அரசியல் கைதி
அரசியல் கைதி (Political prisoner) என்பவர் தன் அரசியல் செயல்பாடுகளுக்காக சிறையில் அடைக்கப்படுபவர். அரசியல் செயல்பாடு கைதியை அடைத்து வைப்பதற்கான அதிகாரப்பூர்வ காரணமாக இருக்காது.
அரசியல் கைதி என்பதற்கு பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட சட்ட வரையறை எதுவும் இல்லை, இருப்பினும் பல்வேறு அமைப்புகள், அறிஞர்களால் பல வரையறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும் அறிஞர்களிடையே பொதுவான ஒருமித்த கருத்து உள்ளது அது, "சட்ட அமைப்புகளின் அங்கீகாரத்தோடு அரசியல் அதிகாரங்களால் தனிமனிதர்கள் சிறைவைக்கபடுகின்றனர், அவர்கள் குறியீட்டு சட்டங்களை மீறியதற்காக அல்லாமல், தற்போதுள்ள அதிகார உறவுகளை அடிப்படையில் மறுதலித்த அவர்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களுக்காக" என்பதாகும். [1] அரசியல் கைதி என்ற அந்தஸ்து தனிமனிதர்களுக்கு பொதுவாக அவர்கள் மீதான வழக்கின் அடிப்படையில் பன்னாட்டு மன்னிப்பு அவை போன்ற அரசு சார்பற்ற அமைப்புகளின் அறிவிப்புகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இத்தகைய அந்தஸ்து பெரும்பாலும் சர்வதேச மக்களால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டாலும், அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருக்கும் அரசாங்கங்களால் அவை பெரும்பாலும் நிராகரிக்கப்படுகின்றன, அவை அவற்றின் நீதித்துறை அமைப்புகளில் பக்கச் சார்பையும் மறுக்கின்றன. [1] [2]
இதோடு தொடர்புடைய ஒரு சொலாக மனசாட்சி கைதி (POC) உள்ளது, இது பன்னாட்டு மன்னிப்பு அவையால் (அம்னஸ்டி இன்டர்நேஷனல்) பிரபலப்படுத்தப்பட்டது. இச்சொல் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கைகள் காரணமாக சிறையில் அடைக்கபட்டவரைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.
அரசியல் சிறைச்சாலைகள் என்று அழைக்கப்படும் சில சிறைச்சாலைகள், அரசியல் கைதிகளை அடைத்து வைப்பதற்காக மட்டுமே வாடிக்கையாக கொண்டவை அல்லது வடிவமைக்கப்பட்டவை. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Greene, Helen Taylor; Gabbidon, Shaun L. (14 April 2009). "Political Prisoners". Encyclopedia of Race and Crime. SAGE Publications. pp. 636–639. ISBN 978-1-4522-6609-1.
- ↑ Steinert, Christoph Valentin (2021). "Who Is a Political Prisoner?". Journal of Global Security Studies 6 (3). doi:10.1093/jogss/ogaa052. பன்னாட்டுத் தர தொடர் எண்:2057-3170.
- ↑ Machcewicz, Anna (2018). "Political Prisoners in Poland, 1944–56: The Sources and Strategies of Resistance in the Authoritarian State's Prison System". Acta Poloniae Historica 118: 93–126. doi:10.12775/APH.2018.118.04. பன்னாட்டுத் தர தொடர் எண்:0001-6829.