உள்ளடக்கத்துக்குச் செல்

அரசியல் பரப்புரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆபிரகாம் லிங்கனுக்கான குடியரசுத் தலைவர் தேர்தல் பரப்புரைப் பொத்தான், 1860. பொத்தானின் பின்புறத்தில் அவரது துணை வீரர் ஹன்னிபால் ஹாம்லின் உருவப்படம் காட்டப்பட்டுள்ளது.

ஓர் அரசியல் பரப்புரை (political campaign) பரவலாக அரசியல் பிரச்சாரம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவின் முடிவெடுக்கும் திறனில் செல்வாக்கு செலுத்த முயலும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியாகும். மக்களாட்சி நாடுகளில், அரசியல் பிரச்சாரங்கள் என்பது பரவலாக தேர்தல் பரப்புரைகளைக் குறிக்கின்றன. பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் அல்லது வாக்கெடுப்புகள் தீர்மானிக்கப்படுவதிலும் இது தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. பொதுத் தேர்தல்கள், முதலமைச்சர் அல்லது அரசாங்கத் தலைவர், பெரும்பாலும் குடியரசுத் தலைவர் அல்லது பிரதம மந்திரி ஆகியோர்களுக்கானத் தேர்தல்களின் போது பரப்புரைகள் அதிக கவனம் பெறுகிறது.

பரப்புரைச் செய்தி

[தொகு]
கிழக்கு திமோரில் தேர்தல் பரப்புரையின் போது

வேட்பாளர் ஒருவர், வாக்காளர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் கருத்துக்களே பரப்புரையின் முக்கிய அமசமாகும். பதவிக்குப் போட்டியிடும்போது, தங்கள் கருத்துக்களுடன் உடன்படுபவர்களை ஆதரிக்க வைப்பதே இதன் நோக்கமாகும். இந்தச் செய்தி பெரும்பாலும் கொள்கைப் பிரச்சினைகள் குறித்தான பேசு பொருளைக் கொண்டிருக்கும். வாக்காளர்களிடம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் இந்தக் கருத்துகள் கூறப்படுகின்றன.2024 ஆம் ஆண்டு ஆய்வின்படி, அமெரிக்காவில் உள்ள அரசியல் பயிற்சியாளர்கள் எந்த வகையான செய்திகளால் பொதுமக்கள் நம்பவைக்கப்படுகிறார்கள் என்பதை சரியாக கணிப்பதில்லை என்று கூறப்பட்டது.[1]

பரப்புரை நிதி

[தொகு]

நிதி திரட்டும் நுட்பங்களில் வேட்பாளர் பெரிய நன்கொடையாளர்களை அழைப்பது அல்லது சந்திப்பது, சிறிய நன்கொடையாளர்களுக்கு நேரடியாக அஞ்சல் மூலம் வேண்டுகோள் வைப்பது, அவர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் மில்லியன் கணக்கான தொகைகளைச் செலவிடக்கூடிய ஆர்வமுள்ள குழுக்களை அணுகுவது ஆகியவை அடங்கும்.

நுட்பங்கள்

[தொகு]

ஒரு பரப்புரைக் குழு என்பது (அது ஒரு தனிநபரைப் போல சிறியதாகவோ அல்லது அதிக வளங்களைக் கொண்ட நிபுணர்களின் குழுவாக இருக்கலாம்) பரப்புரைச் செய்தியை எவ்வாறு தொடர்புகொள்வது, தன்னார்வலர்களை நியமிப்பது, பணம் திரட்டுவது ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். 1800 ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத் தேர்தலின் போது ஆரோன் பர் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட பரப்புரை முறைதான் நவீன, வெளிப்படையான பரப்புரை முறைகளின் முன்னோடியாகக் கருதப்பட்டது.[2] [3]

பரப்புரைத் தொடர்பு

[தொகு]

தேர்தல் பிரச்சாரத் தொடர்பு என்பது ஒரு அரசியல் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரச்சார விளம்பரம் உட்பட அதன் கட்டுப்பாட்டில் இல்லாத தகவல்தொடர்புகளையும் குறிக்கிறது,எ.கா. தேர்தல்கள் குறித்த ஊடக விளம்பர ஆற்றலெல்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Broockman, David E.; Kalla, Joshua L.; Caballero, Christian; Easton, Matthew (2024). "Political practitioners poorly predict which messages persuade the public" (in en). Proceedings of the National Academy of Sciences 121 (45): e2400076121. doi:10.1073/pnas.2400076121. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:39467135. Bibcode: 2024PNAS..12100076B. 
  2. Unger, Harlow Giles (2014). John Marshall: the Chief Justice Who Saved the Nation. Hachette Books. ISBN 978-0306822216.
  3. Wheelan, Joseph (2006). Jefferson's Vendetta: the Pursuit of Aaron Burr and the Judiciary. PublicAffairs. ISBN 0786716894.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசியல்_பரப்புரை&oldid=4259380" இலிருந்து மீள்விக்கப்பட்டது