிடப்பட்டது 2006-05-30 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசியல்_வரலாறு&oldid=3231932" இலிருந்து மீள்விக்கப்பட்டது