அரசினர் கலை & அறிவியல் கல்லூரி, திருவாடானை
தோற்றம்
(அரசினர் கலைக் கல்லூரி, திருவாடானை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வகை | அரசுக் கல்லூரி |
|---|---|
| உருவாக்கம் | 2013 |
| சார்பு | அழகப்பா பல்கலைக்கழகம் |
| அமைவிடம் | , , |
| இணையதளம் | https://www.gactvd.in/index.html |
அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் செயற்பட்டுவரும் இருபாலாருக்கான தமிழக அரசின் கலை & அறிவியல் கல்லூரியாகும். 2013ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ஆறு அரசினர் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். அரசினர் கலைக் கல்லூரி, உத்திரமேரூர், அரசினர் கலைக் கல்லூரி, கடலாடி, அரசினர் கலைக் கல்லூரி, சிவகாசி, அரசினர் கலைக் கல்லூரி, கோவில்பட்டி, அரசினர் கலைக் கல்லூரி, கறம்பக்குடி ஆகியவை இதர ஐந்து கல்லூரிகளாகும்.[1]
அமைவிடம்
[தொகு]திருவாடானையில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இக்கல்லூரியில் 800 மானவ, மானவிகள் கலை மற்றும் அறிவியல் பாடங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மூலம் பயில்கின்றனர்.[2]
படிப்புகள்
[தொகு]இளநிலை படிப்புகள்
[தொகு]- தமிழ்
- ஆங்கிலம்
- கணிதம்
- கணிப்பொறி அறிவியல்
- வணிகவியல்
- காட்சி தொடர்பியல் (Visual Communication)
முதுநிலை படிப்புகள்
[தொகு]- தமிழ்
- கணிதம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்
- இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்