அரசினர் கலைக் கல்லூரி, கோயம்புத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரசினர் கலைக்கல்லூரி, கோயம்புத்தூர்
குறிக்கோளுரைSapere Aude
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Dare to be wise
வகைஇருபாலருக்கான அரசு தன்னாட்சிக் கல்லூரி
உருவாக்கம்1852; 168 ஆண்டுகளுக்கு முன்னர் (1852)
முதல்வர்முனைவர் K. சித்ரா M.Sc,M.Phil,Ph.D.,
அமைவிடம்கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
வளாகம்13.6 ஏக்கர்
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்[1]
இணையதளம்http://www.gacbe.ac.in/

அரசினர் கலைக் கல்லூரி, கோயம்புத்தூர் (Government Arts College, Coimbatore) தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நகரின் மையத்தில் 13.6 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள மிகத்தொன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாகும். தன்னாட்சித் தகுதி பெற்ற இக்கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக உள்ளது.[2]

வரலாறு[தொகு]

1852-ல் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கான பள்ளியாகத் (Anglo-Vernacular School) தொடங்கப்பெற்றது. பின்பு, நடுநிலைப் 1861-ல் இடைநிலைப் பள்ளியாக மாறியது. அதன் பிறகு, 1867-ல் அது ஒரு உயர் நிலைப் பள்ளியாகத் தரம் உயர்வு பெற்றது. தொடர்ந்து 1868 ஆம் ஆண்டு முதல் இளங்கலை படிப்பிற்கு முன்னதான துவக்கக்கலை [First of Arts ( F.A. )] வகுப்புகள் தொடங்கப்பட்டன. 1870ஆம் ஆண்டு இரண்டாம் நிலை கல்லூரியாக, சென்னை பல்கலைக்கழகம் அமைக்கப்படும் முன்னரே, உயர்த்தப்பட்டது. 1964ஆம் ஆண்டு முதல்நிலை முதுகலை கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டது.

பல்கலைக் கழக வகுப்புக்கள் 1869-ல் தொடங்கப்பெற்றன. இக்கல்லூரி 1870-ல் இரண்டாம் நிலைக் கல்லூரியாகத் தரம் உயர்வு பெற்றது. இப்படி, இக் கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம் தொடங்கப்படுவதற்கு வெகு முன்னரே ஆங்கிலேயர் காலத்திலேயே தொடங்கப்பெற்றது. இக்கல்லூரியின் மாணவர்கள் இந்திய விடுதலை இயக்கத்திலும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, 1964-ல் ஒரு முதல் நிலை முதுகலைக் கல்லூரியாக வளர்ச்சி பெற்றது.

துறைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Colleges affiliated to bharathiar university". Bharathiar University. பார்த்த நாள் March 26, 2012.
  2. "Colleges affiliated to bharathiar university". Bharathiar University. பார்த்த நாள் March 26, 2012.

வெளி இணைப்புக்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]