உள்ளடக்கத்துக்குச் செல்

அரசினர் கீழ்த்திசை ஓலைச்சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் கீழ்த்திசை ஓலைச்சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 7வது தளத்தில், அரசினர் கீழ்த்திசை ஓலைச்சுவடியகம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்வதற்கான வழி (26வினாடிகள்)

அரசினர் கீழ்த்திசை ஓலைச்சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம் (Govt., Oriental Manuscripts Library And Research Center) என்பது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, இந்நூலகம், சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தது. காலின் மெக்கன்சி (1754-1821), லேடன் (Dr.LeYdan), சி.பி.பிரௌன் (Mr.C.P.Brown) ஆகிய மூவரின் தொகுப்புக்களே இந் நூலகம் உருவாவதற்கு ஆதாரமாகும்.[1] சென்னைப்பல்கலைக்கழக வளாகத்தில், இச்சுவடி நூலகத்திற்கு இடம் தரவேண்டும் என ஆணையிட்டு, ஒரு தொகையையும் ஒதுக்க, அப்போதைய ஆங்கில அரசு உத்தரவிட்டது. தற்போது, இந்நூலகம் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் கீழ் வருகிறது.

உலகிலேயே அதிகமான தமிழ்ச் சுவடிகள், இந்த நூலகத்தில்தான் உள்ளது. இங்கு, 26 லட்சம் ஓலைச்சுவடிகளை கொண்ட, 72,748 சுவடி கட்டுகளும், 25,373 ஆய்வு நூல்களும் உள்ளன.[2]

இந்நூலகம் ஆராய்ச்சிக் கருவூலமாகத் திகழ்வதைக் கருத்திற்கொண்டு முனைவர் சு. சௌந்தரபாண்டியனின் முயற்சியால் ’அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்’ என்று பெயர் மாற்றப்பட்டுத் தற்போது இப்பெயரிலேயே இது இயங்கிவருகிறது.

இம்மையத்தில் தற்போது தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பாரசீகம், அரபு, உருது, சிங்களம் ஆகிய மொழிகளிற் சுவடிகள் உள்ளன. சுவடிகளில் ஓலைச்சுவடிகளும் தாட் சுவடிகளும் அடங்கும். இம்மையத்தில் இலக்கியம், இலக்கணம், வரலாறு, தத்துவம், அறிவியல், வானியல் முதாலன பிரிவுகளைச் சேர்ந்த சுவடிகள் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திர மாநில வரலாறுகளைக் கூறும் கைபீதுகளும் (Kaifyats) இருக்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Government Oriental Manuscripts Library, CHENNAI". GOML. Retrieved 2 October 2025.
  2. "அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் - உலகின் முதல் இணைய சுவடிகள் நூலகம்!". கட்டுரை. கல்வி மலர். 1 பெப்ரவரி 2015. Retrieved 30 ஆகத்து 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]

இவற்றையும் காண்க

[தொகு]